கரும்புத்தொட்டில்

கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் கரும்பில் தொட்டில் கட்டும் விந்தையான பழக்கம் உள்ளது.
  மக்கட்பேறு இல்லை என்றால் நாட்டுப்புறத் தெய்வத்தினிடம் வேண்டிக்கொண்டு கோயிலுக்குச் சென்று தொட்டில் கட்டி வருவது வழக்கம். இப்பகுதியில் உள்ள அம்மன்கோயில், மதுரைவீரன், கருப்பராயன் போன்ற கோயில்களில் தொட்டில் கட்டுதல் போற்றுதலுக்குரிய வழிபாடாகக் கருதப்படுகிறது.
  தொட்டில் கட்டுதல் என்பது வெள்ளைத்துணியில் மஞ்சள் தடவி, கல்லை உள்ளே வைத்துக் கோயிலில் உள்ள வேம்பு மற்றும் அரச மரத்தின் கிளையில் குழந்தைப்பேறு வேண்டிக் கட்டுதலாகும்.
  குழந்தைப்பேறு கிடைத்தவுடன் கோயிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். மேலும் அங்கே அந்த குழந்தைக்கு முதலில் முடி எடுப்பது என்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
  அவ்வகையில் தேவதானப்பட்டி காமாட்சியம்மன்கோயிலில் மக்கள் பேறு இல்லாதவர்கள் வேண்டிக்கொண்டு குழந்தை பிறந்தவுடன் கரும்புக் கட்டை வாங்கி ஒரு சேலையில் தொட்டில் போல் கட்டி குழந்தையை அதில் படுக்கவைத்து கோயிலைச் சுற்றி அதன் பின்னர் பிறந்த முடியை எடுக்கின்ற விந்தைப் பழக்கம் இன்று வரை நடைமுறையில் உள்ளது.
67vaigaianeesu-name