வியாழன், 5 மார்ச், 2015

தேவதானப்பட்டியில் என்புமுறிவுக்காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கை

68dengu

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பரவாமல் தடுக்கப் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை

தேவதானப்பட்டிப் பேரூராட்சியில் என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் பர
வாமல் தடுக்கப் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவதானப்பட்டிப் பகுதியில் மருமக்காய்ச்சல், என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் பேரூராட்சி நிருவாகம் எடுத்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பரப் பதாகைகள், மிதியூர்தி(ஆட்டோ), உழுவையூர்திகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகத் துண்டறிக்கை வழங்கப்படுகிறது. மேலும் பழைய உருளிக்காப்புகள்(டயர்கள்), தொட்டிகள், ஆட்டு உரல் போன்றவை பேரூராட்சிப் பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தேவதானப்பட்டிப் பேரூராட்சிக்குற்பட்ட மஞ்சளாறு அணை, சாத்தாகோவில்பட்டி, புல்லக்காபட்டி போன்ற ஊர்களில் நீண்ட நாள் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் மற்றும் சாக்கடை நீரை அப்புறப்படுத்தியும், வீடுகள், உணவகங்களில்   வெளுப்புத்தூள், கழுவுநீர் முதலானவை தெளித்தும் பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சிப்பகுதியில்; உள்ள தண்ணீர்த் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றில்   தூய்மைக்கான மருந்து கரைச்சல் போன்றவை தெளிக்கப்பட்டன.
தேவதானப்பட்டிப் பேரூராட்சித் தலைவர் குணா தலைமையில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, நல்வாழ்வுத்துறையைச்சேர்ந்த பன்னீர்ச்செல்வம் தலைமையில் குழு அமைத்து ஆங்காங்கே கொசுக்களை அழிக்கும் மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாகப் பேரூராட்சித்தலைவர் குணா கூறுகையில், தேவதானப்பட்டிப் பேரூராட்சியைக் குப்பையில்லாப் பேரூராட்சியாக மாற்றவும், மருமக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், என்புமுறிவு(டெங்கு)க் காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும் போர்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
68vaigaianeesu


மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை


68kullapuram_wineroad
  தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகள் மதுபானச்சாலையாக மாறிவருகின்றன. குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி போன்ற ஊராட்சிகளில் மதுபானக்கடைகள் இல்லை. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபானங்களை வாங்கி மது அருந்துகின்றனர். செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடையில் குடிப்பக வசதி இல்லை. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிக் குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகளில் இருபுறமும் கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து மதுபானங்களை அருந்துகின்றனர். இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லும்போது அவர்களைத் தரக்குறைவாக பேசுவதும், பள்ளிமாணவிகளைக் கிண்டல் செய்வதுமாக உள்ளனர்.
எனவே இப்பகுதியில் காவல்துறை சார்பில் சுற்றூர்தி வாகனம் ஏற்பாடு செய்து பெண்களைக் கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்
68vaigaianeesu


கைலாசநாதர் கோயிலில் பிறந்தநாளுக்கான பூசை

68kailasanatharkoil-piranthanaalpuusai
 மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 67-ஆவது பிறந்தநாளை முன்னிட்டுத், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கைலாசநாதர் கோயிலில் மாவட்ட இளைஞர்கள், இளம்பெண்கள்பாசறை சார்பாகச் சிறப்பு பூசை செய்யப்பெற்றது.
மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஒ.ப.இரவீந்திரநாத்துகுமார், பெரியகுளம் நகர்மன்றத்தலைவர் ஒ.இராசா, மாவட்ட எம்ஞ்சியார் அணி இளைஞர் செயலர் எல்லப்பட்டி முருகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலர் முருகானந்தன், நகரத் துணைச் செயலர் அப்துல்சமது, கூட்டுறவுச் சங்க இயக்குநர் ஏ.சி.சிவபாலு, தொழிற்சங்கச் செயலர் சீவானந்தம், கைலாசநாதர் அறக்கட்டளை சிவகுமார், கழகத்தினர் உள்ளனர்.
68vaigaianeesu