ஞாயிறு, 17 மார்ச், 2013

துணிவு தேவை!


http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_66845220130316221529.jpg


தைரியம் தேவை!

"லாஜிஸ்டிக்ஸ்' துறையில், ஒரு பெண்ணாலும் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்த, உஷா சங்கரன்:

என் சொந்த ஊர் சென்னை. இங்கே கல்லூரிப் படிப்பை முடித்து, பெங்களூரின், "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டில்' எம்.பி.ஏ., படித்தேன். பின், இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்தேன்.அங்கு சுயமாக சிந்தித்து செயல்பட, என்னால் முடியவில்லை. சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பணி செய்ய வந்த எனக்கு, இது பெருத்த ஏமாற்றம். வேலையிலிருந்து விலகி, புதிதாக கன்சல்டன்சி ஆரம்பித்தேன். அது நன்றாகச் செயல்பட்டாலும், என் தேடல் முடியவில்லை.காற்றாலை மின்சாரத் துறையில் முன் அனுபவம் இருந்ததால், "லாஜிஸ்டிக்ஸ்' எனும், பெயர்ச்சியியல் தொடர்பான வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.பெரிய அளவிலான பொருட்களை, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்; அது வெளிநாடாகவும் இருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு முன், இத்துறை சார்ந்த பல நிறுவனங்கள் கூட்டிய ஒரு பெரிய கூட்டத்தில், நான் மட்டுமே பெண்ணாக இருந்தேன்.

அந்த காலத்தில் ஒரு பெண்ணாக அவர்கள் முன் தைரியத்தோடு கூட்டத்தில் பங்கேற்றதை, பல ஆண்களின் மனம் ஏற்கவில்லை என்பதை, நான் புரிந்து கொண்டேன்.காற்றாலை மின்சாரத்திற்கு, மிகப் பெரிய இறக்கைகள் தேவைப்பட்டன. இந்த இறக்கைகள் ஒவ்வொன்றும், 20 மீட்டரில் இருந்து, 50 மீ., நீளம் வரை இருக்கும். காற்றாலை அமைக்கும் இடங்களைப் பார்த்தால், குக்கிராமம், காடுகள், மலைப் பிரதேசம், வயல்வெளிகள் என, சாலை வசதியே இல்லாத இடங்களுக்கு, 50 மீ., நீளமுள்ள இறக்கைகளை, கொண்டு செல்ல வேண்டும். இது மிகவும் கஷ்டம் மற்றும் சவாலான வேலை. இருந்தாலும், தைரியத்தோடு செய்தேன்.சென்னை மெட்ரோ ரயிலுக்கு தேவையான, மிகப் பெரிய சீன, "டன்னல் போரிங்' இயந்திரங்களை, பணி செய்யும் இடங்களுக்கு சரியாக எடுத்து வந்து, பெண்களாலும் முடியும் என்பதை நிரூபித்தேன். தற்போது, தென்மண்டல இயக்குனராக பணியாற்றுகிறேன். இன்று பல பெண்கள், இத்துறையில், பெரிய பொறுப்புகளில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக