செவ்வாய், 13 ஜூலை, 2010


சிறந்த திட்டங்களை நிறைவேற்ற மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி தேவை: ப.சிதம்பரம்


திருப்பூரில் திங்கள்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபா
திருப்பூர், ஜூலை 12: மத்தியில் அமல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி தேவை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:1996-க்கு பிறகு 2004 வரையிலான 8 ஆண்டுகளில் மாறி மாறி ஆட்சி புரிந்த அரசுகள் அமல்படுத்திய திட்டங்கள் ஏதும் நிலைத்து நிற்கக் கூடியதாக இல்லை.அத்தகைய அரசுகளால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும், மதக் கலவரங்களுமே அதிகரித்தன. அதனால், 2004 தேர்தலில் நாடு திருப்பத்தை எதிர்பார்த்தது. அந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர தமிழகம் முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகத்தில் 40 இடங்களிலும் வெற்றி கிடைத்ததாலேயே அது சாத்தியமானது. அதற்கு துணை நின்ற திமுக, மார்க்சிஸ்ட், பாமக, மதிமுக கட்சிகளையும் மறக்க முடியாது.கடந்த 6 ஆண்டுகளில் பல சாதனைகளை காங்கிரஸ் அரசு செய்துள்ளது. நாடு முழுவதும் 4 கோடி விவசாயிகளின் ரூ.67 ஆயிரம் கோடி கடன் ரத்து, கல்விக் கடன் திட்டத்தின் கீழ் 19.41 லட்சம் மாணவர்களுக்கு ரூ.35,196 கோடி கடன் வழங்கியது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அரசு என்பது வாய்ப்பு. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பான திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் சிந்திக்கிறது. அந்தவகையில், வேலைக்கு உறுதி, கல்வி பெறுவதற்கு உறுதி அளித்துள்ள காங்கிரஸ் அரசு விரைவில் உணவுக்கும் உறுதி தரும் திட்டத்தை செயல்படுத்தும்.மாதம் 25 கிலோ அரசி ரூ.3-க்கு கிடைக்கும் வகையில் அத்திட்டம் நிறைவேற்றப்படும்.இவ்வாறான சிறந்த திட்டங்களை செயல்படுத்த மத்தியில் மட்டுமின்றி மாநிலங்களிலும் ஆட்சி வேண்டும். அப்போதுதான், மத்தியில் அமல்படுத்தும் திட்டங்களை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும். தற்போது நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளதென்று கூறுவதை ஏற்க முடியாது. எல்லா நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளதால் இந்தியாவிலும் உயர்கிறது.விவசாயிகளுக்கு அரிசி, கரும்பு, கோதுமை, பால் உள்ளிட்டவற்றுக்கு அரசு கூடுதல் கொள்முதல் விலை கொடுக்கிறது. இதைத் தவிர்க்க முடியாது.அதேபோல, கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பது அரபு நாடுகள். இவற்றின் விலை உயரும் போதும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

11.தேசிய மொழிகளின் நலன்களைப் புதைத்து இந்திப் புதரையும் சமசுகிருதப் புதரையும் அங்கு வளர்த்தல். இப்படிபல திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த மாநிலத்திலும் ஆட்சி தேவை என்கிறார் போலும்.ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2010 4:06:00 PM
எந்த மாதிரித் திட்டங்கள் எனத் தெளிவாகக் கூறவேண்டிய தேவையில்லை. 1. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 26 நாடுகளில் மொத்தம் வறுமைக்கோட்டின் கீழே உள்ளவர்கள் 41 கோடி.ஆனால் இந்தியா என்னும் ஒரு நாட்டில் மட்டும் 42 கோடி பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளனர். 2. அரசியலில் பண பேரம். 3. எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! என்பதே அரச முழக்கம். 4. ஆட்சியைக் கவிழ்ப்பதில் முன்னோடி. 5. குடும்ப அரசியலை ஊக்கப்படுத்துவதில் முன்னோடி. 6.பண வீக்கத்தில் வழிகாட்டுவதிலும் பண மதிப்பைக் குறைப்பதிலும் தலைமை.7. வட பகுதி நிலத்தை அயல்நாட்டிடம் பறி கொடுத்து அது போதாது என்று தெற்கிலும் பறிகொடுக்கும் வகையில் வெறியுறவுக் கொள்கை. 8. அடுத்த நாட்டின் மக்கள் தொகையைக் கொத்துக் கொத்தாகவும் அடியோடும் ஒழிப்பதற்கு உதவுதல்.9. அடுத்த நாட்டு இறையாண்மை பற்றிக் கவலைப்பட்டு நம் நாட்டு ஒருமைப்பாடு பற்றி எண்ணாமை. 10. மலைவாழ மக்கள் நலனுககாகவும் ஈழ மக்கள் நலனுக்காக வும் வேலைவாய்ப்பு, தொழில் வளத்தைப் பெருக்கி விலைவாசியைக் குறைப்பதற்காகவும் தாள் வழித்திட்டங்கள் தீட்டல். இப்படிபல திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த மாநிலத்திலும் ஆட்சி தேவை என்கிறார் ப
By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2010 4:03:00 PM
you no need to worry for price increase.....because of you never stand in ration...... as a good person you have to admit mistake...particular on-line trade.....
By pamaran
7/13/2010 3:50:00 PM
Congress party is the fountainhead of corruption in India. It started buying votes using the ill-gotten wealth of Motilal to make Jawaharlal its president. Then came all sorts of mis-managements, be it the Sino-Indian war or the Kashmir debacle or the Naga movement or the Kalistani movement. All economic indices show that the highest growth had always been during non-congress rule, even though those fellows were always bickering. Recently, the worst economic policies have been followed by Manmohan Sing, ably supported by Chidambaram Chettiar. Why is it this government can not ask for the list of depositors who have more than SEVEN LAKH CRORES in Swiss Banks? The government of switzerland is willing to give provided India asks for it. Why we are not asking?
By sbala
7/13/2010 12:40:00 PM
AMMAYAR VALHA!BJP VALHA!
By SANEESWARUN
7/13/2010 11:11:00 AM
I agree with Mr.Karthik, BJP is my choice for LOK sabha election. BJP has good line of seniors. I trust on their Patriotism.
By Vijay
7/13/2010 11:06:00 AM
So, so far you didn't bring any good scheme to tamilnadu, since there is no congress govt. it's a type of bargain to get vote for bargain. i wish the congress and any party which allign with congress should lose deposits in all places. let god help us in the next election.
By ismail
7/13/2010 10:22:00 AM
So, so far you didn't bring any good scheme to tamilnadu, since there is no congress govt. it's a type of bargain to get vote for bargain. i wish the congress and any party which allign with congress should lose deposits in all places. let god help us in the next election.
By ismail
7/13/2010 10:22:00 AM
A recent report says that the number of poor in India far exceeds some of the countries in South Africa. If congress rules another 4 years, India may become another Somalia. No doubt, the Harward educated Chidambaram, besides Mr.Manmohan Singh and most of his Ministers are the basic reason for the acute poverty in India. It is a pity that these educated men do not have even traces of humanity left in them.
By karunakaran
7/13/2010 10:15:00 AM
They can able to give rice for Rs 3/- (actual cost of rice is more than Rs.30/-). But they are telling, Oil companies are running in loss after selling Petrol for Rs 58 (actual petrol price is Rs 26)
By Rj
7/13/2010 9:46:00 AM
we need a government which hve backbone.
By gopinath
7/13/2010 8:50:00 AM
good Jock DMK little bit ok but ??????? come means all Tamilan must want die same as like Sri lanka
By thamem
7/13/2010 7:17:00 AM
Congress down down !!!! We know how ur government is cheating people and havent acheived anything in 6 years.... Please go away ... u ppl have ruined india for more than 60 years.... BJP have did many good things in their 5 years tenure.... like Bokran nuclear reactor test, Golden quadilateral schemes all over india, strict actions over terrorism, brought lot of Foreign investments which led to IT boom which is continuing even now etc.... Congress only brought poverty, no action towards terrorism, Inflation , Price hikes....
By karthik
7/13/2010 6:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக