சனி, 30 ஜனவரி, 2010

எனது வாக்குகள் ராஜபட்சவுக்கு மாற்றப்பட்டன: சரத் பொன்சேகா



கொழும்பு, ஜன.29- இலங்கை அதிபர் தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகள் ராஜபட்சவுக்கு மாற்றப்பட்டன என்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையின்போதே ராஜபட்சவை விட தான் 14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்ததகாவும் பொன்சேகா கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், பொன்சேகா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

வெறும் சிறுபிள்ளைத்தனமான பேச்சாக இருக்கிறதே. இங்கும் கூடத்தான் எதிர்க்கட்சி வாக்குகள் ப.சிதம்பரத்தின் கணக்கில் மாற்றப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவர் உள்துறை அமைச்சராக வெற்றி உலா வந்து கொண்டுள்ளார். வை.கோ. பெற்ற வாக்குகள் காங்கி.வேட்பாளருக்கு மாற்றப்பட்டு வைகோ தோ்வியுள்ளதாக அறிவிக்கப்பட்டார். எங்களிடம் பாடங்கற்ற இராசபக்சே சிறப்பாகச்செய்து முடித்துள்ளார். நாங்களும் பாராட்டும் அனுப்பி விட்டோம். அரசியலின் ஆனா ஆவன்னாகூடத் தெரியாமல் பொன்சேகா இவ்வாறு சொ்ல்லலாமா என இங்குள்ள காங்கி.காரர்கள் கேட்கிறார்கள்.தன்னை எரியூட்டித் தமிழ் உலகிற்கு ஒளியூட்டிய வீரப்போராளி முத்துக்குமரனுக்கு வீர வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/30/2010 2:30:00 AM

Late realisation or keen co-operation to Rajapakse to deceive the Tamil plight. Rajapakse says Fonseka planned to kill his family member, Fonseka says as Rajapakse planned to arrest and kill him. If this the character of the top officials in the country. How to imagine about the citizens, particularly Tamils in Camps.

By Unmai
1/30/2010 1:15:00 AM

ஏண்டா! Thiru உனக்கே இன்னொருவன் அறிவுரை சொல்ல வேண்டும். நீ ஏண்டா பிறருக்கு அறிவுரை சொல்கிறாய். முட்டாள் சொல்வதை பெரிது படுத்த வேன்டாம்

By usanthan
1/30/2010 1:02:00 AM

அறிவு ஜீவிகளா என் பெயர்ரில் எழதினால் உங்களுக்கு என்ன பயன் வருகுது? இந்த குறிப்னப [[ஊழலுக்கு பெயர்போன இலங்கையில் இதெல்லாம் சாதாரணம்]]இனத நான் பதிவு செய்ய வில்னல

By usanthan
1/30/2010 1:00:00 AM

தமிழ் ஈழ போராட்டம் , கடைசி கட்ட போருக்கு பின் மிக பெரிய அளவில் வலுவடைந்துள்ளது என்பது தான் உண்மை ..... தற்போது அது சர்வேதேசமயமகிவிட்டது ......உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் , தமிழ் தேசியம் முன் எப்போதும் இல்லாத வகையில் மேலோங்கி இருக்கிறது .....அதை வழி நடத்த , தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மீண்டும் வந்து விடுவார் என்பது தான் , சர்வதேச நாடுகளின் அச்சமாக இருக்கிறது ..... ஆக , அதற்கு முன் மக்களை திசை திருப்பி , இந்த போராட்டத்தை மழுங்க செய்ய , சில போட்டி போராட்ட குழுக்களை இந்திய புலனாய்வு குழுக்கள் வடகிழக்கு மாகா ணங்களில் உருவாக்கி வருகிறது .... அதை தான், தி டைம்ஸ் குறிப்பிடுகிறது ....ஆனால் , இது போன்ற சதி வலைகளும் , பொய் குழுக்களும் கால வெள்ளத்தில் கரைந்து போகும் (கருணா குழுவை போல)... 'சத்தியத்தை' உணர்ந்து கொள்ளும் நிலை உள்ளவரை 'பிரபாகரனையும்' , 'புலிகளையும்' , 'தமிழ் ஈழ தேசியத்தையும்' ஒரு போதும் தமிழருக்கு மாற்று இருக்க முடியாது ......காரணம் ... இவை நான்கும் (சத்தியம், பிரபாகரன், புலிகள், தமிழ்ஈழ தேசியம் ) வெவ்வேறு படிவம் கொண்ட ஒரே நிலை ....!

By usanthan
1/30/2010 12:35:00 AM

ஊழலுக்கு பெயர்போன இலங்கையில் இதெல்லாம் சாதாரணம், கொழும்பு விமானநிலயத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, இலட்சகணக்கான இலங்கை தமிழர்கள் ஐரோப்பா, கனடா என்று விசா இல்லாமல் போலி பாஸ்போர்டில் எப்படி வெளிநாட்டிற்கு வெளியேறினார்கள், எல்லாம் லஞ்சம் தான்.

By usanthan
1/29/2010 11:50:00 PM

முத்துகுமார் போன்ற கோழைகளின் இறப்பினால் நாட்டுக்கு எந்த நன்மையுமில்லை. ராமதாசின் அரசியல் விளையாட்டில் பலியான இவனை தியாகி என்று சொல்லி ஊரை ஏமாற்றும் கூட்டம், மந்தை கூட்டம்.

By Thiru
1/29/2010 11:45:00 PM

சரத் பொன்சேகா இலங்கையின் ராமதாசு.

By Sundaram
1/29/2010 11:41:00 PM

அதனால் என்ன? இதே தினமணியில் தானே, நீ அவன் ஆள் தான் என்று தலையங்கம் எழுதி இருக்கிறான் தறுதலை.

By Pirabakaran
1/29/2010 10:05:00 PM

Congrat Mrs. Sonia Gandi! for SPOILING INDIA'S GOOD REPUTATION/NAME WORLDWIDE..HA HA

By Jakku
1/29/2010 9:24:00 PM

WHAT DID MR MUTHUKUMAR ACHEIVED?....1)Created awareness widely among people about tamil's plight in TN...2)As a result triggered Congress to involve in illegal vote casting(opportunity for everyone to see 100 year old Congress parties real face)...3) Yet Congress lost many parlimentary seats in 2009 election in TN...4)India and Singalava trapped into act against humanity and possiblity to face international criminal court soon...5)Unfortunately poverty india lost its face has Mahatma Nation globally...6)China and Pakistan have got strong evidence to bully india from now on (which they already started against india)....etc etc

By Martin Selvam
1/29/2010 9:20:00 PM

வீர தமிழனே! வீர வணக்கம்!வீர வணக்கம்!வீர வணக்கம்!

By Mudali
1/29/2010 9:19:00 PM

Congrat Mrs. Sonia Gandi!

By Sarma
1/29/2010 9:14:00 PM

Hi WHAT DID MR MUTHUKUMAR ACHEIVE BY SUICIDE? HE COULD HAVE LIVED TO FIGHT ANOTHER DAY. THIS IS THE PROBLEM WITH EMOTIONAL PEOPLE AND OUR POLITICIANS CAPITALISE ON THIS. VERY SAD. EVEN HIS SUICIDE DID NOT KINDLE HIS EXPECTED REACTION IN TAMILNADU AND THATS THE SADDEST PART. TN DID NOT VIEW SRILANKAN PROBLEM FROM EMOTIONAL ANGLE. OTHERWISE KARUNA WOULD NOT HAVE WON IN 2009.

By S Raj
1/29/2010 8:41:00 PM

power makes anything only god save the people in general & sri lankan tamils in particular

By ls raghunathan
1/29/2010 6:41:00 PM

ஈழ விடுதலைக்கு என்றுமே உறுதுணையாய் நின்று வரும் தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்த்து, தமிழீழ மக்களுக்காய் தன்னுயிரை ஈந்தளித்த வீரத்தமிழ் மகன் முத்துகுமாருக்கு எங்கள் வீரவணக்கத்தை செலுத்துகிறோம் உன் வீரமரணத்திற்கு தலை வணங்குகிறேன். தமிழ் மொழியும் தமிழனும் இந்த உலகில் இருக்கும் வரை உன் புகழும் நிலைத்திருக்கும்.வீர தமிழனே! வீர வணக்கம்!வீர வணக்கம்!வீர வணக்கம்!

By Gounder
1/29/2010 6:10:00 PM

Today is Muthukumar's 1st Death anniversary.My deepest condolences.

By Poruki
1/29/2010 4:44:00 PM

ஈழ விடுதலைக்கு என்றுமே உறுதுணையாய் நின்று வரும் தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்த்து, தமிழீழ மக்களுக்காய் தன்னுயிரை ஈந்தளித்த வீரத்தமிழ் மகன் முத்துகுமாருக்கு எங்கள் வீரவணக்கத்தை செலுத்துகிறோம் உன் வீரமரணத்திற்கு தலை வணங்குகிறேன். தமிழ் மொழியும் தமிழனும் இந்த உலகில் இருக்கும் வரை உன் புகழும் நிலைத்திருக்கும்.வீர தமிழனே! வீர வணக்கம்!வீர வணக்கம்!வீர வணக்கம்!

By usanthan
1/29/2010 4:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தெரிந்துகொள்ளுங்கள்! - பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பை



கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மீண்டும் வந்து விளையாடி பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தவர், அரசியல் கட்சியைத் தொடங்கியவர், அறக்கட்டளைகளை நடத்தியவர், கிரிக்கெட் வர்ணனையாளர் என ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்தவர்தான் இம்ரான் கான் நியாஸி.1952-ல் லாகூரில் பிறந்தவர், மியான்வாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.லாகூரில் பள்ளிப் படிப்பு, இங்கிலாந்தில் கல்லூரி படிப்பு. 16 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் பங்கேற்பு. 1969-70-ல் லாகூர்-ஏ அணிக்காக விளையாடினார். படிப்படியாக உயர்ந்து பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றார்.1971 ஜுன் 3ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். இதுதான் அவரது முதல் சர்வதேச போட்டி. இடையில் சசக்ஸ், நியூ சவுத் வேல்ஸ், பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், வொர்செஸ்டர்ஷயர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், லாகூர் அணி ஆகியவற்றுக்காக அவ்வப்போது விளையாடியுள்ளார்.1982 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தவர். நடுவில் 1987-ல் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். பாகிஸ்தான் அதிபர் ஜியா-உல்-ஹக்கின் வற்புறுத்தலால் 1988ல் பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பெற்றார். சொல்லிவைத்தாற்போல் 1992-ல் அவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றது.88 டெஸ்ட் போட்டிகள் மூலம் 3807 ரன்கள் சேர்த்ததுடன் 362 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவற்றில் 6 சதம், 18 அரை சதம், பேட்டிங் சராசரி 37.69. ஒரு இன்னிங்ஸில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 23 தடவை எடுத்துள்ளார். ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் போன்று 6 முறை எடுத்துள்ளார். 28 கேட்சுகளை பிடித்துள்ளார்.175 ஒருதினப் போட்டிகளில் விளையாடி 3709 ரன்களைக் குவித்துள்ளார். 182 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 36 கேட்சுகளை பிடித்துள்ளார். இவ்வாறு பேட்டிங், பெüலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நம்பர் 1ஆக இருந்து ஆல்-ரவுண்டர் ஆனார்.உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். 3 ஆயிரம் ரன்கள், 300 விக்கெட்டுகள் என்று உலக சாதனை புரிந்த எட்டு பேரில் இவரும் ஒருவரானார்.வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோர் இவருடைய கண்டுபிடிப்புகள்.39-வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தனது தாயார் நினைவாக லாகூரில் மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனையைக் கட்டினார். பின்னர் நீதிக்கான இயக்கம் (தேரிக் இ இன்சாஃப்) என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரார்.

வெள்ளி, 29 ஜனவரி, 2010

மிக மிகப் பாராட்டுதலுக்குரிய செயல். நம்மிடையே குடி புகுந்த ஆரிய மாயையை நீக்கி விட்டு உலக மக்களுக்குத் தமிழின் தனித் தன்மையையும் உயர்தனிச் செம்மொழியாய்த் திகழும் சிறப்பையும் உணர்த்திய அறிஞர் கால்டுவெல் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கும் தமிழக அரசையும் மாண்புமிகு முதல்வரையும் பாராட்டுவோம். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முதலிய எண்ணற்ற அறிஞர்களின் மொழி ஆய்விற்கு முன்னோடியாக இருந்து உலக மொழிகளின் தாய் தமிழ் மொழியே என்பதை உணர்த்த உதவிய அறிஞர் கால்டுவெல் வழி நி்ன்று கன்னித் தமிழ் வளர்ப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை, ஜன.29-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இங்கிலாந்து நாட்டில் பிறந்து கிறிஸ்தவ சமயத் தொண்டு புரிவதற்காக
1838-ம் ஆண்டில் சென்னைக்கு வந்த ராபர்ட் கால்டுவெல், நெல்லை மாவட்டம் இடையன்குடி என்னுமிடத்தில் தங்கி சமயப் பணிகளாற்றி மறைந்தார்.
கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தபின் தமிழ்மொழி கற்று, அதன் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ்மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்று, இம்மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தவர். அதன் பயனாக, “திராவிட மொழிகள்” என்னும் சொல்லாக்கத்தை முதன் முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர் அவர்.
அத்துடன் “திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத சொற்களை அறவே ஒழித்து விட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும் என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையை நிலைநாட்டி உலகறியச் செய்தவர் கால்டுவெல்.
அவர் படைத்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூல் தமிழ்மொழியின் தனித்தன்மையையும், சிறப்பையும் உலகுக்கு வெளிப்படுத்தியதுடன், தமிழ்மொழி பற்றிய தொன்மைச் சிறப்பினையும் பறைசாற்றுகிறது.
இவ்வாறு தமிழ் மொழிக்கு மாபெரும் பெருமைகளை சேர்த்த ராபர்ட் கால்டு வெல்வை போற்றும் வகையில், அண்ணா முதல்- அமைச்சரான பின், 1968-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, சென்னை கடற்கரையில் காமராஜர் சாலையில் சிலை அமைத்து சிறப்பிக்கப்பட்டது.
செம்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறந்த மணிமகுடம் சூட்டிய மாமேதை கால்டு வெல்லுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், நெல்லை மாவட்டம், இடையன் குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை, அவரது நினைவைப்போற்றும் வகையில், அரசு நினைவு இல்லமாக மேம்படுத்திப் பராமரித்திட முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்து
Friday, January 29,2010 02:23 PM, தில்லானா மோகனாம்பாள் said:
உங்களை பத்தி உலகத்துகே தெரியும்.அதை அரசு இல்லம் என்ற பெயரில் உங்க வாரிசுகளுக்கு கொடுத்துடுவீங்க. நாங்க அதை நம்பனும்.
Friday, January 29,2010 02:04 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
மிக மிகப் பாராட்டுதலுக்குரிய செயல். நம்மிடையே குடி புகுந்த ஆரிய மாயையை நீக்கி விட்டு உலக மக்களுக்குத் தமிழின் தனித் தன்மையையும் உயர்தனிச் செம்மொழியாய்த் திகழும் சிறப்பையும் உணர்த்திய அறிஞர் கால்டுவெல் அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்கும் தமிழக அரசையும் மாண்புமிகு முதல்வரையும் பாராட்டுவோம். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முதலிய எண்ணற்ற அறிஞர்களின் மொழி ஆய்விற்கு முன்னோடியாக இருந்து உலக மொழிகளின் தாய் தமிழ் மொழியே என்பதை உணர்த்த உதவிய அறிஞர் கால்டுவெல் வழி நி்ன்று கன்னித் தமிழ் வளர்ப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


This Blog
Linked From Here
அக்கம் பக்கம்
இணைப்புக்கு ( நான் படிப்பவை )
The Web
This Blog
Linked From Here

அக்கம் பக்கம்

இணைப்புக்கு ( நான் படிப்பவை )

The Web

Friday, December 25, 2009

தமிழ்மணம் பரிந்துரை : 0/0
Pathivu Toolbar ©2010thamizmanam.com

இப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா !



வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே,


இந்த கட்டுரையின் நோக்கம் நாம் எவ்வாறாக இந்திய தேசியத்தால் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதே.என்னிடம் வாதிடும் பல தோழர்கள் இந்திய தேசியத்தை முன்னிறுத்தியே வாதிடுகிறார்கள்.உங்கள் தேசிய பற்று நல்லாத்தான் இருக்கு .உங்கள் இந்திய பற்றுக்கு நான் கடைசி வரியில் பதில் அளித்து உள்ளேன்.யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.சிந்திக்க வேண்டுகிறேன்.

நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும் முல்லை பெரியாறு விசயத்தில் எவ்வாறாக ஏமாற்றபடுகிறோம் என்பதை இங்கே காணலாம்,


யார் இந்த முல்லை பெரியாறு ?

மஹாராஷ்ட்ரா
மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர்
பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,அதாவது தமிழக எல்லையில் உருவாகி கேரளாவுக்குள் நுழைந்து மறுபடியும் தமிழகத்தின் வழியாக அரபிக்கடலில் கலக்கும் ஆறு தான் இந்த பெரியாறு.

கேரளாவின் ஜிவ நதி,


  • கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,
  • கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும்,
  • கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும்,
  • கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.
  • இதனாலேயே பெரியாறு கேரளத்தின் ஜீவநதி என்று சொல்லப்படுகிறது.

பெரியாற்று உற்பத்தியாகும் இடத்திற்கும் இடுக்கி அணைக்கும் இடையே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் உயிர் நாடி,

  • வைகை அணையின் ஒரே நீர் ஆதாரம்
  • மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவாசய நிலம் இதை நம்பி
  • 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையம் இதை நம்பியே. .
  • தென் தமிழகத்தின் குடிநீர் தேவையும் இதை நம்பியே குறிப்பாக தேனி,மதுரை,இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்.


வற்றாத உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல் பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர் 21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,


ஒப்பந்த தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில் தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம் மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

60 ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.

இந்நிலையில் 1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது, இன்று வரை மறுத்து வருகிறது.

என்ன தான் பிரச்சனை?

அணையில் இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில் கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர் பற்றாக்குறையே காரணம்.

அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும் தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.

152 அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது 136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும் இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.இந்த செய்திகளை நான் நக்கீரன் இணையதில் இருந்து சேகரித்தது .

உச்சநீதி மன்ற தீர்ப்பையே மதிக்காத கேரள அரசு,

152 அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142 அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர் மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில் இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.

கேரளாவின் நாடகமும் மத்திய அரசின் சூழ்ச்சியும்,

கடந்தவாரம் கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாளிக்கு நம்மளால ஆப்பு வைக்க முடியாத என்ன?

  • பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று ஏற்றுமதியாகிறது.
  • ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள் கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)
  • வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.
  • தமிழகத்தில் இருந்துதான் கேரளாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்கின்றனர்.
  • கேரளாவுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் செல்கிறது. (பால்,அரிசி,பழங்கள்,மீன்கள்,காய்கறிகள் முதலியன்)
  • அட இவ்வளவு ஏன்.. நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள்.

நாம் நக்கி பிழைக்கும் நாய்களே அன்றி மனிதர்கள் அல்ல,

20 மந்திரிகளை வைத்து கேரளவால் சாதிக்க முடியும் பொழுது 39 மந்திரிகளை வைத்து இதுவரை நாம் தமிழகத்துக்கு ஒன்றையும் புடுங்க முடியவில்லையே ஏன்? காவிரியையும், பாலரையும் இழந்ததால் தான் 55 % விவசாயத்தை இழந்து
நிற்கிறோம்.நமது பாதி விவசாயம் வானம பார்த்த பூமியாக மாறி போய் உள்ளது, முல்லை பெரியாறும் கையை விட்டு போனால் நாம் நாளைய சந்ததிக்கு எதை கொடுக்க போகிறோம், அரசியல்வா(வி)யாதிகளின் சித்து விளையாட்டில் இதுவும் ஒரு அங்கம். தமிழர்கள் நம்மிடம் ஒற்றுமை இல்லை. அண்டை மாநிலங்களில், பொதுப் பிரச்சனைக்கு ஒன்று சேருவது மாதிரி, தமிழ் நாட்டில் சேருவதில்லை. அப்புறம் எங்க இருந்து உருப்புடுவது.சுயநல திராவிட கட்சிகள் மட்டுமின்றி பொதுவுடைமை பேசும் கம்யூனிஸ்டுகளும் இந்த விஷயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. பொலீட் பீரோவில் கேரளாவிற்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார்கள்.இன்னும் எத்தனை காலத்துக்கு இந்திய தேசியத்தையே நாம பேசி ஏமாற போகிறோம்,

இப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா !

நான் இந்தியன் என்றால் அந்த இந்தியனே என் இனத்தையே அழிக்கிறான் இந்தியன் ,

நான் திராவிடன் என்றால் அண்டை மாநில திராவிடனே எனக்கு தண்ணிர் தர மறுக்கிறான்? (நம் ஈழ தமிழர் அழிய திராவிட மலையாளிகள் தூது போனது).

அப்படி என்றால் நான் யார்? தமிழா ! திராவிட அரசியலையும் ஆரிய பார்ப்பானையும் நம்பி இன்னும் எத்தனை காலம் நாயினும் கீழாக சாக போகிறோம்,தமிழனாக ஒன்றுபட்டால் எல்லாமே கிடைக்கும்,புரிந்து கொள்ளாத வரை நாம் நக்கி பிழைக்கும் நாய்களே அன்றி மனிதர்கள் அல்ல.

....பகலவன்....
இப்பதிவு 4 தடவை படிக்கபட்டுள்ளது