சனி, 20 பிப்ரவரி, 2010

மதுரையில் உலக தமிழ்ச் சங்க மாளிகை



சென்னை, பிப்.19: மதுரையில் உலகத் தமிழ்ச் சங்க மாளிகை கட்டப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட கேள்வி}பதில் அறிக்கை:எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போது, மதுரையில் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில், உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம் கட்டப்படும் என்று அறிவித்தாரே, இந்த அரசில் அதற்கான திட்டம் ஏதாவது இருக்கிறதா?திமுக ஆட்சியில் டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழு இது தொடர்பாக பரிந்துரை அளித்து இருக்கிறது. அந்தப் பரிந்துரையை அரசு பரிசீலித்து}மதுரையில் உலகத் தமிழ்ச் சங்க மாளிகை கட்டுவதற்கான நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும்'' என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.
கருத்துக்கள்

ட்டடம் கட்டுவது அல்ல புரட்சித் தலைவரின் முதன்மை நோக்கம். உலகத் தமிழ்ச் சங்கத்தை அமைத்து உலக மக்களோடு தொடர்பு கொண்டு உலகெங்கும் தமிழ் மொழி,தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம், தமிழ் வரலாறு, தமிழக வரலாறு எனத் தமிழின் சிறப்புகளைப் பரப்புவது; உரிய காலங்களில் இச்சங்கமே உலகத் தமிழ் மாநாட்டை நடத்தவது என்பனவே அவரது இலக்காக இருந்தது. ஆனால் அடுத்து வந்த ஆட்சியாளர்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்படது. உலகத் தமிழ்ச்சங்கம் அமைந்து முறையாகச் செயல்பட்டிருப்பின் ஈழத் தமிழர்களுக்குக் கூட விடிவு பிறந்திருக்கும். ஏமாற்றத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/20/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
dinamalar
மதுரையில் உலக தமிழ்ச் சங்க மாளிகை கட்டும் நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக