ஞாயிறு, 13 ஜூன், 2010

விரிவான செய்தி
 
தமிழர்களை நினைவுகூரும் முத்திரை அமெரிக்காவில் வெளியீடு

12 June, 2010 by admin

அமெரிக்க மக்கள் தமது சொந்த முத்திரைகளை வடிவமைத்து அவற்றைச் சந்தைப்படுத்தலாம் என அமெரிக்க அஞ்சல் சேவை அண்மையில் தீர்மானித்ததை அடுத்து, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட அழிவுகளை நினைவுகூரும் முத்திரைகளை வெளியிடுகிறது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தைச் சாதகமாகப் பயன்படுத்துவதற்கு தாம் முடிவுசெய்தே இந்த முத்திரையை வெளியிடுவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு பேரழிவை நினைவு கூருவதற்காக தேசிய முத்திரையை ஒரு நிறுவனம் பயன்படுத்துவது இதுவே முதல்முறை எனத் தெரிவித்த அவர், தமிழர்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதை முத்திரையில் வெளியிட்டு தமிழர்களின் கடுந்துயர் பற்றிய தகவல்களை சாதாரண அமெரிக்க மக்களுக்குத் தெரியப்படுத்துவதே தமது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த முத்திரைகளை அச்சடித்து வெளியிட முன்னர் அமெரிக்க அஞ்சல் சேவை இதை முதலில் அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் பேச்சாளர் குறிப்பிட்டார். மேலும் இதுபோன்று தமிழர் படுந்துன்பங்களை அச்சடித்து வெளியிடக்கூடிய வசதியுள்ள நாட்டில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முத்திரைகள் வெகுவிரைவில் ஒபாமாவுக்கான தமிழர் வலைத்தளத்தில் வெளிவரவுள்ளது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 4008





தொடக்கப் பக்கம் செல்ல



விளம்பரங்கள


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக