ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டதால், தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்திவிட்டு, பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்து மீண்டும் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் கடற்படையினர் தாக்குதலை துவக்கியுள்ளனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 6 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து, வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.மீனவர்களை தாக்கி, அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு, விரட்டியடித்துள்ளனர்.
ஜோசப், சேகர், சேசு உட்பட 20க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன் பிடிக்காமல் நள்ளிரவிலேயே ராமேஸ்வரம் திரும்பினர்.இதனிடையே, இரவு முழுவதும் நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்ததை தூரத்திலிருந்து இலங்கை கடற்படையினர் கண்காணித்ததாக, நேற்று கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். இலங்கை தேர்தலில் ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை ராமேஸ்வரம் மீனவர்கள் இனி தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும், என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
| |
| வாசகர் கருத்து | |
Or Is India made to realise its stature in this region , to the satisfaction of US ? |
by RVS sharma`,Ras al Khaimah,United Arab Emirates 01-02-2010 21:50:11 IST |
by S Zainul,Jubail,Saudi Arabia 01-02-2010 19:42:57 IST |
by DR. Gokhul,New Delhi,India 01-02-2010 19:15:46 IST |
by சார்லஸ் ,Raameswaram,India 01-02-2010 18:01:42 IST |
by Gee Dinesh,Chennai,India 01-02-2010 15:32:55 IST |
பேசி என்ன பிரயோஜனம் ... தேர்தல்னு வந்தால் நாம தமிழ் துரோக கட்சிக்கு தான் காசு வாங்கிட்டு ஓட்டு போட போறோம் . |
by mr tamilan,singapore,India 01-02-2010 15:31:52 IST |
by தஞ்சாவூர் krishna,Doha qatar,India 01-02-2010 15:12:13 IST |
வேறு, ஒரு அடி கொடுத்தால் அவன் அடங்குவான், இந்த லச்சனதில் போனா சைனா நம்மளை பிடிப்பான் , அப்பவும் நம்ம நாடு, ஒன்னும் பண்ணாது, சிரிச்சிகிட்டே இருக்கும், எனக்கு நண்பர் திருவள்ளுவன் மாதிரி விளக்கமா எழுத தெரியாது ,,,, தப்ப நினைக்காதீங்க |
by pma kaja,Dammam,India 01-02-2010 14:10:29 IST |
by r ramamurthi,dubai,India 01-02-2010 13:17:38 IST |
by A Rakah Dus,Trichy,India 01-02-2010 13:04:53 IST |
by மணிகண்டன் பிள்ளை ,Bangalore,India 01-02-2010 12:37:42 IST |
by s vetri,chennai,India 01-02-2010 10:42:57 IST |
==========திருநெல்வேலி அரங்கநாத கிருஷ்ணன். |
by TRK தி.அர.கிருஷ்ணன் ,MYLAPORE==CHENNAI==4,India 01-02-2010 10:19:59 IST |
by R.S. Master,kanyakumari,India 01-02-2010 10:17:46 IST |
by Mr ராஜ்,Washington,United States 01-02-2010 07:31:30 IST |
by S Guna,Sydney,Australia 01-02-2010 06:54:18 IST |
by V புலி ,vannai,Sri Lanka 01-02-2010 06:26:15 IST |
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக