செவ்வாய், 20 நவம்பர், 2012

புதைந்திருந்த கற்சிலைகள் கண்டெடுப்பு

புதைந்திருந்த சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு

First Published : 20 November 2012 02:46 AM IST
பேர்ணாம்பட்டு அருகே கோயில் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது, சுவாமி கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
பேர்ணாம்பட்டு அடுத்த பெரியதாமல்செருவு கிராமத்தில் பழமைவாய்ந்த ஓம்தாஸ்ஈஸ்வரர் கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதன் ஒரு பகுதியில் இருந்த பீடத்தில் அக்கிராம மக்கள் லிங்கத்தை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் கோயில் இருந்த இடம் பூமிக்குள் புதைந்து போனதாம்.
இதையடுத்து அக்கிராம மக்கள் கோயிலை புனரமைக்க முடிவெடுத்து திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரத்தால் அஸ்திவாரம் தோண்டியுள்ளனர்.
அப்போது அங்கு அழகிய சிற்ப வேலைகளுடன் கூடிய அம்மன் கற்சிலைகள், ஒரு லிங்கம், 2 சங்குகள் உள்ளிட்ட பல பொருள்களும், கி.பி. 1246 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைத்தன. கோயிலில் இருந்து கால்வாய் போன்ற அமைப்பு அதையொட்டியுள்ள தனியார் நிலம் வரை செல்கிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் டி. ரவீந்திரன், வருவாய் ஆய்வாளர் ரமாநந்தினி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
 மாவட்ட ஆட்சியரிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டுச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக