தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து
தென்மார்க்கில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக
மாலதி தமிழ்க்கலைகூடம் தமிழ் மொழியைக் கற்பித்துவருகிறது. வழமைபோன்று
இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆண்டுதோறும்
நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழிக்கான புலன்மொழி வளத்தேர்வு 01-06-2014
அன்றும் எழுத்துத் தேர்வு 07-06-2014 அன்றும் தென்மார்க்கின் பல பகுதிகளிள்
நடைபெற்றது.
இத்தேர்வு தென்மார்க்கிலுள்ள 16
தேர்வுநிலையங்களில் நடைபெற்றது. இத்தமிழ்மொழித் தேர்வுக்கு 900 மேற்பட்ட
மாணவர்கள் தோற்றினார்கள். இவர்கள் யாவரும் மிகவும் ஆர்வமாகவும்
மகிழ்ச்சியுடனும் இத்தேர்வை எழுதினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக