செவ்வாய், 25 டிசம்பர், 2012

பேரளவு விண்கல்லை, எரிபொருள் நிலையமாக்க நாசா திட்டம்

பன்னாட்டு  விண்வெளி ஆய்வு க் கூடத்துக்கு  பேரளவு  விண்கல்லை, எரிபொருள் நிலையமாக்க நாசா திட்டம்
சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு ராட்சத விண்கல்லை, எரிபொருள் நிலையமாக்க நாசா திட்டம்
லண்டன், டிச 25-
 
ராட்சத விண்கல்லை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு எரிபொருள் நிலையமாக்க நாசா திட்டமிட்டுள்ளது.
 
அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, இன்னும் 10 ஆண்டுகளுக்கு செலவு செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
 
செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் வழியில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் எரிபொருள் நிரப்பி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
 
அதற்கான எரிபொருள் நிலையம் அமைக்க 5 லட்சம் கிலோ எடையுள்ள விண்கல் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விண்ணில் சுற்றி திரியும் அந்த விண்கல் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் தூக்கி செல்லப்பட உள்ளது.
 
அட்லஸ் 5 ராக்கெட்டுடன் விண்கல்லை பிடிக்க கூடிய பெரிய கூண்டு ஒன்றும் சேர்த்து அனுப்பப்படுகிறது. அது விண்கல்லை பிடித்து அப்படியே இழுத்து சென்று சர்வதேச விண்வெளி மையம் அருகே நிலை நிறுத்தும்.
 
இதற்கான திட்டம் நாசா மற்றும் கலிபோர்னியா அறிவியல் தொழில் நுட்ப மையம் ஆகியவற்றின் மூலம் தீட்டப்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் இதை நிறைவேற்ற முடியும் என நாசா மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வா கத்துடன் நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக