வியாழன், 22 நவம்பர், 2012

உயர வைத்த மிதியடித் தொழில்

சொல்கிறார்கள்...

உயர வைத்த மிதியடி தொழில்!'

மிதியடி தொழிலில் ஈடுபட்டுள்ள ஹேமமாலினி: என் சொந்த ஊர் திருச்சி. என்னுடன் சேர்த்து, வீட்டில் மொத்தம் எட்டு பேர். என் சிறுவயதிலேயே பெற்றோர் இறந்து விட்டனர். உடன் பிறந்தவர்கள் தான், என்னை வளர்த்து, பிளஸ் 2 வரை படிக்க வைத்து, திருமணமும் முடித்தனர்.என் கணவர் பிசினஸ் செய்கிறார். இரண்டு குழந்தைகளும் வளர வளர, வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏதாவது தொழில் செய்யலாம் என்று தோன்றியது. ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை.என் தம்பி தான், மிதியடி தொழிலைப் பற்றி கூறினான். "ரிஸ்க்' எடுக்காதே...' என்று, கணவர் தயங்கினாலும், என் ஆர்வமும், தன்னம்பிக்கையும் அவரை சம்மதிக்க வைத்தது.ஏற்கனவே, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்த எனக்கு, அங்கு கிடைத்த வெளி அனுபவங்கள், தொழில் துவங்க உதவியாக இருந்தது. தமிழக மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம், தொழில் சம்பந்தமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டேன்.நான் தயாரித்த மிதியடிகள், நல்ல விலைக்கு போகிறது. என் வெற்றியைப் பார்த்து, சுய உதவிக் குழுப் பெண்களும் செய்ய முன்வந்தனர். 24 பெண்களுக்கு, நானே பயிற்சி அளித்தேன்.ஆரம்பத்தில், 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், ஒரு மிஷின் வாங்கினேன். திருப்பூர் பனியன் கம்பெனிகளின், "வேஸ்ட்' துணிகளை, ஒரு கிலோ, 25 ரூபாய் என, 1,000 கிலோ வாங்கி வந்தேன். குறைந்த பட்சம் ஒரு மணி நேரத்திற்கு நான்கு மேட் வீதம், ஒரு நாளுக்கு, 30 மிதியடி நெய்யலாம். 16 செ.மீ., அகலம், 29 செ.மீ., நீளம் கொண்ட ஒரு மேட், 25 ரூபாய் விலை போகும்.வீட்டு உபயோகப் பொருள் என்பதால், விற்பனை நன்றாகவே உள்ளது. உற்பத்தியையும், ஆர்டர்களையும் விரிவுபடுத்தியுள்ளேன். எல்லா செலவும் போக, மாதம், 10 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக