ஞாயிறு, 31 ஜூலை, 2016

புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் – கனிமொழி

தலைப்பு-கல்விக்கொள்கை-கனிமொழி : thalaippu_kalvikolgai_kanimozhi

  சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்  –  நெல்லையில் கனிமொழி

  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துச் சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்து கொண்டு  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  பின்வருமாறு பேசினா் :
சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டா என்று ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.
  கல்வியில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது. சமூக நீதியைக் காக்கப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இனி அதைக் கீழ் இறங்க  விடமாட்டோம். கல்வியில் உலகத் தரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  ஆனால் உலகத் தரம் வாய்ந்த கல்வி எத்தகையது என்பது  முதன்மையானது. எந்த மொழியில் பயின்றாலும் அந்த மொழியில் உலகத் தரம் உள்ள கல்வி இருக்க வேண்டும். சமற்கிருத மொழியில் உலகத் தரமான கல்விக்கு வாய்ப்பு உள்ளதா? புதிய கல்விக் கொள்கையின் படி 10- ஆம் வகுப்பில்  தோல்வியுறும் மாணவன் உயர் கல்வி படிக்க முடியாது. இது பழைய குலக் கல்வித் திட்டம் போல் உள்ளது. குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்த  இராசாசியை நீக்கி விட்டு அனைவருக்கும் சமமான கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த காமராசரை ஆட்சியில் கொண்டு வந்தோம்.
  இன்று மத்திய அரசு அதே குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயல்கிறது. தற்போது மத்திய அரசின் கல்விக் குழுவில் ஆர்.எசு.எசு. அமைப்பினர்தான் உள்ளனர். எனவே அந்தக் கல்விக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.
  இந்தப் போராட்டம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. முழுமையாக ஈடுபடும். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையைத் திணித்தால் போராட்டத்தால் தமிழகம் தீப்பற்றி எரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை, பெண்களுக்கான போட்டிகள்




:தலைப்பு-தமிழ்க்குடில் muthirai_thamizhkudil_arakkallalai

தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்

  ஒவ்வொரு வருடமும் தமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்துவது தாங்கள் அறிந்ததே. இந்த வருடத்திற்கான போட்டிகளின் விவரங்கள் கீழே:
போட்டி எண் 1
திரு. காமராசர் அவர்களின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் மூன்றாம் ஆண்டு கட்டுரைப்போட்டி
தலைப்பு : ‘இன்றைய நெருக்கடியான கல்விச்சூழலில் காமராசர்’
விதிமுறைகள்:
  1. போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும்
இருக்கலாம். (பள்ளி மாணவர்கள் தவிர)
  1. குறைந்தது 4 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
  2. படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்கென எழுதி அனுப்பவேண்டும்.
  1. உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில், இன்றைய கல்விச்சூழலை அவர் எப்படி கையாண்டு இருப்பார் எனக் கட்டுரைகள் படைக்கவேண்டுகிறோம்.
  1. படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை
மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படவேண்டும் குழுமத்திலோ, நிருவாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
  1. படைப்புகளை இலதா, பாமினி ஒருங்குகுறியில் தட்டச்சிட்டு சொல்(வேர்டு) ஆவணமாகஅனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும் வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டி எண் : 2 – தமிழ்க்கடல் திரு. மறைமலை அடிகளாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டுக்  கவிதைப்போட்டி
தலைப்பு : பொதுவான தலைப்பு இல்லை – விருப்பமான, பொருத்தமான தலைப்பில்…
விதிமுறைகள் :
  1. போட்டியில் பங்குகொள்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதையைத்தங்கள் சொந்தக்குரலில் ஒலிப்பதிவு செய்து  (MP3 Format ) தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
  1. ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்தத் தன் விவரமும்கொடுக்காமல் கவிதையின் தலைப்பு, கவிதை, கவிதைக்கான களம், கவிதையின் சூழல்மற்றும் கவிதை என்ன சொல்கிறது என்னபனவற்றைக் குறிப்பிடவும்.
  1. மின்னஞ்சலில் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரி இவற்றோடு தாங்கள் பதிவுசெய்த கவிதையினைத் தட்டச்சிட்டு மின்னஞ்சலில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பரிசு விவரம்:
முதல் பரிசு மற்றும் இரண்டாவது பரிசு: வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட  நினைவுச்சின்னமும், சான்றிதழும் வழங்கப்படும்.
மூன்றாவது பரிசு : நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் – tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய கடைசி நாள்:  கட்டுரைக்கு…. ஆடி 31, 2047 / 15.08.16
கவிதைக்கு…..ஆடி 26, 2047 / 10.08.16
தொடர்ந்து தமிழ் தொடர்பான போட்டிகளை அறிவித்து அதை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இந்தப் போட்டிகளும் சிறப்புற அனைவரும் கலந்து கொள்ளுங்கள். தங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் எழுதச் சொல்லுங்கள்

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும் – இராதாகிருட்டிணன்




மரிக்கார் இராமதாசு : marikkarramdoss02

மரிக்கார் எசு.ராமதாசின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

மாநிலக்கல்வியமைச்சர் இராதாகிருட்டிணன்


  இலங்கையின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான மரிக்கார் எசு. இராமதாசு  சென்னையில்  ஆனி 29, 2047 / சூலை 13, 2016 அன்று காலமானார்.
   இது குறித்த இரங்கல் செய்தியில் மாநிலக் கல்வியமைச்சர் வே.இராதாகிருட்டிணன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
  இலங்கையின் பழம் பெரும் நடிகரான கோமாளிகள் புகழ் மரிக்கார் எசு.இராமதாசின் மறைவு இலங்கைக் கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவருடைய துணிச்சல், அவருடைய ஆளுமை, திறமை, என்பன அவருக்கு நிகர் அவரே  என்பதை மெய்ப்பிக்கும். அவரது துயரால் கலை உலகே கலங்கிப்போயிருக்கின்றது. தமிழ், சிங்கள மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் மறைந்த மரிக்கார் எசு. இராமதாசு.
   இலங்கையில் ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு நிகராகப் படங்களை  உருவாக்கி 100 நாட்கள் இலங்கைத் திரையரங்குகளில் ஓட்டி  அருந்திறல் படைத்தவர் மறைந்த மரிக்கார் எசு. இராமதாசு. குறிப்பாக,  அவருடைய நடிப்பில் வெளிவந்த வி.பி.கணேசன் எழுதி உருவாக்கிய ‘நான் உங்கள் தோழன்’ அவருடைய சொந்தஆக்கமான ‘கோமாளிகள்’, ‘ஏமாளிகள்’ போன்ற திரைப்படங்களை இலங்கை நேயர்கள் இன்றும் மறக்கவில்லை.
  மறைந்த மரிக்கார் எசு. இராமதாசு. வானொலி, மேடை நாடகங்களில் பெரும் புகழ்பெற்று விளங்கிய ஒரு நடிகர். இந்திய  மரபுவழித் தமிழரான நடிகர் எசு. இராமதாசு. இலங்கை வானொலியில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பதித்திருந்தவர். வானொலி மூலமாகப் பல நாடகங்களை அரங்கேற்றியவர். மரிக்கார் எசு. இராமதாசு என்றால் அவருக்கென்றே ஒரு தனி  அன்பர்கள் கூட்டம் இருந்தது. இன்று அவர் இலங்கையில் இருக்கின்ற பொழுது இறந்திருப்பாராக இருந்தால் இந்த  அன்பர்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசமும் மதிப்பும் தெரியவந்திருக்கும். அவருடைய நடிப்புகள்; இன்றும் எம் கண் முன் தெரிகின்றது. அவருடைய இழப்பு என்றுமே ஈடுசெய்ய முடியாத  ஓர் இழப்பு
இவ்வாறு  அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
நன்றி  இரிசுவான் சேகுமுகைதீன், தினகரன், இலங்கை  
பா.திருஞானம் – 07777375053

Murder coverup of Tamil youth by SL Police OIC alleged

2ND LEAD (Adds corrections)

Murder coverup of Tamil youth by SL Police OIC alleged

[TamilNet, Saturday, 30 July 2016, 21:39 GMT]
A Sinhala Police Officer-in-Charge, Chintaka Bandara, who is currently the head of SL Police at Chavakachcheari, was responsible for targeting a 26-year-old Tamil youth, who was later subjected to torture and murder in his custody in 2011, after two SL military intelligence officers took photos and video of an event during the Tamil Heroes Remembrance week in 2011. A white van squad abducted two young activists after the Tamil Heroes Day related event attended by two TNA parliamentarians S Sritharan, E. Saravanapavan and Emmanual Arnold (who later became NPC councillor). The two youths were handed over to the OIC at Chunnaakam. A few days later, the body of one of the victims, Sumanan Sriskandarajah, was recovered from Ira'nai-madu tank in Ki'linochchi district. SL police explained that the victim had drowned while escaping from custody during a field investigation.

Recent evidence reveal that after the abduction, the SL police had implicated the two in connection with an unrelated crime, and had severely assaulted the victims asking whether they wanted Tamil Eelam. Sumanan subsequently died due to injuries sustained from the Police attacks and his body was dumped into Ira'nai-madu Tank.

The two youths were behind organising the distribution of books at Aayak-kadavai School in Punnaalaik-kadduvan on the occasion of Tamil Heroes Day Remembrance in November 2011.

After they were abducted by the white van squad operated by the SL military intelligence and subjected to torture, they were at the custody of Chintaka Bandara, who was the OIC of Chunnaakam Police Station at that time.

The SL police implicated the two youth in a theft case in which three other criminals were involved.

The slain youth, Sumanan Sriskandarajah, was the 5th suspect.

Torture continued under the custody of SL Police at Chunnaakam, according to the survivor, who was the 4th suspect in the fabricated case by the SL Police.

The fourth suspect, who has survived the torture, is a relative of the late S. Puleedevan, the director of LTTE's Peace Secretariat. Puleedevan was assassinated by the SL military after he walked into SL military and surrendered at Mu'l'livaaykkaal on 18 May 2009 carrying white flags along with LTTE's Political Head B. Nadesan and 40 others on the advice of Norwegian Peace Envoy Erik Solheim and UN officials.

The details of the torture, murder and the cover-up of the case of Sumanan Sriskandarajah have surfaced after the latest hearing of the case on the theft issue on 25th July at Mallaakam Magistrates’ Court, where the case was pending for the last 5 years.

During the Rajapaksa regime, there was a drive to recruit subservient Tamil police constables into the SL police and the EPDP was providing such recruits. Two such ‘Tamil police constables’, known by their first names Mayooran and Thayalan, were also working under the SL Police OIC Chintaka Bandara at Chunnaakam during the time of Sumanan's abduction and murder.

Today, the same squad is reportedly operating at Chavakachcheari Police Station under the same Sinhala OIC who was earlier at Chunnaakam.

The relatives of the survivors and those who represent the slain victim are seriously concerned of the security of the eyewitnesses as the alleged murderers are still in charge of police affairs in the occupied country of Eezham Tamils.

In the meantime, the Magistrates’ Court has instructed the same SL Police Department to produce a comprehensive report within the next three months, informed sources said.

SLMC for North-East merger, NPC should do more for Tamil-Muslim unity

SLMC for North-East merger, NPC should do more for Tamil-Muslim unity: SLMC Vanni Wing

[TamilNet, Friday, 29 July 2016, 10:39 GMT]
Muthalip Bawa Farook, a former parliamentarian representing Sri Lanka Muslim Congress (SLMC) from Vanni electoral district, SM Sagee and Noor Mohammed Alam from Mannaar, who also represent the executive committee of the SLMC in North on Thursday said that their party, which has been struggling to maintain its integrity amidst the dividing politics of Colombo, has never been against the Tamil demand for a unified North-East. In fact, the SLMC’s stated party position was that there should be a distinct mechanism to ensure the rights of the Muslims in a unified North-East, the SLMC Vanni district representatives said. At the same time, the SLMC’s northern wing was seeking Northern Provincial Council (NPC) Chief Minister C.V. Wigneswaran and the NPC to do more in order to establish Tamil-Muslim unity at the provincial level.

Mr Farook, who also hails from Mannaar said his personal position was that only an international investigation would bring justice to the issue of the missing persons.

The clarification from the Vanni district SLMC representatives comes following a controversial remark from SLMC Leader Rauff Hakeem, who is a minister in Maithiripala regime, that Tamils demanding international investigations against the SL military would not be conducive for ‘reconciliation’. The SLMC Leader and SL Minister had made the statement at a memorial event of the first TNA leader M. Sivasitharamparam.

The SLMC Northern Wing representatives were also seeking active NPC engagement in protecting the rights of Tamil-speaking Muslims who have been uprooted from their settlements in the areas bordering Vilpaththu in Mannaar district, said Noor Mohammed Alam from Mannaar, who has been active in giving leadership to the affected Tamil-speaking fishermen in the North.

Apart from the controversies and criticisms on Mr Hakeem, the SLMC representatives were backing him as the leader of the SLMC for his contribution in keeping the integrity of the SLMC amidst the dividing politics from Colombo, they said.