திங்கள், 25 பிப்ரவரி, 2013

தூக்கிலிடக் கூடாது: தண்டனை விதித்த நீதிபதி எதிர்ப்பு

இராசீவு கொலையாளிகளை த் தூக்கிலிடக் கூடாது: தண்டனை விதித்த நீதிபதி எதிர்ப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும், அத்தண்டனையை நிறைவேற்றக் கூடாது. அவ்வாறு நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. இந்த அமர்வுக்கு தலைமை வகித்தவர் நீதிபதி கே.டி. தாமஸ்.நீண்ட காலத்துக்குப் பின், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:
ராஜிவ் கொலை வழக்கில், 22 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள அவர்களின் வழக்கை மறு ஆய்வு செய்யாமல் தூக்கிலிடுவது, அரசமைப்பு சட்டத்தின்படி சரியானதல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் இயல்பு, நடத்தை ஆகியவற்றை நாம் பரிசீலிக்கவில்லை. ஆகவே, அரசமைப்புச் சட்டம் 22ஆவது பிரிவின் படி தூக்குதண்டனை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.மிகத் தாமதமாக அவர்களுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது அரசமைப்புச் சட்டத்தின்படி சரியானதல்ல.குற்றவாளியின் தனிப்பட்ட நடத்தையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்  என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக