வியாழன், 21 மே, 2009

சடலங்கள் மீட்பால் புரிந்து கொள்வோம் புதைக்கப்பட்ட உண்மைகள‌ை!

400 சடலங்கள்: இலங்கை ராணுவம் மீட்பு
தினமணி
First Published : 21 May 2009 10:09:00 PM IST



கொழும்பு, மே 20: இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 400 சடலங்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை ராணுவத்துடனான மோதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபட்ச நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை தேசிய விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தை இலங்கை ராணுவம் செவ்வாய்க்கிழமை மீட்டது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 400 சடலங்களை ராணுவத்தினர் புதன்கிழமை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்துமே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் சில பெண் விடுதலைப் புலி இயக்கத்தினரும் அடங்குவர்.தாக்குதல் முயற்சி: இதனிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியில் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

சிங்கள அரசு கண்டெடுக்கும் சடலுங்களுக்காக எத்தனை அப்பாவிச் சிங்களப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் தந்தால் சிங்கள மக்கள் மனம் திருந்துவார்கள். தவறான வஞ்சக முறையிலும் நெறியற்ற முறையிலும் இனப்படுகொலை புரிந்து விட்டு அதை வெற்றியாகக் காட்ட முயலும் இந்- சிங. அரசுகளே வெட்கப்படவும் வேதனைப்படவும் வேண்டிய கொடுஞ் செயல்களைப் புரிந்து விட்டுப் பெருமிதமாகக் காட்டுகிறீர்களே! இவற்றுக்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டி யிருக்கும் என்பதை உணரவில்லையா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/21/2009 4:51:00 AM

பிரபாகரனின் மரணம் மே மாதம் 13ம் தேதிக்கு முன்னதாகவே நடந்து விட்டது. தேர்தலின் போது கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காகவே அவரது மரணச் செய்தி மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது. தற்போது இலங்கை அரசு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

By Kariththu
5/21/2009 3:41:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக