காவல் உதவிக்குத் தொலை பேசி யில் அழைத்து அம்மாவை க் காப்பாற்றிய குழந்தை
எடின்பர்க்: அவசர போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, தாயின் உயிரை
காப்பாற்றிய, இரண்டு வயது குழந்தைக்கு, ஸ்காட்லாந்து போலீசார் விருது
வழங்கியுள்ளனர். ஸ்காட்லாந்தின், மெல்ரோஸ் பகுதியில் வசிக்கும்,
ராபர்ட்-பிரான்சிஸ்கா தம்பதியின், இரண்டு வயது மகள் ரோவன் ரைச்சல்.
கடந்த, 2011ல், வீட்டில், மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த பிரான்சிஸ்கா, சோபாவில் இருந்து வேகமாக எழுந்த போது, மயக்கம் ஏற்பட்டு, தரையில் விழுந்தார். உடனே ரைச்சல், அவசர போலீஸ் எண், 999க்கு போன் செய்து, "என் தாய் தூங்கிவிட்டார்; கண் விழிக்கவில்லை' என, கூறினாள். ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பதை யூகித்த போலீசார், அழைப்பு வந்த எண்ணின் முகவரியை கண்டுபிடித்து, பிரான்சிஸ்காவின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு அவர் மயக்கமடைந்த நிலையில், தரையில் கிடப்பதை கண்டதும், மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின், மறுநாள் அவர் வீடு திரும்பினார்.
புத்திசாலித்தனத்தால், தாயின் உயிரை காப்பாற்றிய குழந்தைக்கு, ஸ்காட்லாந்தின், "லோதியான் அண்டு பார்டர்ஸ்' போலீசார், கடந்த, 21ம் தேதி, விருது வழங்கி கவுரவித்தனர். ""விளையாட்டாக, 999 என்ற எண்ணுக்கு, ரைச்சல் டயல் செய்வது வழக்கம். அப்படி செய்தால், போலீஸ் வந்து விடும் என, அவளை செல்லமாக கண்டித்தேன். அதை நினைவில் வைத்திருந்து, ஆபத்து சமயத்தில், என் உயிரை காப்பாற்றி விட்டாள்,'' என, பிரான்சிஸ்கா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக