புதன், 11 ஜூன், 2014

இன்றைய(11.06.14) எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நான்







இன்றைய(11.06.14) எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நான்

வைகாசி 28,2045 / 11.06.14 ஆம் நாளாகிய இன்று இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை வாகைத்தொலைக்காட்சியாகிய 'வின் டிவி' என்னும் தொலைக்காட்சியில் எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும் எதிரும் புதிரும் நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கின்றேன். தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழைப் பாட மொழியாக வைக்கக் கூடாது என்று கூறும் பாரதமாதா மோகன் என்பவருடன் இணைந்து கருத்துரை வழங்க உள்ளேன். 



‘’தமிழ் நாட்டில்  தமிழ் வேண்டா என்பவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’’
என்று நேற்று இதே தொலைக்காட்சியில் 'உங்கள் களம்' நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த நான், இன்றும் இதை வலியுறுத்த உள்ளேன்.
வின் தொலைக்காட்சியில் இன்று இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை நேரலையாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இணையத்தளத்திலும்  என்னும் http://wintvindia.com/  வலைவரியில் காணலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/  எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக