ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

எண்மப்படக்கலையின் அரிச்சுவடி- உதயகுமார்

எண்மப்படக்கலையின் அரிச்சுவடி சொல்லித்தருகிறார் உதயகுமார்

திருச்சி மாவட்டத்தை  ச் சேர்ந்தவர்  செ.உதயகுமார்.
பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கு பள்ளி பருவத்தில் இருந்தே கேமிரா மீது கவனம் செசன்றது, அது நாளாக நாளாக வளர்ந்து கொண்டே போனது. இவருக்குள் இருந்து புகைப்பட விதைக்கு நீருற்றி வளர்த்தவர்களில் முக்கியமானவர் இவரது உறவினரும், பேராசிரியருமான பாலுசாமியாவார்.


கல்லூரி பருவத்தை முடித்ததும் அடுத்து என்ன? செய்வது என்ற கேள்வி எழுந்த போது," நான் இருக்கிறேன்' என்று கேமிரா சொல்ல அன்று முதல் தொழிற்முறை போட்டோகிராபரானார்.
வருமானத்திற்காக எடுக்கப்படும் திருமண படங்களில் திருப்தி வராததால் சென்னை சென்று அங்கு பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து தனது புகைப்பட அனுபவத்தை பெருக்கிக் கொண்டார்.


இவரது புகைப்படத்தின் நுட்பத்தை பார்த்து சினிமா துறையில் இருந்தும் அழைப்பு வர அங்கும் சில காலம் பணியாற்றினார்.
இப்படி புகைப்படத்தின் பல்வேறு தளத்தில் பணிபுரிந்த இவரை கல்வி நிலையங்களில் புகைப்படம் தொடர்பான பயிற்சி வகுப்பு எடுக்க அழைத்தனர். மேலும் புகைப்படம் தொடர்பான பயிற்சி பட்டறை நடத்தவும் நிறைய அழைப்பு வந்தது. அந்த அழைப்புகளை ஏற்று பயிற்சி வகுப்புகளை அன்று முதல் இன்று வரை நடத்திவருகிறார்.


பயிற்சி வகுப்பு நடத்த தயரானபோதுதான் தமிழில் எளிமையாக இன்றைய டிஜிட்டல் கேமிரா பற்றி அதிகம் எழுதப்படவில்லை என்பதை உணர்ந்தார், ஏன் நாமே எழுதக்கூடாது என்று எண்ணியபோது திண்டுக்கல் தமிழன் கலைக்கூடம் ராஜராஜன் இவருக்கு உதவிட முன்வர "டிஜிட்டல் போட்டோகிராபியின் அரிச்சுவடி 'என்ற புத்தகம் உருவானது. புத்தகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது..
புத்தகம் தொடர்பாகவோ அல்லது புகைப்பட பயிற்சி தொடர்பாகவோ இவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9488574381.


- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக