செவ்வாய், 12 ஜனவரி, 2010

Latest indian and world political news information

சென்னை : எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு விளக்கம் அளிக்க முற்பட்ட நிதியமைச்சர் அன்பழகன், தனது விளக்கத்தை கேட்டுவிட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்தும், ஜெயலலிதா உட்பட அ.தி.மு.க.,வினர் புறப்பட்டுச் சென்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, சட்டசபையில் பேசி முடித்ததும், நிதியமைச்சர் அன்பழகன் எழுந்து, "கடனில் மூழ்கியுள்ள தி.மு.க., அரசு என்று அக்கறையோடு குறிப்பிட்டார்' என்று கூறியபடி, அதற்கு விளக்கம் அளிக்க முற்பட்டார். ஆனால், அந்த சமயத்தில் கூச்சல் நிலவியது. அப்போது, ஜெயலலிதா எழுந்து வெளியே செல்ல முயன்றார்.
அதற்கு நிதியமைச்சர் அன்பழகன், "நான் பதில் சொல்லக் கூடாது என்று கூற உரிமையில்லை. நான் சொல்லும் பதிலை கேட்டுவிட்டு விடைபெறுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்' என்றார். ஆனால், ஜெயலலிதா, அதை கண்டுகொள்ளாமல் புறப்பட்டுச் சென்றார். பின்னாலேயே அ.தி.மு.க.,வினரும் சென்றனர்.
இதையடுத்து அன்பழகன், ""ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிவிட்டு, வாயில் வந்ததை எல்லாம் குற்றச்சாட்டாக கூறிவிட்டு, யாரோ எழுதிக் கொடுத்த நாடக வசனத்தை கருத்துக்களாக கூறி, அதற்கான புள்ளி விவரத்தை கேட்கக் கூட மனமின்றி வெளியேறியுள்ளனர். சட்டசபையில் இருந்து வெளியேறியவர்கள், நாட்டை விட்டு வெளியேறும் காலம் வரும்,'' என்றார்.
இதையடுத்து, தனது பதிலுரையை துவக்கிய துணை முதல்வர் ஸ்டாலின், ""வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சட்டசபையின் கடைசி தொடர் இதுவாகத் தான் இருக்கும். அடுத்த பட்ஜெட், புதிய சட்டசபையில் நடப்பதற்கு ஏற்ற வகையில், முதல்வர் அடிக்கடி அதை பார்வையிட்டு, ஆக்கபூர்வ கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அ.தி.மு.க., - ம.தி.மு.க.,வினர் வழக்கம் போல, கவர்னர் உரையை புறக்கணித்துவிட்டு வெளியே சென்று, விமர்சனம் செய்துள்ளனர்.
நல்லவேளையாக, சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தங்கள் கடமையை செய்தனர். தற்போது கூட, எனது பதிலுரையை கேட்காமல் வெளியேறியுள்ளனர். அவர்களது தலைவியை வழியனுப்பிவிட்டு திரும்ப வர வாய்ப்புள்ளது. அதற்காக ஆவலோடு எதிர்பார்த் துள்ளேன்,'' என்றார்.
இதையடுத்து, சில நிமிடங்களில் அ.தி.மு.க.,வினர் திரும்ப வந்து அமர்ந்தனர்.





தனக்குரிய காட்சியில் மட்டும் மேடையில்தோன்ற வேண்டியது நடிகர்களின் கடமை. ஆனால் சட்ட மன்றம் அவ்வாறான நாடக மேடையன்று. மூதத தலைவர் மதிப்புமிகு இனமானப் பேராசிரியர் கருத்தைக் கேட்டுவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சென்றிருக்க வேண்டும். சட்ட மன்றததை நாடகமேடை போல் கருதுவது தவறு. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக