சனி, 29 டிசம்பர், 2012

பருத்தியால்கிடைக்கும்வருமானம்!

சொல்கிறார்கள்

பருத்தியால்கிடைக்கும்வருமானம்!

வேளாண் விஞ்ஞானி, பாமயன்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி என்ற ஊர், மழை காணாத மானாவாரி நிலங்கள் நிறைந்த பகுதி. இந்த நிலங்கள், தண்ணீர் தேங்காத, மண் வளம் மிக்க, நெய்க் கரிசல் மண் கொண்டவை. இங்கு பருத்தி நன்கு விளையும். பூச்சித் தாக்குதலுக்கு பயந்தும், வருமானக் குறைபாடு காரணமாகவும், இவ்வூர் மக்கள், மக்காச்சோளம் பயிரிடத் துவங்கி விட்டனர்.பருத்தியை, எந்த விதத்தில் மதிப்புக் கூட்டலாம் என, யோசித்த போது, இத்தாலியைச் சேர்ந்த நெசவாளர், அலெக்சாண்ட்ரா என்பவர், பருத்தியை, சட்டையாக மாற்றும் ஐடியாவைக் கொடுத்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், சோதனை முயற்சியாக, ரசாயன உரங்கள் எதையும் பயன்படுத்தாமல், பருத்தியை விளைவித்து, இயற்கை சட்டைகளை உருவாக்கினோம்."டெக்ஸ்டைல் பிரம் யுனைடெட் குரூப் இனிஷியேட்டிவ் பார் லேண்டட் குரூம்' என்பதைச் சுருக்கி, "துகில்' என, இதற்குப் பெயரிட்டோம்.
பருத்தி நூலை, கைத்தறி மூலம் துணியாக நெய்து, இயற்கை சாயங்களால் வண்ணம் பூசித் தயாராவது தான், துகில் சட்டைகள். இதன், பித்தான்கள் கூட, பிளாஸ்டிக்கால் செய்யப்படாமல், தேங்காய் கொட்டங்கச்சியால் ஆனது என்பது, சிறப்பு.

கடுக்காய், அவரி, மஞ்சிஷ்டம், வேம்பாளம் பட்டை, வெல்லம் போன்ற, 20 வகை இயற்கைப் பொருட்களால், சாயம் தயாரித்து, அதைத் தான், துகில் துணிக்கு ஏற்றுகிறோம்.
தற்போது, ஒரு துகில் சட்டையின் விலை, 600 ரூபாய். இயற்கை சாயம் இல்லாத, வெள்ளைச் சட்டைகள், 500 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், இயற்கைத் துணி ஏற்றது என்பதால், அவர்களுக்கான ஆடைகளை நெய்வதில் இறங்கி உள்ளோம். பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடிந்தால், விலை இன்னும் குறையலாம்.
எங்கள் நோக்கம், மானாவாரி விவசாயிகளைக் காப்பதே. 10 மானாவாரி விவசாயிகள் ஒன்று சேர்ந்து இது போல் முயற்சி எடுத்தால், அவர்களின் உடல் நலம் மட்டுமின்றி, அவர்கள்
வாழ்வும் முன்னேறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக