செவ்வாய், 19 மே, 2009

இராசீவ் கொலை வழக்கு ...

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வருமா? சிபிஐ விளக்கம்

தினமணி
First Published : 19 May 2009 03:57:00 AM IST



புதுதில்லி, மே 18: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை முடிவு வருமா என்ற கேள்விக்கு சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சிபிஐ செய்தித் தொடர்பாளர் கூறியது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் முதல் இரண்டு குற்றவாளிகளாக புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக திங்கள்கிழமை வெளியான தகவல் குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம். தகவல் உறுதி செய்யப்பட்டால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டப்பூர்வமான முடிவை மேற்கொள்ள நீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.

கருத்துக்கள்

அப்பாடா! ஒரு வழியாக உண்மைக் குற்றவாளிகளான சாமிகளையும் பிறரையும் தப்ப வைக்க அருமையான வாய்ப்பு கிடைத்து விட்டது. உண்மைக் குற்றவாளிகளை விட்டு விட்டு உண்மைப் போ்ராளிகளைப் போர் மூலம் தண்டித்தாகி விட்டது. இனிக் குற்றவாளிகள் அச்சமின்றி எங்கும் திரியலாம். - இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2009 4:03:00

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக