புதன், 5 ஆகஸ்ட், 2009

இந்தியாவில் இலங்கைத் தமிழர்களுக்கு குடியேறியோர் தகுதி: இரவிசங்கர் கோரிக்கை



புதுதில்லி, ஆக. 4: இந்தியாவில் முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியேறியோர் என்கிற அந்தஸ்தை வழங்கும்படி 'வாழும் கலை' அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ""ஐரோப்பா, அமெரிக்காவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் வேலைக்குச் செல்லவும் தொழில் தொடங்கவும், வீடு வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அகதிகளாக முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு குடியேறியோர் அந்தஸ்து வழங்கி உதவ வேண்டும்"" என்று கூறியுள்ளார்.

கருத்துக்கள்

திபேத்தில் இருந்து குடியேறியோருக்கு முழு உரிமையும் வாய்ப்பு நலன்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இவை மறுக்கப்பட்டு அடிமையாகவும் தண்டனைவாசிகள் போலும் நடத்தப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் முழு உரிமையுடன் வாழ வழி வகை செய்ய வேண்டும். இரட்டைக் குடியுரிமை முறையில் குடியுரிமைகள் வழங்கப்படவேண்டும். தமிழ் ஈழத்தில் உரிய காலத்தில் சிங்களர்களின் இழப்பீட்டுடன் வாழ வகை செய்ய வேண்டும். கொடுங்கோன்மைச் செயற்பாடு கொண்ட அரசுகள் இதனைச் செய்யா. தவத்திரு இரவிசங்கர் உலக நாடுகளைத் தன்பக்கம் இணைத்துப் போராடி வெற்றி காண வேண்டும். மத்திய அரசின் கொள்கையே தன் கொள்கை என்று கூறும் கொலைகாரப் போக்கைத் தமிழக அரசு நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/5/2009 2:16:00 AM

Sri Lankan ARMY did manage to SLAUGHTER more than FIFTY thousand TAMIL civilians including women and CHILDREN within few months time. Banned weapons like CLUSTER BOMBS and phosphorous bombs were used against the innocents. (Death and destruction in a Terror Island , Richard Dixon, Telegraph .co.uk. - 12 July 2009)

By SUMI KUMARAN, UK
8/4/2009 8:34:00 PM

BECAUSE AN USELESS PEOPLES RULING TAMILNADU!!TAMILAN TAMILAN ENNDRU SOLLI TAMILINAKKU MOTTAI POTTU DELLIKU KAVADI THOOKKUM KAYAVALIKALINAL INI ENNTHA PAYANUM ILLAI. "MAKKAL NALAM MAKKAL NALAM ENDRU SOLLUVAR THAM MAKKAL NALAM ONDRETHAN MANITHIL KOLLUVAR"MGR SONG HE HAS GUESSED 25YEARS EARLIER

By s.srinivasan
8/4/2009 6:58:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக