பேராசிரியர் இரா.இளவரசு அவர்களின்
நினைவேந்தல் நிகழ்ச்சி தென்மொழி இயக்கம் சார்பில் சென்னை மேடவாக்கம்
பாவலரேறு தமிழ்க் களத்தில் தி.பி.2046 கும்பம் 10 ஞாயிறு (22-02-2015)அன்று
மாலை 3.00 மணியளவில் நடைபெற்றது.
முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் பேராசிரியர் பொற்கோ மறைந்த இளவரசு அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
பேராசிரியர் அரசேந்திரன், முனைவர்
இரா .கு.ஆல்துரை, முனைவர் அரணமுறுவல், திருவினர் கி. குணத்தொகையன்,
அன்புவாணன் வெற்றிச்செல்வி, வைகறைவாணன், இரா.செம்மல், வழக்கறிஞர்
பாவேந்தன், தமிழ் மண் பதிப்பகம் கோ.இளவழகன் ஆகியோரும் திருவாட்டியர்
இறை.பொற்கொடி, தழல் தேன்மொழி, மரு. அன்பு (பேரா.இளவரசு அவர்களின் மகள்)
ஆகியோரும் மறைந்த இளவரசு அவர்களின் தமிழ்த் தொண்டைப் பற்றியும் பண்பு
நலன்கள் பற்றியும் விரிவாகப் பேசி நினைவு கூர்ந்தனர்.
இறுதியாக முனைவர் பொன்னவைக்கோ தம் தலைமையுரையை ஆற்றி நிறைவு செய்தார்.
திரு.அழ. இளமுருகன் நன்றியுரை
ஆற்றினார். நினைவேந்தல் நிகழ்ச்சியில் மறைந்த இளவரசு அவர்களின்
குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.
- தரவு : இரா.செம்மல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக