செவ்வாய், 1 டிசம்பர், 2009

தமிழ், கல்வி, வேளாண்மைக்கு முன்னுரிமை: வாசகர் சந்திப்பில் தினமணி ஆசிரியர் பேச்சு



சிதம்பரம், ​ நவ.29: தமிழ்​மொழி, கல்வி, வேளாண்மை ஆகிய மூன்று துறைகளுக்கு தினமணி நாளிதழில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.

பவழ விழா கொண்டாடி வரும் தினமணி நாளிதழ், சிதம்பரம், ஹோட்டல் சார​தா​ராமில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியது:​

வாசகர்கள் ஆசிரி​யரை சந்திப்பதைக் காட்டிலும்,​ ஆசிரியர் வாச​கர்களை சந்​திப்​பதில் பெரு​மை​யா​கக் கரு​து​கி​றேன். எழுத்து என்​பது சமு​தா​யத்​தில் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தக்​கூ​டி​ய​தா​க​வும்,​நாளைய சமு​தா​யத்​திற்கு பய​னு​டை​ய​தா​க​வும் இருக்​க​வேண்​டும். அப்​படி இல்​லை​யெ​னில் அர்த்​தம் இருக்​காது. பொழு​தைத்​தான் வீண​டிக்​கும்.

÷எ​னவே,​ எழு​து​கின்ற எழுத்​தின் உயிர்ப்​பும்,​ சிந்​த​னையை தட்டி எழுப்​பு​கின்ற கருத்​துக​ளும் இருக்​க​வேண்​டும். அர​சுக்​கும் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும் எதி​ரான கருத்​துகளை பதி​வு​செய்​வது எங்​க​ளது நோக்​க​மல்ல.

÷பத்​தி​ரிகை என்​பது தவ​று​களைச் சுட்​டிக்​காட்​டு​கின்ற கண்​ணாடி. அப்​போ​து​தான் சமு​தா​யத்​திற்கு பயன் ஏற்​ப​டும். தவறை திருத்​தக் கூடிய பொறுப்​பில் உள்ள ​ ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வா​கத்​திற்​கும் பல லட்​சம் சம்​ப​ளம் வழங்​கப்​ப​டு​கி​றது. அந்த நிர்​வா​கத்​தி​னர் தவறை திருத்​த​வேண்​டும்.

அதன் மூலம் ஆட்​சி​யா​ளர்​க​ளுக்​கும்,​ நிர்​வாக இயந்தி​ரத்​திற்​கும் நற்​பெ​யர் கிடைக்​கும் என கரு​து​வ​தால்,​ சமு​தா​யத்​திற்கு பயன்​ப​டும் கரு​வி​யாக தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய ஆட்​சி​யா​ளர்​கள் மாறி​னா​லும்,​ தின​மணி கண்​ணா​டி​யா​கத் தான் இருக்​கும்.

÷ச​மு​தா​யத்​தில் நடை​பெ​றும் தவ​று​கள் களை​யப்​ப​ட​வேண்​டும் என்ற நல்ல எண்​ணத்​து​டன் தின​மணி செயல்​ப​டு​கி​றது. நாளைய சமு​தா​யத் தலை​மு​றை​யி​னர் நன்​மைக் கருதி அவர்​க​ளுக்கு சிந்​த​னைத் தாக்​கத்தை ஏற்​ப​டுத்​தும் பணியை தின​மணி செய்​கி​றது.

÷வி​வ​சா​யம் குறைந்​து​வ​ரு​வது அச்​சத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது.தன்​னி​றைவு தான் ஒரு நாட்​டின் பாது​காப்பு என்​பது முன்​னோர்​கள் கண்​ட​றிந்த விஷ​யம்.விவ​சா​யம் திட்​ட​மிட்டு அழிக்​கப்​பட்​டு​வ​ரு​வ​தாக கரு​து​கி​றேன். இதற்கு முன்​னேற்​பாடு தான் தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டம். இதைப்​பற்றி சிந்​திக்​க​வேண்​டிய கடமை உள்​ளது.

÷உயர்​கல்வி பயில மாண​வர்​களை தயார்​ப​டுத்த ​வேண்​டும் என்​ப​தற்​காகத்தான் தின​ம​ணி​யில் கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​ப​டு​கி​றது.

​ ​ முது​பெ​ரும் தலை​வர் ஜே.சி. கும​ரப்​பாவை மத்​திய,​ மாநில அர​சு​கள் மற்​றும் காங்​கி​ரஸ் கட்சி உள்​ளிட்ட அனை​வ​ரும் மறந்​து​விட்ட நிலை​யில் அவ​ரது பொன்​விழா நினைவு நாளை தின​மணி சார்​பில் கொண்​டா​ட​வுள்​ளோம் என்​றார் ஆசி​ரி​யர் வைத்​திய​நா​தன்.

÷முன்​னாள் அமைச்​சர் வி.வி.சாமி​நா​தன்,​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஓய்​வு​பெற்ற தமிழ்த்​துறைப் பேரா​சி​ரி​யர்​கள் ஆனந்​த​ந​ட​ராஜ தீட்​சி​தர்,​ முன்​னாள் அர​சி​யல் அறி​வி​யல் துறைத் தலை​வர் ஏ.சண்​மு​கம்,​ தமிழ்​தே​சிய பொது​வு​டை​மைக் கட்சி ஒருங்​கி​ணைப்​பா​ளர் கி.வெங்​கட்​ரா​மன்,​அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழக மேலாண் துறைத் தலை​வர் எம்.பஞ்​ச​நா​தன்,​ வர்த்​தக சங்​கத் தலை​வர் எம்.ஆதி​மூ​லம்,​ஆசி​ரி​யர் வாசு,​ ஓய்​வு​பெற்ற வங்கி அதி​காரி மனோ​க​ரன்,​ரோட்​டரி சங்க சமு​தாய இயக்​கு​நர் மணி​வண்​ணன்,​விவ​சாய சங்​கத் தலை​வர் ரவீந்​தி​ரன்,​ வாச​கர்​கள் பாலாஜி கணேஷ்,​ காளி​தாஸ்,​ சித்​தரஞ்​சன்,​ராதா​கி​ரு​ஷ்ணன்,​வழக்​க​றி​ஞர் கே.பால​சுப்​ர​ம​ணி​யன்,​தேவ​ரா​ஜன் உள்​ளிட்​டோர் ​ பங்​கேற்​ற​னர்.

ஈழப் போராட்ட வர​லாறு 2 ஆண்​டு​க​ளுக்கு முன் வந்​தி​ருக்க வேண்​டும்

ஈழப் போராட்ட வர​லாறு 2 ஆண்​டு​க​ளுக்கு முன் வந்​தி​ருக்க வேண்​டும் என சிதம்​ப​ரத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்த தின​மணி வாச​கர் சந்​திப்​புக் கூட்​டத்​தில் கருத்து தெரி​விக்​கப்​பட்​டது.

÷தி​ன​மணி ஆசி​ரி​யர் கே.வைத்​தி​ய​நா​த​னி​டம் வாச​கர்​கள் தெரி​வித்த கருத்​து​கள் பின்​வ​ரு​மாறு:​​

தேவ​ரா​ஜன் ​(30 வருட வாச​கர்)​:​​ தின​ம​ணி​யில் வெளி​வ​ரும் ஈழப் போராட்ட வர​லாறு 2 ஆண்​டு​க​ளுக்கு முன்​பி​ருந்து பிர​சு​ர​மா​கி​யி​ருந்​தால் தமி​ழ​கத்​தில் மிகப்​பெ​ரிய மாற்​றம் ஏற்​பட்​டி​ருக்​கும். மேலும் விவ​சா​யப் பாதிப்பு குறித்து தின​மணி மட்​டுமே அக்​கறை எடுத்து அவற்றை பிர​சு​ரித்து வரு​வது வர​வேற்​கத்​தக்​கது.​

ஆனந்​த​ந​ட​ராஜ தீட்​சி​தர்​(20 வருட வாச​கர்)​:​ செய்​தி​களை சுருங்​கச் சொல்லி விளக்​கு​வ​து​தான் தின​ம​ணி​யின் சிறப்பு. வியா​பார ரீதி​யாக இல்​லா​மல் சேவை மனப்​பான்​மை​யு​டன் செயல்​பட்டு தமி​ழுக்​குத் தொண்டு செய்து வரு​கி​றது.​

எஸ்.மனோ​கர்​(50 வருட வாச​கர்)​:​ தின​மணி பற்றி குறை​கூற வாய்ப்​பில்லை. இருப்​பி​னும் விவ​சா​யத்​திற்​கும்,​ பங்​குச்​சந்​தைக் குறித்த செய்​தி​க​ளுக்​கும் தனித்​து​வம் வழங்​கி​னால் சிறப்​பாக இருக்​கும். மழை நில​வ​ரம் குறித்த செய்​தியை செயற்​கைக்​கோள் படத்​து​டன் வெளி​யிட வேண்​டும்.​

முன்​னாள் அமை​ச​சர் வி.வி.சாமி​நா​தன்:​ மிகக் குறைந்த விலை​யில் மலர்​களை வெளி​யிட்டு விலை மதிப்​பில்லா தக​வல்​கள் அளிக்​கக்​கூ​டி​யது தின​மணி மட்​டுமே.​

சண்​மு​கம்:​ தின​மணி தலை​யங்​கமே எங்​க​ளுக்கு அதன் மீதான நம்​பிக்கை.

தமிழ்​மணி ஒரு வர​லாற்​றுக் பொக்​கி​ஷம். ஈழப் போராட்​டம் ஒரு தொகுப்பு மல​ராக வெளி​வந்​தால் சிறப்​பாக இருக்​கும். “அடடே மதி’ பெரு மகிழ்ச்​சி​ய​ளிக்​கி​றது.

÷எங்​க​ளின் பிரச்​னை​க​ளுக்கு விரை​வில் தீர்வு காண பயன்​ப​டு​வது ஆராய்ச்​சி​மணி. கட்​டு​ரைப் பகு​தி​யில் புதி​ய​வர்​க​ளுக்​கும் வாய்ப்​ப​ளிக்க வேண்​டும்.​

வெங்​கட்​ரா​மன்:​​ பார்ப்​ப​தற்கு பல பத்​தி​ரி​கை​கள் உள்​ளன. படிப்​ப​தற்கு என்று இருப்​பது தின​மணி மட்​டுமே. தலை​யங்​கத்​தைத் தொகுப்பு நூலாக வெளி​யிட வேண்​டும்.

தமி​ழ​றி​ஞர்​கள் குறித்த செய்தி ஒவ்​வொரு வார​மும் வெளி​யிட வேண்​டும்.

மாண​வர்​கள் மற்​றும் இளை​ஞர்​க​ளைச் சென்​ற​டைய வேண்​டிய செய்தி குறித்து தின​மணி ஆய்வு செய்து,​ எதிர்​கால சமு​தா​யத்​துக்கு துணை நிற்க வேண்​டும் என்​பது எனது ஆசை. ​

சித்​த​ரஞ்​சன்:​ எங்​கள் வீட்​டில் சிறு​வ​யது முதலே தின​மணி படித்து வரு​கி​றோம். நான் தமிழ் கற்​றுக் கொண்​டதே தின​மணி மூலம் தான்.​

ரவீந்​தி​ரன்:​ஒரு நக​ரின் குறைக் குறித்து மாலை​யில் உங்​கள் நிரு​ப​ரி​டம் நாங்​கள் தெரி​வித்த புகா​ருக்கு மறு​நாள் காலை உட​ன​டி​யாக நிவா​ர​ணம் கிடைப்​பது தின​மணி மூலம்​தான் என்​றால் அதற்கு மாற்​றுக் கருத்து இருக்க முடி​யாது.​

பஞ்​ச​நா​தன்:​ தென்​னாப்​பி​ரிக்கா சென்ற போது,​அங்கு ஒரு​வர் தின​ம​ணி​யின் இ-​பேப்​பர் மூலம் ​ தனது குழந்​தைக்கு தமிழ் கற்​றுக்​கொ​டுப்​ப​தைக் கண்டு வியந்​தேன்.

அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக மாண​வர்​கள் செய்த ஆய்வு அறிக்​கை​யின்​படி தின​மணி நடு​நிலை நாளேடு என்ற இடத்​தைத் தொடர்ந்து தக்​க​வைத்​துக் கொண்​டி​ருக்​கி​றது என்​பதை காண​மு​டிந்​தது.

கருத்துக்கள்

கணக்கன் காலத்திலிருந்து தினமணி படித்துவருகின்றேன். இப்போதைய ஆசிரியர் தமிழ் வளர்ச்சியிலும் தமிழின மேம்பாட்டிலும் கருத்து கொண்டு சிறப்புடன் செயலாற்றி வருவது பாராட்டிற்குரியது. ஆனாலும் ஒரு புதிர். இந்தி எதிர்ப்பு என்பதைக் கூடக் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி ஹிந்தி எதிர்ப்பு என்றுதான் குறிப்பிட வேண்டுமா? தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தி நலல தமிழை வளர்க்க தினமணி முன்வரவேண்டும். தமிழ் ஆர்வலர் திரு வைத்தியநாதன் முன்வராவிட்டால் வேறு யார்தான் இப் பணியைச் செய்வருவர்? இணையப் பதிவு மூலம் வாசகர்களின் கருத்துப் பகிர்விற்கு வாய்ப்பளிக்கும் தினமணி மூன்று திங்களுக்கு ஒரு முறையேனும் இணையப பதிவுகளை வெளியிட்டுப் பிற வாசகர்களும் இணைய வாசகர்களை அறிய உதவ வேண்டும். தினமணி ஆசிரியருக்கும் ஆசிரியக் குழுவினருக்கும் பிற ஊழியர்களுக்கும் பாராட்டுகள்! தினமணியின் தொண்டு தொடர வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/1/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக