தேவதானப்பட்டிப் பகுதியில் நீரின்றி வாடும் நெற்பயிர்கள்
தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி,
மருகால்பட்டி, இரெங்கநாதபுரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில்
அறுவடை நேரத்தில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகிவருகின்றன.
தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதிக்குச் செல்கின்ற 13ஆவது
மடையிலிருந்து 18 வரை மஞ்சளாறு அணை திறக்கப்பட்டபோது தண்ணீர் செல்லவில்லை.
இதற்குக் காரணம் இப்பகுதியில் புறவழிச்சாலை பணிநடந்து கொண்டிருந்தது.
அப்போது புறவழிச்சாலைக்கு பணிநடப்பதால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில்
மண், மணல், கற்கள் அடைத்துத் தண்ணீர் செல்லாமல் நின்றுவிட்டது.
தண்ணீர் வரும் என நினைத்து உழவர்கள்
நீண்ட காலப்பயிர்களான கரும்பு, நெல் போன்றவற்றையும் குறுகிய காலப்பயிர்களான
தக்காளி, நெல், அவரை, மொச்சைக்காய் போன்றவற்றையும் பயிரிட்டனர்.
இந்நிலையில் அறுவடைக்கு ஆயத்த நிலையில் இருந்த நெற்கதிர்களுக்குப் போதிய
தண்ணீர் கிடைக்காமையால் அவை காய்நது வருகின்றன.
ஏற்கெனவே கடந்த 3 ஆண்டுகளாகப் பருவமழை
பொய்த்துப் போனதால் இப்பகுதியில் உள்ள நிலங்கள் எல்லாம் தரிசாக இருந்தன.
இந்த வருடமாவது பயிர்த்தொழில் செய்து வாங்கிய கடனை அடைக்கலாம் என உழவர்கள்
நினைக்கையில் கால்வாயில் தண்ணீர் வராததால் அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த
நெற்பயிர்கள் கருகி, உழவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக