திங்கள், 12 ஜூலை, 2010

அதிமுக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஜெயலலிதா என்ன செய்தார்?: கருணாநிதி கேள்வி
First Published : 11 Jul 2010 02:39:16 AM IST
++++++++++++++++++++++++++++++
அ.தி.மு.க. செய்யவி்ல்லை; ஒன்றும் செய்யாது என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், தி.மு.க. செய்யும் ;அதன் தலைவர் தமிழினக் காவலர் என மக்கள் நம்புகிறார்களே! அப்படி நம்புகின்றவர்களுக்காகவாவது எதுவும் செய்ய் வேண்டாமா? வங்கதேசம் உருவாகும் முன்னர் கிழக்குப் பாகிசுதானில் வங்க மக்கள் துயருற்ற பொழுது வங்க முதல்வர் மத்திய அரசிற்கு மடலா எழுதிக் கொண்டிருந்தார். மத்திய அரசு வங்க மக்களுக்கு உதவாவிட்டால் வங்க மாநிலமே நேரடியாகக் காவல்துறையை அனுப்பி ஆவன செய்யும் என எச்சரிக்கை விட்டார் அல்லவா? மத்திய அரசு அதற்குப் பணிந்தது அலலவா? தமிழ்நாட்டு முசிபூர் இரகுமானிடம் அவ்வாறு எதிர்பார்ப்பதது தவறா? தமிழர் நலனில் கருத்து செலுத்தாத அரசு இருநதாலென்ன? இல்லாதொழிந்தால் என்ன? என்று மக்களை எண்ணச் செய்யும் பாதைக்கு முதல்வரே தள்ளிவிடலாமா? மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலாவது தி.மு.க. அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி மத்திய அரசை நல்வழிப்படுத்தலாம் அல்லவா? அவ்வாறெல்லாம் செய்ய முடியும்;ஆனாலும் முடியாது என்ற போக்கு சரிதானா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2010 3:33:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக