வியாழன், 9 ஏப்ரல், 2015

தேவதானப்பட்டியில் தென்னை மரங்கள் கருகின!




73raining-thevathanappatti 73raining-thevathanappatti02

தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை!

இடிவிழுந்து தென்னை மரங்கள் கருகின!

  தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அவதிப்பட்டனர். இந்நிலையில் கடந்தவாரம் மாலை 5.00 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. அதன் பின்னர் பயங்கரக் காற்று வீசியது. அக்காற்றால் ஆங்காங்கே உள்ள விளம்பரப் பதாகைகள், தற்காலிகப் பந்தல்கள், கோயில் விழாக்களுக்கு அமைக்கப்பட்ட பந்தல்கள் சாய்ந்தன.
  இந்நிலையில் பரசுராமபுரம் அருகே உள்ள தனியார் உணவு விடுதி அருகே தென்னை மரத்தின் மேல் இடிவிழுந்தது. இதனால் தென்னை மரம் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. இதே போல மஞ்சளாறு அணைப்பகுதியிலும் தென்னை மரத்தில் இடிதாக்கி கருகியது. கடுங் காற்று வீசியதால் விளம்பரப் பதாகைகள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது உரசி இடையூறு விளைவிக்கிறது.
  எனவே ஒப்புதலின்றி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளைப் பேரூராட்சி நிருவாகம் அப்புறப்படுத்தவேண்டும் எனவும் சாலையில் செல்பவர்கள் மீது பட்டு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் விளம்பரப் பதாகைகள் அமைத்தவர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
73vaigaianeesu


- அகரமுதல73: பங்குனி22, 2046/  ஏப்பிரல்05,2015

1 கருத்து:

  1. தேவதானப்பட்டி செய்திகளை தொடர்ந்து வெளியிடும் தங்களுக்கும், நிருபர் வைகை அனீசு அவர்களுக்கும் பாராட்டுக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு