வியாழன், 20 அக்டோபர், 2016

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 – சொருணபாரதி

தலைப்பு-புத்தன்பூமி, நூலாய்வு, சொர்ணபாரதி, நந்தவனம் சந்திரசேகர் ; thalaippu_buththanbhuumiyil_nandavanat

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம்  2/2

  அத்துடன், தான் பார்த்த ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறார். பசுமந்தான் அருள்மிகு வரதராசப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்.  அது மட்டுமில்லாமல், அந்தக் கோவிலை வழங்கிய திருவரங்கம்இராசா இராமநாத(ரெட்டியா)ர்பற்றிய குறிப்பையும் தருவதோடு, அவர்தம் கொள்ளுப்பேரன் வாசுவைச் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமின்றி, கோவிலில் தட்டில் போடப்படும் காசைக் கூட அருட்சுனைஞர் (அர்ச்சகர்) எடுத்து உண்டியலில் போட்டு விடுவதைப் பற்றியும்,  கவனிப்புடன் சொல்கிறார். கம்பையில் ஒரு துக்க வீட்டில்  விருந்துண்டதைச்  சொல்கிறார். இழு வண்டியில் (Cycle Rickshaw) பயணித்ததையும் கூறுகிறார்.
  மியான்மரில் எழுநூறாயிரத்து ஐம்பதாயிரம் (7.5 இலட்சம்) புத்த மடங்கள் இருக்கின்றன என்ற விவரமும், பொங்கிகள் எனப்படும் புத்தத் துறவிகள் அன்றாடம்  வீதி வழி சென்று, மக்கள் இடும் உணவுப் பொருட்களைத் தானமாகப் பெற்றுதான் உணவு உண்பர் என்ற விவரமும் தெரிவிக்கிறார்.
 மேலும், குமுகச்(சமூக)த் தொண்டரான செல்வி எசு.தி.வனிதாவைச் சந்தித்ததையும் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.  குமுகச் சேவைக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல், குழந்தைகளுக்குத் தேவாரம், திருவாசகம் பாடக் கற்றுக் கொடுப்பதையே தனது கடமையாகக் கொண்டிக்கும் அவரது சேவை பாராட்டுக்குரியது. தாய்மொழியை மறந்து கொண்டிருக்கின்ற அயல்நாட்டு வாழ்க்கையில், இது போன்ற  இறையியல் இலக்கியங்கள் மூலம் மொழியைக் காப்பது பெருமைக்குரியது. தமிழக வரலாற்றிலும் களப்பிரர்கள் ஆட்சிக்குப் பின் பல நூற்றாண்டுகள் இறையியல் இலக்கியங்களே தமிழ் மொழியைக் காத்து வந்தன என்பது நாம் அறிந்ததே.
  மியான்மரிலும், தமிழ்நாட்டைச் சீரழிக்கும் திரைப்படப் பித்து பரவியிருக்கிறது என்பதையும் ஒரு நிகழ்வின் மூலம் நகைச்சுவையோடு உணர்த்துகிறார்.
  திரைத்துறையைச் சேர்ந்தவரின் மணவழி உறவினர் (சம்பந்தி) எனப்பட்ட ஒருவர், பத்துக் கல்லூரிகளின் உரிமையாளர், அங்கு சென்று தவறான வரலாறுகளையும், திரிபான செய்திகளையும் கூறியபொழுதும் நடிகரின் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் கூட்டத்தினர் கைத்தட்டி ஆரவாரம் செய்ததைப் பகடி செய்கிறார்.
 பருமாவில் ‘தமிழ்மாலை’, ‘நமது நல்ல காலம்’, ‘உங்கள் எதிர்காலம்’ முதலிய இதழ்கள் வருவதைப் பற்றிச் சொல்கிறார். பெரும்பாலும் அவை திரைப்படச் செய்திகளும், விளம்பரங்களும், சோதிடம் தொடர்பான செய்திகளும்  நிறைந்துள்ளதாக உள்ளன என்கிறார்.
  நானும் அந்த இதழ்களைப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் தீவிரமான மொழி அறிவும் தமிழ் இலக்கியமும் வளர்த்த ‘இரசிக இரஞ்சனி’, ‘தொண்டன்’, ‘பருமா நாடு’ இதழ்களை எழுத்துக்கூட்டிப் படித்த நினைவுகள்  உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்றன.
  அங்கு நடைபெற்ற ஒரு திருமணத்திற்கும் அழைத்துச் செல்லப்படுகிறார் நூலாசிரியர். திருமண விருந்துக்குப் பின் அங்கு நடனமாடிய பெண்களோடு ஒளி ப்படம் எடுத்துக் கொண்டதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
  பொதுவுடைமை நன்னெறி அவையில் (சமரச சன்மார்க்க சபை) தயக்கத்தோடு பேசத் தொடங்கி, தெளிவாக உரையாற்றியதைத் தனக்குள்ளே வியந்து விவரிக்கிறார்.  தொழில் முனைவோர் கருத்தரங்குகளை நடத்துகின்ற மலேசியா பாலன் எனும் நண்பரைச் சந்தித்ததையும் கூறுகிறார். பருமாவை வளம் மிக்க நாடாக உருவாக்கிய, இன்றும் பேணுகின்ற ஐராவதி, சால்வின், சிண்டுவின் நதிகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
 இரங்கூன் துறைமுகம் ஐராவதி நதியின் கழிமுகப் பகுதியில் கடலிலிருந்து 15 புதுக்கல் (கிலோ மீட்டர்) உள் அமைந்துள்ளது. உலகின் முதன்மையான, மிகச் சிறப்பு வாய்ந்த துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும். 1967 திசம்பரில் சவுதி கப்பல் ஐராவதி ஆற்றைக் கடந்து வங்கக் கடலில் உள்வாங்கியபொழுது கப்பல் ஆடிய ஆட்டம் 50 ஆண்டுகள் கழித்தும் இன்னும் நினைவில் ஆடிக் கொண்டிருக்கிறது.
   கைலியைச் சட்டைக்கு மேல் வெளியில் கட்டுவது ஏன் என்பது குறித்தும் ஒரு சுவையான கலந்துரையாடலை நடத்தியிருக்கின்ற செய்தி நம்மையும் அந்தக் கலந்துரையாடலில் பங்கெடுக்க வைக்கிறது.
  தமிழ்நாட்டிலிருந்து எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கு வாழும் தமிழர்கள் உரையாடும்பொழுது முதன்மையாக இடம் பெறுவது ஈழத் தமிழர் போராட்டம்பற்றிய கேள்விகளும், அதன் மீதான வருத்தங்களும். அந்தத் துய்ப்பு சந்திரசேகருக்கும் ஏற்படுகிறது. அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவருக்குமே, தமிழ்நாட்டு அரசியலாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஈழத்தமிழர் போராட்டத்தின் திசைகளை மாற்றியதும், தங்கள் நலத்துக்காக ஈழ மக்கள் போராட்டத்தையே மக்களோடு சேர்த்துக் குழி தோண்டிப் புதைத்ததும் அவ்வளவு விரைவில் மறக்க முடியாதவையாக நெஞ்சில் பதிந்துள்ளன. என்ன மருந்திட்டாலும் அஃது ஆறக்கூடிய காயமுமில்லை.
  பீலிக்கான் முனிசுவரர் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் முதியோர் இல்லத்திற்குச் செல்கின்றனர். மிகவும் தூய்மையாகவும், அழகாகவும் பாதுகாக்கப்படும் முதியோர் இல்லம் அது. முதியோர்களை மிகவும் போற்றி வணங்கக் கூடிய பண்பாடு கொண்ட நாடு மியான்மர். நூலகத்திற்கும் செல்கின்றனர். பீலிக்கான் முனிசுவரன், அங்காள ஈசுவரி, பூச்சித்தாத்தா கோவில்களில் வழிபாடு செய்கின்றனர். தமிழ்நாட்டிலும் பருமியத் தமிழர்கள் குடியேறிய பகுதிகள் அனைத்திலும் தங்களது பருமியப் பண்பாட்டின் இறையியல் உணர்வின் அடையாளமாக பீலிக்கான் முனிசுவரன், அங்காள ஈசுவரி, வெட்டுடையாள் காளி, பூச்சித்தாத்தா ஆலயங்களை நிறுவி இன்னும் ஆண்டுதோறும் பருமாவில் நடைபெறுவது போலவே தீ மிதித் திருவிழாவை வழிவழியாகக் கொண்டாடி வருகின்றனர்.
 இன்னும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மியான்மரில் கால் பதிப்பது என்பது பெருமைக்குரியதாகும். தனது ஏழு நாள் பயணத்தைச் சிறப்பாகச் சொல்லும் சந்திரசேகர், மனம் நெகிழக்கூடிய ஒரு நிகழ்வையும் பதிவு செய்கிறார்.
 அனுசுயா தேவி என்கிற பெண்மணியைச் சந்தித்ததைச் சொல்கிறார். அவருக்குப் பெற்றோர் இல்லை என்பதையும், இன்னும் திருமணமாகவில்லை என்னும் செய்தியையும் மனம் நெகிழக்கூடிய வகையில் சொல்லி வரும்பொழுது, அதன் மீதான உரையாடலில் சந்திரசேகர் தலையசைக்க மாட்டாரா எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
  பருமாவில் குடும்பக் கட்டுப்பாடு என்கிற ஒன்றே இல்லை. குழந்தைகள் நிறையப் பெற்றுக் கொள்வதையே பெரும் செல்வமாகக் கருதிய காலம் உண்டு. என் தந்தையாருக்கும் பருமாவில் இருந்து வரும்போது 12 குழந்தைகள் இருந்தனர். பெரிய குடும்பமாக வாழ்வதையே பருமியத் தமிழர்கள் மிகவும் விரும்பினர். கலகலப்பான குடும்பங்களே அங்கு நிறைந்து காணப்பட்டன.
  8.7.2016 முதல் 14.7.2016 வரை ஏழு நாட்களும் நூலாசிரியர் கூடவே இருந்து அவரை விருந்தோம்பி, வழிகாட்டியாகவும் பயணப்பட்ட திரு.எம்.ஏ.கருப்பையா நம் மனத்தில் உயர்ந்து நிற்கிறார்.
  ஒரு பயணத்தில் என்னவெல்லாம் சொல்ல முடியும் என்பதைப் பல நூறு பக்கங்களிலும் சொல்லலாம்; சில பக்கங்களிலும் சொல்லிவிடலாம். அந்த வகையில், இந்த நூலில் தனது முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைப் போல, தான் சந்தித்த மனிதர்களையும், கண்டு களித்த இடங்களையும் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறேன் என்ற முன்மொழிதலோடு படைத்துள்ள இப்பயண நூல் முழு நிறைவைப் படிப்பவர்களுக்கு வழங்கக்கூடிய எளிய மொழி நடையும் நிறைய குறிப்புகளும் கொண்டுள்ளது.
  இனி வரும் காலங்களில், விரிவான பயண நூல்களை ‘நந்தவனம்’ சந்திரசேகர் வழங்குவார் என்கிற நம்பிக்கையையும் விருப்பத்தையும் பதிவு செய்து, அவருடைய தொடர் பயணங்களும் படைப்புகளும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
தமிழன்புடன்
கவிஞர் சொர்ணபாரதி,
ஆசிரியர் – கல்வெட்டு பேசுகிறது,
பொதுச் செயலாளர் – உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்,
பொதுச் செயலாளர் – பாரதி கலை இலக்கிய மன்றம்,
செயல் தலைவர் – ‘பொன்மனம்’ கலை இலக்கியப் பேரவை,
துணைச் செயலாளர் – முத்தமிழ் ஆய்வு மன்றம்,
அமைப்பாளர் – ‘பகிர்வு’ நவீன கலை இலக்கியப் பரிமாற்றம்.
பேச: 9677110102, 9884404635.
மின்னஞ்சல்:
ssornabharathi@gmail.com
kalvettu1996@gmail.com

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 : பெங்களூரு முத்துச்செல்வன்




தலைப்பு-ஆரியச்சூழ்ச்சி, பெரியார், முத்துச்செல்வன் ;thalaippu_aariya-chuuzhchi_muthuchelvzn

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

4/9

  பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் குறித்து நாவலர் நெடுஞ்செழியன்,  “மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயப் பற்றும், வருணாச்சிரம சனாதனதருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும்உண்மை.
  மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்(பிள்ளை) அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவர் குறிப்பிட்டுள்ள மறு என்பது, பரிமேலழகர்தம் உரையில் புகுத்தியுள்
ள, எவராலும் ஒப்புக்கொள்ள இயலாத, வடலூலாரின் சில கொள்கையைப் பற்றியதாகும். பரிமேலழகரால் புகுத்தப்பட்ட மாசுவும், மறுவும் அறவே நீக்கப்பட வேண்டும் என்பதுதான் பேராசிரியர் சுந்தரம் (பிள்ளை)அவர்களின் பேரவாவாகும்” என்று குறிப்பிடுகிறார். (நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை; நன்றி: அகர முதல)
 சமயக் கணக்கர் மதிவழிக் கூறாது
 உலகியல் கூறிப்பொருளிது என்ற வள்ளுவன்
என்று கல்லாடனாரும்,
 வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக் கொருநீதி
என்று பேராசிரியர் சுந்தரனாரும் கூறியவற்றை மேலைநாட்டறிஞர் துறு (Rev.W.H.Drew), “ஒரு பிரிவினர்க்கே உரிய கோட்பாடுகளைக் கொள்ளாது விலக்கி, உலக மக்கள் அனைவருக்கும் ஒருங்கே பொருந்தும் உண்மைகளையெ தெரிந்தெடுத்துத் திருவள்ளுவர் மொழிந்துள்ளார். இவ்விரிந்த உணர்வால் மற்ற மநு முதலிய நூல்களி;ல் கூறப்பெறும் கண்மூடித்தனம் எதுவும் இன்றி நூல் மேலோங்கித் திகழ்கின்றது” என்று வழிமொழிந்துள்ளார். இக்கருத்துகளே தேசிகனுக்குரிய மறுப்புகளாம்.
  “இந்த நாடு நம்முடைய நாடு. இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100க்கு 97 பேர்கள் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் பண்பாட்டிற்கும் நம் பழக்க வழக்கங்களுக்கும்  தொடர்பில்லாத – நம் நாட்டு எண்ணிக்கையில் 100க்கு 3 பேராகவுள்ள – இந்த நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பிராமணர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமசுகிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்துவரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், பலருக்கு முப்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை,  தகுதி என்ன? பிராமண ‘மேலோர்’ மொழியாக – சமசுகிருதத்துக்கு இருந்த  தகுதி என்ன? என்பதுபற்றிய பல  செய்திகள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன்.  ஏறத்தாழ 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரிந்திருக்ககூடும்.” என்று தந்தை பெரியார் 1960 –இல் கூறியது 55 ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருப்பது ஏன்? காலம் செல்லச் செல்ல கல்வி வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் பொருளிய வளர்ச்சியும் பெருகி வரும் நிலையில் பொருளியக் கண்ணோட்டமே இளைஞர் மனத்தை ஆட்கொண்டிருப்பதை உணர முடிகின்றது. அவர்களுக்கு. குறிப்பாகப்  பிராமணர் அல்லாத தமிழ் இளைஞர்களுக்குத் தங்கள் சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை தெரியவில்லை; தெரிந்து கொள்ளவும் முயலுவதில்லை. அதைப் போலவே தம் தாய்த் தமிழின் நிலையையும் அவர்கள் உணரவில்லை. அதைத்தான் தந்தை பெரியார் அன்றே சுட்டிக்காட்டியுள்ளார்.
  இன்று நடுவண் ஆட்சியில் உள்ள சங்கப் பரிவாரத்தினர் தங்கள் இந்துதுவ வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகச், சமற்கிருதத்தைக் காசுமீரம் முதல் கன்னியாகுமரி வரையில் எப்பாடு பட்டேனும் திணிப்பதன் மூலம் செத்த அந்த மொழியை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்று வருகின்றனர். அது அவர்களுடைய இந்துத்தேசியத்தின் ஒரு கூறு. அதுதான் அவர்கள் விரும்பும் ‘தேசியம்.’
  தேசியம் என்பதே தவறான கருத்தியல் என்பதைத் தந்தை பெரியார், “தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமை மிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக் கொள்ளப் பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. ….. இந்தச் சூழ்ச்சிகளுக்கு நமது அமைச்சர்கள் விபீடணர்களாகிவிட்டார்களே என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இந்தி நுழைவால் உண்மைத் தமிழர்களுக்கு எந்தவிதப் பயனும் ஏற்படாது. கடுகளவு  பயன் கூட ஏற்படாது. அதற்கு மாறாக எவ்வளவோ கேடுகள் வந்து சூழும். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக நாம் போற்றிக் காப்பாற்றிவந்து, கடைசிக் காலத்தில் கைவிட்டுத் தற்போது வெகு கட்டப்பட்டுப் பெற்ற வளர்ந்துவரும் தமிழ்ப் பண்பு அடியோடு கெட்டுப் போகும்” என்று அறிவுறுத்தியுள்ளார். அது இந்தி நுழைவு குறித்துக் கூறப்பட்ட கருத்தாயினும் சம்ற்கிருதத்துக்கும் பொருந்துவதாகவே உள்ளதை உணரலாம்.
(சென்னை தூய மேரி கூடத்தில் 17.07.1948 அன்று ஆற்றிய உரையிலிருந்து, விடுதலை 20.07.1948)
(தொடரும்)
பெங்களூரு முத்துச்செல்வன்

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 – க.வி.விக்கினேசுவரன்


தலைப்பு-காலத்தின் கட்டாயம்3/-விக்கினேசுவரன் ; thalaippu_thannaatchi_kaalathinkattaayam-vigneswaran

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3

 

நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன?
  ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது.
  ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற, வரலாற்று அளவில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத கருத்தை அதன் பின் வெளிவிட்டனர்.
  ஆகவே, சிங்கள மொழியையும் பௌத்த சமயத்தையும் பௌத்த சிங்களவர் மிகக் குறைவாக வாழும் பகுதிகளில் கட்டாயமாகத் திணிக்கக்கூடும் என்ற அச்சம் எமக்கு இருக்கின்றது. அந்த வழியில்தான் அண்மைக் கால நடவடிக்கைகள் தெற்கிலிருந்து முடுக்கி விடப்பட்டுள்ளன. இது 1972ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே கூர்மம் பெற்று வருகின்றது. பௌத்தக் கோயில்கள் கட்டுவது பற்றி, புத்தச் சிலைகள் அமைப்பது பற்றி ஏற்கெனவே கூறி விட்டேன்.
  தமிழ் பேசும் எமது பகுதிகளில் இன்னும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் காவல் நிலையங்களில் எழுதிக் கொள்ளப்படுகின்றன. மொழிபெயர்ப்புகளைத் தருவதாகச் சென்ற கிழமை(வாரம்) கூட எமக்கு அறிவிக்கப்பட்டது. எமது வடக்கு – கிழக்குப் பகுதிகளில் எமது தாய்மொழியில் நடவடிக்கைகளை நடாத்திச் செல்ல எமக்கு உரித்தில்லை.
  எமது நிலங்கள் பறி போகின்றன. படையினர், மாகாணத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு இங்கே  குடியிருக்க எல்லா வசதிகளும் செய்து கொடுக்கின்றனர். எனவே, வடக்கு கிழக்கைச் சிங்கள பௌத்தப் பகுதியாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எமது மொழியையும் சமயங்களையும், மரபுகளையும் பாதுகாக்க வடக்கு – கிழக்கு இணைப்பைக் கோரி நிற்கின்றோம். வடக்கு, கிழக்குப் பகுதிகள் தமிழ் பேசும் மக்களின் மரபார்ந்த(பாரம்பரிய) வாழ்விடங்கள் என்பதை வலியுறுத்தவே வடக்கு – கிழக்கு இணைப்பு இன்றியமையாதது ஆகின்றது. அதனைச் சிங்கள மக்கள் ஏற்பார்களா என்றதொரு ஐயம் எம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
  உண்மையைச், சிங்கள மக்கள் ஏற்க வேண்டும் என்பதே எமது வாதம். வடக்கு-கிழக்கில் காலம் காலமாகத் தமிழ் பேசும் மக்களே வாழ்ந்தார்கள் என்பதைச் சிங்கள மக்கள் ஏற்காவிட்டால் பன்னாட்டு வரலாற்றாசிரியர்களை அழைத்து நாம் கூறுவது சரியா அல்லது அண்மைக் காலங்களில் பெரும்பான்மையினர் கூறி வருவது சரியா என்பதை ஆராய்ந்து பார்க்கட்டும். சிங்கள பௌத்த மக்கள் தலைமுறை தலைமுறையாகப் பல காலம் வாழ்ந்த வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்கள் வந்தேறு குடிகளாக நுழைந்து வல்லாளுகை செய்தார்கள் என்பதை வரலாற்றுப்படி நிறுவிக் காட்டினால் நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்புக்கான கோரிக்கையைக் கைவிடுகின்றோம். அண்மைய பல வரலாற்றுக் கண்டுபிடிப்புக்கள், தொல்பொருள் ஆராய்ச்சிகள், புதிய தொழில்நுட்பப் பொறிமுறைகளின் அடிப்படையில் வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் நீண்ட கால இருப்பை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
 திடீரென்று அரசியல் யாப்பு ஒன்றைத் தமிழ் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். சிங்கள மக்கள் எதிர்க்கக் கூடும் என்பதற்காக எங்கள் உரிமைகளை எந்த அரசும் சிதைக்க முயற்சிக்கக் கூடாது. சென்ற அரசு இருந்த காலத்தில் 18 தடவைகள் கமுக்கமாக(இரகசியமாக)ப் பல கலந்துரையாடல்கள் தமிழ் மக்கள் தலைவர்களுக்கும் அப்பொழுதைய அரசுக்குமிடையில் நடைபெற்றன. அவை பற்றி எதனையும் எவரும் வெளியிடவில்லை.
  அரசியல் யாப்புகளினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் நாங்களே. எங்கள் கருத்துகளைச் செவிமடுக்காவிடில் எமது இனத்தின் அவலங்கள், ஐயங்கள், கெடுதிகள் தொடர்ந்தே செல்வன. ஆகவேதான் இந்தப் பேரணி மூலமாகத் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த அக்கறைகளை நாம் வெளிக்கொண்டு வரும் விதத்தில் இந்தப் பேரணியைக் கட்சி வேறுபாடின்றி நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
  (இந்தப் பேரணி) இவ்வேளையில் ஏன் என்று கேட்கின்றார்கள் நம்மவரில் சிலர். இவ்வேளையில் எமது அக்கறைகளை ஊரறிய, நாடறிய, உலகறிக் கூறாவிடில் பின் எப்பொழுது கூறப் போகின்றோம்? எமது எதிர்பார்ப்புக்கள் வரப்போகும் அரசியல் யாப்பினால் நிறைவுபடுத்தப்படுவன என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுவரை காலமும் தம் கையில் வைத்திருந்த ஆட்சியுரிமையை எம்முடன் பெரும்பான்மையினத் தலைவர்கள் முறையாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நாம் கடந்த காலப் பட்டறிவின் அடிப்படையில் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு பகிர்ந்தார்களேயானால் எமக்கு மகிழ்ச்சி. இல்லை எனில் எமது அக்கறைகளை எப்பொழுது நாம் வெளிக்காட்டப் போகின்றோம்?
  மத்தியின் மேலாதிக்கம் தற்பொழுதும் தொடர்கின்றது. படையினரின் உலாவல் தொடர்கின்றது; வல்லாளுகைகள் தொடர்கின்றன; அரசியல் கைதிகள் சிக்கல் தொடர்கிறது; காணாமல் போனோர் சிக்கல் தொடர்கின்றது; சமய அளவிலான வல்லாளுகையும் தொடர்கின்றது; வட மாகாண மக்கள் சார்பாளர்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நேரத்தில் எமது அக்கறைகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால் எந்த நேரத்திலும் முடியாது போய் விடும்.
  புதிய அரசியல் யாப்பு இயற்றுதலானது எமது அக்கறைகளை உள்ளேற்க வேண்டும்! இணைந்த வடக்கு–கிழக்கு நிகருரிமை அலகை உறுதிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இறுதித் தீர்வு கட்டியமைக்கப்பட வேண்டும்! நிலம், காவல், நிதி போன்ற ஆட்சியுரிமைகள் முழுமையாக எமக்கு வழங்கப்பட வேண்டும்! இவற்றை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்! படையினர் படிப்படியாகக் குறிப்பிட்ட காலத்தினுள் திரும்பப் பெறப்பட வேண்டும்! சட்டத்திற்குப் புறம்பாக புத்தக் கோயில்கள், சிலைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும்! வன்கொடுமைத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு தமிழ் பேசும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்! போர்க் குற்றங்கள் தொடர்பாகப் பக்கச் சார்பற்ற பன்னாட்டு உசாவல் (விசாரணை) நடைபெற வேண்டும்! காணாமல் போனோர் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்! இவற்றையெல்லாம் வலியுறுத்தவே இந்தப் பேரணி.
  இவ்வாறான எமது அக்கறைகளைக் கருத்தில் கொள்ளாது, அவற்றிற்குத் தீர்வைக் காணாமல், நல்லிணக்கம் பற்றியும் புதிய அரசியல் யாப்புப் பற்றியும் பேசுவது  செம்மங்கியைக்(காரட்டு) குதிரைக்கு முன் பூட்டுவதற்கு ஒப்பானது.
  எமது சிங்கள உடன்பிறப்புக்கள், ஏன்… எமது தரைப்படை, கடல்படை, வான்படை உடன்பிறப்புக்கள் எமது மனநிலையைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்! எமது இன்றைய கேள்விகளுக்குப் பதில் கூற ஆட்சியில் உள்ளோர் கடமைப்பட்டுள்ளார்கள் எனக் கூறி என் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.
வாழ்க தமிழ்! எழுக தமிழ்!
நன்றி! வணக்கம்!
நீதியரசர் க.வி.விக்கினேசுவரன்,
முதலமைச்சர்,
வட மாகாணம்
  • ‘எழுக தமிழ்’ நிகழ்வில் ஆற்றிய உரை
  • தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்

UN ‘peace-builders’ threaten resettled Tamils

UN ‘peace-builders’ threaten resettled Tamils during UN Special Rapporteur's visit to Jaffna

[TamilNet, Friday, 14 October 2016, 23:07 GMT]
A group of Sinhalese and Tamil officials of the so-called ‘Peacebuilding Fund’ (PBF) attached to the United Nations Development Assistance Framework (UNDAF) went to the extent of threatening ‘resettled’ Tamil families, who have been dumped at Vaazhalaay, a locality of limestone outcrops and marsh along the Tho'ndaimaa-aa'rau lagoon, when the PBF group wanted to document the so-called resettlement that has been carried out by the occupying SL military and ‘Seva Lanka’, a Sinhalese-led outfit. The families were instructed not to complain anything in video recordings, but only to praise that the SL military had helped them, the people told TamilNet after the episode on Wednesday. The PBF visit has taken place in connection with the fact-finding trip by UN Special Rapporteur on Minority Issues Rita Izsák-Ndiaye, who was also visiting Jaffna this week.
Vazhalaay
The location of Vazhalaai [Image courtesy: Google Earth. Legend by TamilNet]
The PBF visitors visiting Vazhalaay wanted the Tamil families to praise the SL military that had constructed the houses to them. But, the families were having a lot of complaints. They were told not to come up with the complaints in the video recordings and were asked to praise the ‘reconciliation’ work. The families, in fact wanted to tell a lot how they were deceived into the settlement while the SL military was still occupying their villages.

In the meantime, Ms Rita Izsák-Ndiaye, who was on a 10-days visit to the island, was reminded by Tamil civil activists in Jaffna that one of the underlying causes to the decades-long conflict in the island was the outside and Colombo-based classification of Tamils as a minority community in the island.

Commenting on Rita Izsák-Ndiaye's visit to the island, independent political activists in Jaffna told TamilNet that the continued ‘minority’ approach would only contribute to structural genocide on Eezham Tamils unless the Special Rapporteur failed to recognise the perspectives of the affected people and reports it genuinely to the UN system.

Commenting further, the activists said that the Tamils were not a minority in the island. Tamils constitute a nation, which has not been recognized by the SL State, its constitution and the successive regimes since the creation of Ceylon, which took the form of genocidal ‘Sri Lanka’ in 1972. It was the British colonial outlook of perceiving Eezham Tamils as a minority, that enabled the Sinhala regimes to transform it further into the genocidal concept, they said adding how the 50-50 demand from Tamils was negated by the British.

Apart from the behaviour of the local UN mechanism in Colombo, it is upto Ms Rita Izsák-Ndiaye to prove whether she is an Independent Expert or an Agenda-Driven Expert, they further said.

If Rita Izsák-Ndiaye is really an Independent Expert and grasps the underlying causes of the conflict as well as the current scenarios, her report to UN Human Rights Council would contribute to de-construct the deceptive discourses, built upon each other by the SL State machinery and the United Nations Development Assistance Framework (UNDAF).

Otherwise, her visit will also end up as just another report-producing exercise serving the agenda-setters and her report would go down in history documenting how the UN system again and again continued its failures, even after recongnising its “systemic failure” in responding to the final phase of the genocidal war in Vanni in 2009, the Tamil acvisits further commented.

Credibility-lost Commonwealth, UN ignored even by small States

Credibility-lost Commonwealth, UN ignored even by small States

[TamilNet, Thursday, 13 October 2016, 23:05 GMT]
The decision of tiny Maldives to leave the Commonwealth, because of criticism against its human rights record, only shows where the credibility of the Commonwealth stands today, commented Tamil activists for alternative politics. Had the organisation cared to take action on ‘Sri Lanka’ on the worst ever crime of genocide committed in the region and had proved its ‘human rights’ credibility, the neighbouring Maldives would have thought twice before becoming defiant. The Commonwealth Meet in Australia in 2011 deciding on Rajapaksa’s Colombo presiding over the organisation in the following term, as though nothing had happened there, was the worst ever defiance to human rights committed by the Commonwealth. This has set the doom of that organisation.

There is no China or Russia in the Commonwealth to cite the excuse of veto. The Commonwealth patronage of genocidal Colombo has come from the UK playing second fiddle to the US agenda, the US bandwagon in the Commonwealth (except Canada and New Zealand) and India. Australia played the worst role at that time.

The Commonwealth has now lost all moral grounds to question the Maldives. If Mr. Yameen receiving Chinese help and the UK grooming his opposition for ‘regime change’ are the reasons behind Commonwealth’s concern over the archipelago, then it is a further loss of credibility. Unfortunately, people of the Maldives might not have realised it earlier that allowing their regimes to always blindly support Colombo would one day reflect on their own human rights situation.

Meanwhile, the UN that nakedly lost credibility on the question of Eezham Tamils is now openly challenged by the Philippines, Cambodia and others. While the UNHRC has nothing to boast about on its silver jubilee this year, the destiny of all the international organisations reminds us of the times of the failures of the League of Nations leading to the World War II.

The genocidal ‘Sri Lanka’ paradigm set by all the Establishments being the hub of all the dangerous developments in the region has to be carefully noted by world public opinion.