திங்கள், 17 மே, 2010

தில்லி ரயில் நிலை​யத்​தில் கூட்ட நெரிச​லில் சிக்கி 2 பேர் சாவு



புது தில்லி,​​ மே 16: ​ தில்லி ரயில் நிலை​யத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை கூட்ட நெரிச​லில் சிக்கி பெண்​ணும்,​​ சிறு​வ​னும் உயி​ரி​ழந்​த​னர்;​ 8 பேர் காய​ம​டைந்​த​னர்.​க​டைசி நிமி​ஷத்​தில்,​​ 2 ரயில்​கள் புறப்​ப​டும் பிளாட்​பார்ம்​கள் மாற்​றப்​பட்​ட​தால்,​​ ரயி​லைப் பிடிப்​ப​தற்​காக பய​ணி​கள் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடி​னர்.​ இத​னால் இந்த துய​ரச் சம்​ப​வம் நிகழ்ந்​துள்​ளது.​ப​லி​யான பெண் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி ​(35) என்று கண்​ட​றி​யப்​பட்​டுள்​ளது.​ இறந்​து​போன சிறு​வ​னுக்கு சுமார் 10 வயது இருக்​கும்,​​ அவன் யார் என்​பது அடை​யா​ளம் காணப்​ப​ட​வில்லை.​இந்த சம்​ப​வம் குறித்து விசா​ரணை நடத்தி,​​ இதற்​குக் கார​ண​மா​ன​வர்​கள் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்​கு​மாறு ரயில்வே உய​ர​தி​கா​ரி​க​ளுக்கு அத்​துறை அமைச்​சர் மம்தா பானர்ஜி உத்​த​ர​விட்​டுள்​ளார்.​எப்​போ​துமே கூட்​டம் அதி​கம் காணப்​ப​டும் தில்லி ரயில் நிலை​யத்​தில்,​​ கோடை விடு​முறை காலம் என்​ப​தால் ஞாயிற்​றுக்​கி​ழமை பய​ணி​கள் கூட்​டம் சற்று அதி​கம் காணப்​பட்​டது.​பிற்​ப​கல் 2.45 மணி​ய​ள​வில்,​​ தில்​லி​யில் இருந்து முஸô​பர்​பூர் செல்​லும் சம்​பூ​ரண கிராந்தி ​(முழுப் புரட்சி)​ எக்ஸ்​பி​ரஸ்,​​ தில்​லி​யில் இருந்து பகல்​பூர் செல்​லும் விக்​ர​ம​சீலா எக்ஸ்​பி​ரஸ் ஆகி​யவை வரும் பிளாட்​பா​ரம்​கள் மாறு​வ​தாக அறி​விப்பு வெளி​யா​னது.​அந்த ரயில்​கள் கிளம்ப சில நிமி​ஷங்​களே இருந்​த​தால்,​​ பய​ணி​கள் அனை​வ​ரும் தங்​கள் பொருள்​க​ளு​டன் முண்​டி​ய​டித்​துக் கொண்டு ஓடி​னர்.​ இத​னால் 12 மற்​றும் 13-வது பிளாட்​பார்ம்​க​ளில் கடும் கூட்ட நெரி​சல் ஏற்​பட்​டது.​÷இ​தில் பலர் கீழே விழுந்து மிதி​பட்​ட​னர்,​​ நெரி​ச​லால் சிலர் மூச்​சுத்​தி​ண​றல் ஏற்​பட்டு மயக்​க​ம​டைந்​த​னர்.​ இதில் பகல்​பூ​ரைச் சேர்ந்த சோனி என்ற பெண்​ணும்,​​ ஒரு சிறு​வ​னும் உயி​ரி​ழந்​த​னர்.​ மேலும் மூன்று பெண்​கள் உள்​பட 8 பேர் காய​ம​டைந்​த​னர்.​ர​யில்வே துறை​யின் அலட்​சி​ய​மான போக்​கால்​தான் 2 பேர் உயி​ரி​ழந்​த​தாக பய​ணி​கள் பலர் குற்​றம்​சாட்​டி​னர்.​இது குறித்து ரயில்வே கோட்ட மேலா​ளர் அஸ்​வின் லுகானி கூறி​யது:​13-வது பிளாட்​பார்​மில் வர​வேண்​டிய சம்​பூ​ரண கிராந்தி எக்ஸ்​பி​ரஸ் 12-வது பிளாட்​பார்​மி​லும்,​​ 12-வதில் வர​வேண்​டிய விக்​ர​ம​சீலா எக்ஸ்​பி​ரஸ் 13-வது பிளாட்​பார்​மி​லும் மாறி வந்​து​விட்​டது.​இந்த இரு ரயில்​க​ளுமே சுமார் 2.45 மணி​ய​ள​வில் கிளம்ப வேண்​டும் என்​ப​தால் கடைசி நேரத்​தில் பிளாட்​பார்ம் மாற்ற அறி​விப்பை வெளி​யிட வேண்​டி​ய​தா​யிற்று என்​றார் அவர்.​"பிளாட்​பார்ம் மாற்ற அறி​விப்பு வந்து உடன் பய​ணி​க​ளில் ஒரு​வரை ஒரு​வர் தள்ளி விட்டு அடுத்த பிளாட்​பார்​முக்கு மாற முயன்​ற​னர்.​ பலர் பெரிய சூட்​கேஸ்​கள்,​​ பேக்​கு​களை வைத்​தி​ருந்​த​தால் அது மற்​ற​வர்​கள் மீது இடித்து கீழே தள்​ளி​யது.​ பய​ணி​கள் செல்​வ​தற்​காக அமைக்​கப்​பட்ட பாலத்​தில் கூட்ட நெரி​சல் ஏற்​பட்​ட​தில் அதில் இருந்து ஒரு​வர் கீழே விழுந்​து​விட்​டார்.​ காய​ம​டைந்​த​வர்​கள் மருத்​து​வ​ம​னை​க​ளில் சேர்க்​கப்​பட்​டுள்​ள​னர்' என்று மற்​றொரு ரயில்வே அதி​காரி தெரி​வித்​தார்.​கடும் நட​வ​டிக்கை இந்த சம்​ப​வத்​துக்கு கார​ண​மா​ன​வர்​கள் மீது கடும் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று ரயில்வே அமைச்​சர் மம்தா பானர்ஜி கூறி​யுள்​ளார்.​இது தொடர்​பாக விசா​ரணை நடத்த 3 நபர்​குழு ஒன்​றை​யும் அவர் அமைத்​துள்​ளார்.​உ ​யி​ரி​ழந்​த​வர்​க​ளின் குடும்​பத்​துக்கு தலா ரூ.​ 2 லட்​ச​மும்,​​ காய​ம​டைந்து மருத்​து​வ​ம​னை​யில் உள்ள 8 பேருக்கு தலா ரூ.​ 50 ஆயி​ர​மும்,​​ லேசாக காய​ம​டைந்​த​வர்​க​ளுக்கு ரூ.​ 15 ஆயி​ர​மும் ரயில்வே துறை​யால் வழங்​கப்​ப​டும் என்​றும் மம்தா அறி​வித்​துள்​ளார்.​
கருத்துக்கள்

இவ்வாறு நடைமேடை மாறுவதை அறிவிப்பதுமுதல் முறை யல்ல. எனக்கும் நான்கைந்து முறை இந்தஅவதி ஏற்பட்டுள்ளது. ஒரு முறை மதுரையில் மாறி மாறி 5 முறை நடைமேடை மாறுவதாக அறிவித்து அங்கும் இங்கும் அலைய விட்டார்கள். அதுபோல் கும்பகோணத்தில இருந்து சென்னை வருகையில் திருச்சிராப்பள்ளியில் மலைக்கோட்டை உடனே வேறு நடைமேடையில் இருந்து புறப்படுவதாக அறிவித்து அனைவரையும் அல்லல் படுத்தினர். ஆனால், கூட்ட நெரிசலில் சாவு ஏற்பட்ட முதல் துன்ப நிகழ்வாக இஃது இருக்கலாம். எனவே, இந்நிகழ்விற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுவாக நாடு முழுமையும் இவ்வாறு அவ்வப்பொழுது நடைமேடை மாற்றம் முன்கூட்டி முடிவெடு்க்காமல் பயணிகளையும் வரவேற்கவும் வழியனுப்பவும வந்திருப்பவர்களையும் தொல்லைக்கு ஆளாக்கும் கெடுபிடி இடர்களைக் களைய தொடர்வண்டித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 2:33:00 AM

இதெல்லாம் படிக்கிறபோதே நமக்கு பரிதாபமாக இருக்கிறதென்றால்,பாவம் அந்த இரண்டு ஜீவன்களும் குறிப்பாக அந்த சிறுவன் என்ன பாடுபட்டிருப்பான் ,உண்மையில் அந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்,இல்லாவிட்டால் இதுமாதிரியான அலட்சிய அறிவிப்பை செய்யமுடியாது

By புண்ணாக்கு
5/17/2010 2:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 16 மே, 2010

நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம்: முதல்வர் கருணாநிதி



கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல் குறுந்தகட்டினை, சென்னையில் சனிக்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட டாக்டர் எல்.சுப்பிரமணிய
சென்னை, மே 15: இளைஞர்கள் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் கருணாநிதி குறுந்தகட்டை வெளியிட, அதை இசைக் கலைஞர் எல். சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியது:ரஹ்மானுடைய இசையை நான் எழுதிய வார்த்தைகளோடு குழைத்து நீங்களெல்லாம் பருகக் கூடிய அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் எழுதிய பாடல் தான். ஆனால், தமிழகத்தினுடைய புலவர்கள், சங்க காலத்து பெருமக்கள், சங்க காலத்திற்குப் பின்னர் வந்த கடைச் சங்க காலம், இடைச் சங்க காலம் எனப் பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த கம்பர், காளமேகம் காலம் வரையில் எழுதப்பட்ட கவிதைகளை, அறிவுரைகளை, கொள்கைகளை, பண்பாட்டினை, தமிழர்களுடைய பழக்க வழக்கங்களை எல்லாம் ஒரு பாட்டில் அமைத்து, அதை எழுதுவது எவ்வளவு பெரிய இடர்பாடு கொண்டது என்பதை நன்கு அறிவேன். பாடலை எழுதும் போது அருகில் இருந்தவர்கள், இந்தப் பாடல் வெற்றிகரமான பாடலாக வர வேண்டும் என்று ஒரு பிரார்த்தனையோடு எதிர்பார்த்தார்கள். இந்தப் பாடலை எழுதும் போது ஏற்பட்ட உணர்வை நான் மட்டுமே அறிவேன். எனது வாழ்நாளில் 10, 12 ஆண்டுகளைத் தவிர்த்து மீதியுள்ள ஆண்டுகள் எல்லாம் தமிழ், தமிழ் என்றுதான் என் உதடுகள் உச்சரித்திருக்கின்றன. அதனால் யார் ஒருவர் தமிழ் என்று சொன்னாலும் திரும்பிப் பார்ப்பேன், ஒன்றிக் கலந்திடுவேன், உணர்வுகளை மதிப்பேன், அதனை மதிக்கின்றவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழ்த்துவேன். தரணி வாழ் கலைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் நம் வீட்டுப் பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த பெருமைதான் ஆஸ்கார் விருதுகள். ரஹ்மானை போன்ற இளைஞர்கள் எப்படி முன்னேறினார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒவ்வொரு இளைஞனும் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையைப் பெற முடியும். ஏனெனில், நம்பிக்கை தான் வாழ்வின் முதல் படி. அதில் கால் வைத்துவிட்டால் வெற்றி நிச்சயம்.நம்பிக்கையோடு நான் செலுத்திய உழைப்புதான் எனது முன்னேற்றத்துக்குக் காரணம். அதே போல், ரஹ்மான் உலகப் புகழ் பெறுவதற்கு அவரது நம்பிக்கை, இடைவிடாத முயற்சிதான். இது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. சமுதாயத்தில் உள்ள எல்லா இளைஞர்களுக்கும் ஒரு உந்துச் சக்தியை ஏற்படுத்தக் கூடியது. இந்த பாடல், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்குகிறது. எல்லா உயிர்களும் பிறப்பால் ஒன்றுதான். பிறப்பு எல்லா உயிர்களுக்கும் ஒன்றேதான் என்பதுதான் அதற்கு பொருள். பிறந்த பின் என்ன என்பது தான் இன்றைக்கு உள்ள பிரச்னை. பிறந்த பின் எல்லோரும் ஒரே குலம், ஒரே இனம் என்ற உணர்வைப் பெற வேண்டும். எல்லாரும் ஒரே இனம் என்ற முத்திரையுடன் வாழ வேண்டும் என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. கோவை மாநாடே இந்தப் பாடலுடன்தான் ஆரம்பமாகும். இந்தப் பாடல் விளம்பரத்துக்கு பயன்படுத்தப்படும். நானே விளம்பரமாக இருந்து ஒவ்வொருவரையும் மாநாட்டுக்கு அழைக்கின்றேன் என்றார் கருணாநிதி.அமைச்சர்கள் க. அன்பழகன், பரிதி இளம்வழுதி, தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, பாடகர் டி.எம்.செüந்தரராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், திரைப்பட இயக்குநர் கெüதம் மேனன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

(தொடர்ச்சி) 4/4)௪) கல்வெட்டு எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பில்லாத பொழுது தமிழல்லாத பிற எழுத்து வடிவங்களை மேடைப்பின்னணியாக அமைத்ததும் தவறான அறிவூட்டலாக அமைகிறது. தவறான கொள்கையுடையவர்கள் மாநாட்டுக் குழுக்களில்செல்வாக்கு செலுத்துவதால் இந்த நிலைமை போலும்! தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை- தமிழ் பண்பாட்டை - தமிழ் நாகரிகத்தை - தமிழ் வரலாற்றை - தமிழ்ச் செம்மையை உணர்த்தும் வகையில் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வடிவமையுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 5:44:00 AM

1/4) ௧.) இப்பாடலை மாநாட்டின் மைய நோக்குப் பாடல் என்று சொல்வதைவிட மாநாட்டை முன்னிட்டு வெளியிடும் தமிழ்நெறி விளக்கப் பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 2/4 ௨) உலகில் பெரும்பான்மைத் தமிழர்களின் எதிர்ப்பையும் தமிழ்நாட்டில் ஒரு சாராரிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இம்மாநாட்டை விழிப்புடன் நடத்த வேண்டும். செம்மொழி மாநாட்டில் அயல்முரசு (டிரம்) இசை எதற்கு? ஒப்பீட்டு அடிப்படையில் பிற கலையை அறியச்செய்யவோ பல கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமையவோ வாய்ப்பிருப்பின் ஏற்கலாம். தமிழிசைவாணர்களுக்கு முதன்மை அளியுங்கள். 3/4 ௩) அயல் இசையாய் இருப்பினும் பாரதியார், பாரதிதாசன், கவிமணி. நாமக்கல்லார் முதலான தமிழ்க்கவிஞர்களின் பாடலை இசைக்கக் கூடாதா? சிவப்புப் பகுதியில் விலை மகள் அழைக்கும் ஓ! இரசிக்கும் சீமானே வா என்னும் பாடலையா இசைப்பது? இதுதான் செம்மொழித் தமிழை உயர்த்தும் பண்பாட்டு நிகழ்ச்சியா? வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது? பொறுப்பாளர்கள் மைய நோக்கிற்கேற்ப இசை நிகழ்ச்சிகளை அமையுங்கள். (தொடர்ச்சி 4/4 காண்க)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 5:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
விரிவான செய்தி
 
மே 18 சிங்கள மாவீரர் தினமாம்: பதிலடி கொடுக்குமா தமிழினம் ?

15 May, 2010 by admin

மே மாதம் 18ம் திகதி அன்று சிங்கள இராணுவத்தின் வீடுகளில் விளக்குகளை ஏற்றுமாறும், இறந்த இராணுவத்தினரை நினைவுகூறுமுகமாக தேசிய கீதங்கள் நாடு எங்கும் முழங்கவேண்டும் எனவும், மகிந்த அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் தேசிய கொடியை நாடு முழுவதும் பறக்கவிட்டு, பாசிச அரசு, கொலைக் குற்றங்களை மூடி மறைக்க முனைகிறது. மகிந்தவின் அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடி, இறுதியில் சிங்கள மாவீரர் நாளாக மே 18 ஜ அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் ? வழமை போல மே 18ம் திகதி வேலைக்குச் சென்று, பின்னர் வீடு திரும்பி சாப்பிட்டுவிட்டு, ரீவியில் சீரியல் பார்த்து உறங்கப் போகிறோமா ? போன வருடம் இதே மாதத்தை நினைவு படுத்திப் பாருங்கள் தமிழர்களே !. எத்தனை ஆயிரம்பேர் திரண்டு பல நாடுகளில் போராட்டங்களை முன்னெடுத்தனர். குறிப்பாக பிரித்தானியா வாழ் தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். லண்டன் நகரம் ஸ்தம்பித்தது. பின்னர் மே 18 உடன் எமது போராட்டம் முடிந்ததே என்று மனமுடைந்து போனார்கள் பல தமிழர்கள்.

இறுதி நாளில் மட்டும் 25,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர், பிறந்த குழந்தைகள், பிறக்காத குழந்தைகள், தள்ளாடும் முதியவர்கள், நடக்கவே நாதியற்ற தமிழர்கள், தாலி இழந்த பெண்கள், தாயை இழந்த சிறுவர்கள், அனைவரையும் விட்டுவைக்கவில்லை இலங்கை அரசின் கோரத் தாக்குதல். பதுங்கு குழியில் உயிருக்காக பதுங்கியிருந்தவேளை, டாங்கிகளை அதன் மேல் ஏற்றி, உயிரோடு புதைத்தான். பாதுகாப்பு வலையம் என்று சொல்லி மக்களை அங்கு கூப்பிட்டு, கூண்டோடு கொன்றான். காயமுற்றவர்கள் செல்வது வைத்தியசாலை என்பதால் அங்கும் குண்டுமழை பொழிந்து ஓடக்கூட நாதியற்றவர்களைக் கொன்றான். கொல்வதற்கு எவ்வளவு முறை இருக்கிறதோ அத்தனை முறைகளையும் கையாண்டான் சிங்களவன். நாதியற்று கிடந்தது தமிழினம்.

இவர்கள் இறந்த மே 18ம் நாள் ! இவர்களுக்கு நாம் நினைவுகூராவிட்டால் ,அவர்கள் எங்களை மன்னீப்பார்களா ?, அவர்கள் ஆத்மா சாந்தியடையுமா ? , கொல்லப்பட்ட தமிழர்களுக்காக 1 நாள் தன்னும் நாம், எமது வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்று கூடாவிட்டால் எம் இனத்தை, வேற்றினக்காரன் கேவலமாகப் பார்க்க மாட்டானா ? யூதர்கள் கொத்துக் கொத்தாக கொலைசெய்யப்பட்ட நாளை அவர்கள் நினைவுகூர அரம்பிக்கும் போது, நாட்டில் உள்ள ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடச் செல்லவில்லையே. ஆனல் விட்டார்களா அவர்கள் ? ஒவ்வொரு வருடமும் அதனை நினைவுகூர ஆரம்பித்தார்கள், இறுதியில் தற்போது பிரித்தானிய ராணி எலிசபெத் அம்மையார் தொடக்கிவைக்கும் ஒரு துக்கதினமாக அது மாறவில்லையா ?

ரெஸ்கோ(TESCO), ஜோன் லூவிஸ், போன்ற பெரும் வாணிபத்தை தனதாக்கியுள்ள யூதர்கள், தமது பொருளாதாரம் காரணமாக இங்கு உள்ள அரசியலை தமக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். யூதர்களுக்கு தமிழன் ஒன்றும் குறைந்தவன் அல்லவே. யூதர்கள் பிரித்தானியாவிலும், மற்றைய நாடுகளிலும், முன்னேறி ஒரு நிலைக்கு வர எடுத்துக் கொண்ட காலத்தோடு ஒப்பிடும் போது, புலம்பெயர் தமிழன் தற்போது முன்னேறியுள்ள வேகம் அதீதமானது. பிரித்தானிய வாணிபத்தில் தமிழர்களின் பலம் அதிகரித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர்களுக்காக, பிரித்தானிய ராணியோ அல்லது வருங்கால பிரித்தானிய இளவரசன் வில்லியமோ வந்து துக்கதினத்தை தொடக்கிவைக்கும் அளவுக்கு, நாம் இதை நகர்த்தவேண்டும். உலகறியச் செய்யவேண்டும். மேற்குலகுகள், அங்கே நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும், இலங்கை அரசு வெட்கி நாணிக், குறுகவேண்டும். அதுவரை ஓயமாட்டான் தமிழன் என்று நாம் உரக்கக் கூறுவோம் !

காலை எழுந்தோம் வேலை.. சென்றோம், மாலை திரும்பினோம், தூங்கச் சென்றோம், என்று இல்லாமல் மே 18ம் தேதியை நினைவுகூர பிரித்தானிய மக்களே வாருங்கள். பிரித்தானிய பாராளுமன்றம் நோக்கி வாருங்கள், உங்கள் நெஞ்சில் சற்றேனும் ஈரம் இருந்தால் வாருங்கள் !, இறந்த உயிர்களுக்காய் உங்கள் உள்ளம் துடிக்கிறதா வாருங்கள் ! உங்கள் உறவுகளை நேசிக்கிறீர்களா.... வாருங்கள் ! தமிழ் காற்றை சுவாசிக்கிறீர்களா... வாருங்கள் ! தமிழ் தாயின் பாலைப் பருகினீர்களா.... வாருங்கள் ! ஒரு உண்மையான தமிழனா.... வாருங்கள் ! ஒரு வீரத் தமிழ் தாய்க்குப் பிறந்தால் வாருங்கள் ! இலங்கை அறிவித்திருக்கும் சிங்கள மாவீரர் தினத்தின் முகமூடியைக் கிழிக்கவாருங்கள் ! ஒன்று திரள்வோம் வாருங்கள், ஒன்றாய் நிற்போம் வாருங்கள் . உரக்கச் சொல்வோம் வாருங்கள்.

குவியவேண்டும் 2 லட்சம் மக்கள் பாராளுமன்ற சதுக்கத்தில் ! பிரித்தானியாவே எம்மை திரும்பி பார்க்கவேண்டும் ! நடைபெற்ற இனப் படுகொலை வெளிச்சத்துக்கு வரவேண்டும் ! முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டும், அணி திரளுவோம் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ! இனப்படுகொலைகளை உலகறியச் செய்யும் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தமிழர்கள் ஒன்றினைந்து மாபெரும் சக்தியாக உரக்கச் சொல்வோம் இலங்கை அரசு பயங்கரவாதிகள் என்று ! .....









நடைபெற உள்ள மே 18 பேரெழுச்சியைக் குழப்ப விஷமிகளால் சில கட்டுக்கதைகல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பொது மக்கள் எதனையும் நம்பவேண்டாம், அமைதியான முறையில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்த எழுச்சி நாள் நடைபெற உள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 9939







விளம்பரங்கள்










© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback

கருப்பு மாதம்: கறுப்பினத்தவருக்கு பெப்ரவரி தமிழருக்கோ மே


கருப்பினத்தினர் பெப்ரவரி மாதத்தைக் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கின்றார்கள். அதைப்போலவே மே மாதம் தமிழரின் சோகம் நிறைந்த கருப்பு மாதமாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுகின்றது.

1983-ஆம் ஆண்டு ஜூலை 23 தொடக்கம் 30 வரை நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000 தமிழர் படுகொலை செய்யப்பட்டு முப்பது கோடி டாலர்கள் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சூறையாடப்பட்டது. பல இலட்சம் தமிழர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பாதுகாப்புக்காக சென்றனர்.

இந்த ஜூலை கலவரத்தை இதுநாள் வரை கருப்பு மாதமாக கருதப்பட்டது.

ஆனால் மே 2009 நடைபெற்ற நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத சோக நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இடம்பெற்ற நிகழ்வானது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலை. இதனை சிங்கள அரசாங்கம் தமிழர்கள் மீது கட்டவீழ்த்தி விட்டு அவர்களின் எதிர்காலத்தையே ஒரு கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த மாதத்தை தமிழர்களினால் எப்பொழுதும் மறக்கவோ அந்த நிகழ்வை நடாத்திய சிங்கள அரக்கர்களை மறந்தும் மறக்கக்கூடாது என்ற உணர்வுடன் இன்று எழுச்சிபெற்றுள்ளனர் உலகத்தமிழர்.

இதனை உறுதிப்படுத்துமுகமாக உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர் அமைதிவழியில் போராட்டங்களை மே 1-ஆம் திகதி முதல் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரக்கத்தனமான அரச பயங்கரவாதத்தை கட்டவீழ்த்திவிட்டார். 2005-ஆம் ஆண்டு மகிந்த ஆட்சி பீடம் ஏறிய பின்னர் சந்திரிகா விட்டுச்சென்ற தமிழருக்கெதிரான பயங்கரவாதத்தை பலமடங்காக்கி நோர்வே அரசினால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்களை நிறுத்தி கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கும் யுத்தம் என்ற போர்வையில் இடம்பெற்ற சமரில் கிழக்கு மாகாண மக்களுக்கு எதிரான அநீதிகள் பல மடங்குகளாக்கப்பட்டன.

2006-ஆம் ஆண்டு முதல் முழுமூச்சாக இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் மூலமாக மகிந்தா கிழக்கை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்தார். விடுதலைப் புலிகளோ தற்காப்பு யுத்தத்தை நடாத்திக்கொண்டிருந்ததாக அறிவித்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் இருந்த மூதூர் மற்றும் சில இடங்களை சிங்கள இராணுவத்திடம் இருந்து மீட்டு தமது கைவசம் கொண்டுவந்தார்கள் விடுதலைப் புலிகள்.

உடனேயே உலக நாடுகள் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் பேசி முன்னேறிய புலிகளை தமது தளங்களுக்கு பின்நகருமாறு அழுத்தம் கொடுத்தார்கள். அதனடிப்படையில் விடுதலைப் புலிகளும் பின்நகர்ந்தார்கள். அன்று விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தால் சில வாரங்களுக்குள்ளேயே திருகோணமலை கடற்படைத் தளம் உள்ளடங்கிய சிங்களப் படைகளின் முகாம்களை தம் வசம் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளோ உலகின் பேச்சைக் கேட்டு பின்நகர்ந்தார்கள்.

அத்துடன் தாம் எந்தவொரு வலிந்த இராணுவத் தாக்குதலையும் நடாத்தவிரும்பவில்லை என்றும் அறிவித்தார்கள் காரணம் தாம் சமாதான ஒப்பந்தத்தை மதிப்பதாக தெரிவித்தார்கள்.

புலிகள் அமைதியை போதிக்க சிங்களவரோ பயங்கரவாதத்தை ஏவிவிட்டார்கள்.

கிழக்கு தம் வசம் வந்துவிட்டதாக அறிவித்த கையுடன் அரசியல் பிரச்சாரத்தை கொழும்பில் முடக்கிவிட்டார் மகிந்தா. சிங்கள மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றார் மகிந்தா. இந்த செல்வாக்கை மென்மேலும் அதிகரிக்க மகிந்தா போட்டார் கணக்கு. வன்னிப் பெருநிலத்தை கைப்பற்றி விடுதலைப் புலிகளின் தனி இராச்சியத்தை அழித்து வடக்கு மாகாணத்தையும் தம் வசம் கொண்டுவருவதற்கான யுத்தத்தை 2008-ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்தார் மகிந்தா.

இந்த இராணுவ நடவடிக்கைக்கு சிங்கள மக்களும் சிங்கள-பௌத்த பிக்குகளும் ஆசிர்வதித்து உற்சாகப்படுத்தினார்கள். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு தமிழர்களின் பிரதேசங்களை தம் வசம் கொண்டுவந்தார்கள் சிங்கள இராணுவம். குறிப்பாக ஜனவரி 2009-ஆம் ஆண்டுகளில் இருந்து இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகள் பல உயிர் மற்றும் உடமைகளுக்கான சேதங்களை உண்டுபண்ணின.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் தம்மால் இயன்ற வரை தற்காப்பு யுத்தத்தை மேற்கொண்டார்கள். தமிழ் மக்கள் பெருமளவு எதிர்பார்ப்புடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தார்கள். விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்கு ஒரு படிப்பை வன்னி மண்ணில் நிகழ்த்தி தமிழ் மண்ணில் கால்பதித்த சிங்கள சிப்பாய்களை வன்னி மண்ணிற்குள் புதைப்பார்கள் ‘நம்ம பொடியன்கள்; என்று எண்ணியிருந்த மக்களுக்கு பேரடியாக இருந்த மாதம் தான் மே.

தமிழர் நிலத்தைக் கைப்பற்றிய இராணுவம் கொத்துக் கொத்தாக தமிழரை கொன்று குவித்தார்கள். உலக நாடுகளின் அழுத்தங்களுக்கிடையிலும் சிங்கள இராணுவம் தமிழர் பிரதேசங்களைக் கைப்பற்றி யுத்தப்பகுதியில் இருந்த ஏறத்தாழ 350,000 தமிழ் மக்களை கொல்லவும் தயாராக இருந்தது. புலம்பெயர் தமிழரின் பல அறவழிப் போராட்டங்களுக்குப் பின்னர் உலக நாடுகள் மும்மரமாகத் தமது செல்வாக்கைப் பாவித்து ஒரு பிரதேசத்தை யுத்த சூனியப் பிரதேசமாக அறிவிக்கச்செய்தார்கள்.

அதனடிப்படையில் பொதுமக்கள் இந்தப்பகுதியில் தங்கவைக்கப்பட்டார்கள். ஆனால் சிங்கள இராணுவமோ தாக்குதல் செய்யமாட்டோம் என்று அறிவித்த பின்னர் மக்கள் சென்றடைந்தபின்னர் அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் மீது அகோர தாக்குதல்களை நடாத்தி பல ஆயிரம் தமிழரை கொன்றார்கள். அங்கிருந்து வந்த தகவல்களின்படி 40,000-க்கும் அதிகமான மக்கள் மாண்டதாக செய்திகள் வந்தன.

இதில் பெரும்பான்மையானோர் இறுதி வாரத்தில் இடம்பெற்ற இராணுவத் தாக்குதல்களினால் செத்து மடிந்தார்கள் என்பது தான் கொடூரமான உண்மை. விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தார்கள். பல பொதுமக்களையும் மற்றும் விடுதலைப் போராளிகளையும் கவசவாகனங்களினால் நசித்தும் சுட்டும் கொலைசெய்யப்பட்டார்கள். விடுதலைப்புலிகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் கொடுத்த வாக்குறுதியின் படி இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி வரும்போது படுகொலைசெய்யப்பட்டார்கள்.

இவைகள் அனைத்தும் இந்த நூற்றாண்டில் உலகம் கண்ட மாபெரும் மனிதப் பேரவலம். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையோ இறந்த தமிழரின் எண்ணிக்கையை இன்றும் ஏறத்தாள 7,000 என்று தான் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஆக ஐக்கிய நாடுகள் சபையும் நீதி கேட்டு நிற்கும் மக்கள் பக்கம் நிற்காமல் அரச பயங்கரவாத ஆட்சியை சாந்தப்படுத்த முனைப்புக்காட்டுவதாகவே இருக்கின்றது. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக வர்ணித்த சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் தாம் செய்த அட்டூழியங்களை மூடி மறைத்தார்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக.

ஆனால் கடந்த ஆண்டு நடாத்திய அட்டூழியத்தைப் பார்த்து பல வெளிநாட்டு ஊடங்கங்களும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கண்ணீரும் கம்பலமுமாக உலக மனச்சாட்சியின் கதவுகளை தட்டினார்கள். ஆனால் அறிந்தும் அறியாமல் மௌனம் காத்தன பல வெளிநாடுகள். விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் தார்மீக நியாயத்தை உணர்ந்தும் பல வெளிநாடுகள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவோ அல்லது தமிழருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிடவோ விரும்பவில்லை. மாறாக சிங்கள அரசாங்கத்தின் செயலை மறைமுகமாக ஆமோதித்தார்கள்.

அமைதி போதித்த புத்தரைப் பின்பற்றும் சிங்கள மக்களும் புத்தருக்கு பூசை செய்யும் பிக்குகளும் அரச பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள். தமிழர்கள் அழியுண்டதையும் லட்சக்கணக்கானவர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக வதைமுகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையேனும் வெளியிடவில்லை.

ஆயுதம் ஏந்திய புலிப்படையினர் சமாதானத்தைப் போதிக்க புத்தரைப் பின்பற்றும் காவியுடையணிந்தவர்கள் பயங்கரவாதத்தை போதிப்பதானது சிறிலங்கா அழிவுப்பாதையை நோக்கி செல்கின்றது என்பதைக்காட்டி நிற்கின்றது.

இது வெம்பி அழுவதற்கான காலமல்ல…

இது சபதம் எடுப்பதற்கான காலம்!

நடந்து முடிந்த நிகழ்வுகள் ஒருபோதும் தமிழரை வெதும்பச்செய்யப் போவதில்லை. காரணம் அவர்கள் நீதியைக் கேட்டு போராடியதற்காக கொடுக்கப்பட்ட பரிசு. இறந்த உயிர்கள் ஒன்றும் எரியூட்டப்பட்டவையல்ல. அவைகள் விதைக்கப்பட்டவை. அந்த ஆத்மாக்கள் பல லட்சம் வேங்கைகளாக உருவெடுத்து அவர்களின் இறுதி விருப்பம் என்னவோ அதுவே நனவாகும். அப்பொழுது மௌனமாக இருந்த உலக நாடுகளுக்கும் மற்றும் சிங்கள – பௌத்தவாதிகளுக்கும் ஒரு வரலாற்றுப்பாடமாக இருக்கட்டும். இதுவே நாம் மாண்டவர்களுக்கு செய்யும் இறுதிக்கிரிகைகளாக இருக்க முடியும்.

மே 2009 இடம்பெற்ற வார்த்தைகளினாலோ அல்லது சொற்களினால் வர்ணிக்க முடியாத சோகங்களைத் தாண்டி ஒருவருடம் பூர்த்தியாகும் வேளையில் உலகத் தமிழினம் பல அறவழிப்போராட்டங்களை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர சபதமெடுக்கும் காலமிது அத்துடன் உலக நாடுகளின் மூலை முடுக்குகள் எங்கும் இதனை வலியுறுத்தி தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து உலகநாடுகளை வற்புறுத்தவேண்டும்.

பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக்குழு மூலமாக உண்மையைக் கண்டுபிடித்து உண்மையான கொலைகாரர்களை சர்வதேசம் கண்டுபிடிக்க வேண்டும். இதுவே பல தமிழரின் கோரிக்கையாக இருக்கின்றது. பல தமிழ் அமைப்பினர் மே 1 முதல் மே 19 வரையான காலப்பகுதிகளில் பலவிதமான போராட்டங்களை வெளிநாடுகளில் நடாத்துகின்றார்கள். மழையையும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை இந்த போராட்டங்களில் கலந்து கொண்டுவருகின்றனர்.

இந்த நிகழ்வுகளில் பங்குகொள்வோர் தமிழர்களின் குரல்கள் நசுக்கப்பட்டதை தெரிவிக்கும் முகமாக கறுப்புத் துணியால் வாயைக் கட்டியும், மக்கள் அனுபவித்துவரும் பல்வேறு கொடுமைகளை சித்தரிக்கும் பதாதைகள் மற்றும் சுலோகங்களையும் தாங்கி போராட்டங்களை நடாத்துகின்றார்கள். பல கோசங்களை முன்வைக்கின்றார்கள் அதாவது இளைஞர்களும் மக்களும் சேர்ந்து தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லப்போவதாக அறைகூவல் விடுகின்றார்கள்.

அறவழிப் போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் பெருமளவிலான தமிழீழத் தேசிய கொடிகளைத் தாங்கி நிற்கின்றார்கள். இதனைப் பார்த்த பலர் தமிழீழ விடுதலைப் பயணம் முன் எப்போதுமில்லாதவாறு இனிவரும் காலங்களில் வேகம்பெறும் என்று கூறுகின்றார்கள். தமிழரின் இந்தப் போராட்டங்கள் தரும் பாடம் என்னவென்றால் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த நான்காம் ஈழப் போராட்டம் வெம்பி அழுவதற்கான காலமல்ல மாறாக தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இருப்பதற்கான சபதமெடுக்கும் மாதமிது.

எதுவாயினும் மே மாதம் என்பது தமிழருக்கு கருப்பு மாதமாகத் தான் தமிழர் மனங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அத்துடன் இந்த மாதம் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் மானிடம் கண்டிராத பேரவலமாகத் தான் பதியப்பட்டிருக்கின்றது. இந்த மாதத்தை தமிழர்களினால் சபதமெடுக்கும் மாதமாகக் கணிக்கவேண்டும். கொலைகாரர்களைக் கூண்டிலேற்றி நீதி தேவதையின் கருப்பு துணியினால் கட்டப்பட்டிருக்கும் கண்களைத் திறப்பதற்காக போராட சபதம் எடுக்கும் மாதமாக இந்த மே மாதத்தை அங்கீகரிக்கவேண்டும்.

சிங்கள அரசோ இந்த மாதத்தை வெற்றி மாதமாக அங்கீகரித்து பல களியாட்டங்களை நடாத்த திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படியாக பல களியாட்ட நிகழ்ச்சிகளை நடாத்தி கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தை வெற்றி விழாவாக நடாத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அடுத்த வாரம் காலி முகத்திடலில் மாபெரும் நிகழ்ச்சியொன்றிற்காக களை கட்டத்தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் மகிந்த மற்றும் முன்னணித் தலைவர்கள் பங்குபற்றி சிங்கள இராணுவம் செய்த அராயகத்தை அங்கீகரித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழர்கள் துக்கம் கடைப்பிடிக்கும் வேளையில் சிங்களவரோ களியாட்ட மாதமாக கொண்டாடுகின்றார்கள். எப்படி கறுப்பினத்தினருக்கு பெப்ரவரி மாதம் கருப்பு வரலாற்று மாதமாக பேணப்படுகின்றதோ நிச்சயம் மே மாதம் தமிழரின் கருப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படும்.

நீதி தேவதையின் கண்களைத் திறக்க உலகநாடுகளின் மனக்கதவுகளைத் திறக்க அனைத்து தமிழரும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடாத்தி ஈழத் தமிழரின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தின் தார்மீகத்தை உணர்த்தி தமிழரின் விடியலை உண்மையாக்க சபதமெடுக்கும் மாதம்தான் தமிழரின் இரத்தத்தினால் தோயப்பட்ட மே மாதம்.

சிந்திப்போம் செயலாற்றுவோம்.

-அனலை நிதிஸ் ச. குமாரன்

(Visited 19 times, 19 visits today) }
You can leave a response, or trackback from your own site.

௧.) இப்பாடலை மாநாட்டின் மைய நோக்குப் பாடல் என்று சொல்வதைவிட மாநாட்டை முன்னிட்டு வெளியிடும் தமிழ்நெறி விளக்கப் பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ௨) உலகில் பெரும்பான்மைத் தமிழர்களின் எதிர்ப்பையும் தமிழ்நாட்டில் ஒரு சாராரிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இம்மாநாட்டை விழிப்புடன் நடத்த வேண்டும். செம்மொழி மாநாட்டில் அயல்முரசு (டிரம்) இசை எதற்கு? ஒப்பீட்டு அடிப்படையில் பிற கலையை அறியச்செய்யவோ பல கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமையவோ வாய்ப்பிருப்பின் ஏற்கலாம். தமிழிசைவாணர்களுக்கு முதன்மை அளியுங்கள். ௩) அயல் இசையாய் இருப்பினும் பாரதியார், பாரதிதாசன், கவிமணி. நாமக்கல்லார் முதலான தமிழ்க்கவிஞர்களின் பாடலை இசைக்கக் கூடாதா? சிவப்புப் பகுதியில் விலை மகள் அழைக்கும் ஓ! இரசிக்கும் சீமானே வா என்னும் பாடலையா இசைப்பது? இதுதான் செம்மொழித் தமிழை உயர்த்தும் பண்பாட்டு நிகழ்ச்சியா? வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது? பொறுப்பாளர்கள் மைய நோக்கிற்கேற்ப இசை நிகழ்ச்சிகளை அமையுங்கள். ௪) கல்வெட்டு எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பில்லாத பொழுது தமிழல்லாத பிற எழுத்து வடிவங்களை மேடைப்பின்னணியாக அமைத்ததும் தவறான அறிவூட்டலாக அமைகிறது. தவறான கொள்கையுடையவர்கள் மாநாட்டுக் குழுக்களில்செல்வாக்கு செலுத்துவதால் இந்த நிலைமை போலும்! தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை- தமிழ் பண்பாட்டை - தமிழ் நாகரிகத்தை - தமிழ் வரலாற்றை - தமிழ்ச் செம்மையை உணர்த்தும் வகையில் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வடிவமையுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Latest indian and world political news information

சென்னை : ''தமிழின் சிறப்பையும், தொன்மையையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும், பழக்க வழக்கத்தையும் உலகம் அறியச் செய்யும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் அமைந்துள்ளது,'' என, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் வெளியீட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் பேசினார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டின் மையநோக்குப் பாடலை முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இயக்குனர் வாசுதேவ்மேனன் பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலின், 'சிடி' வெளியீட்டு விழா, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. 'சிடி'யை வயலின் வித்வான் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

பாடல், 'சிடி'யை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இயற்றுவது என முடிவு செய்த உடன், அதில் சங்ககாலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும், அதில் காட்டப்பட்டுள்ள தமிழரின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் ஒரு பாடலில் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி தான் என்பதை அனைவரும் ஏற்கும் வகையில் செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாமல் ஒரே பாடலில் கொண்டு வருவது எவ்வளவு இடர்பாடு நிறைந்தது என்பதை நன்றாக அறிவேன். அந்த பாடல் எழுதும்போது ஏற்பட்ட உணர்ச்சி எனக்கு மாத்திரமே தெரியும். அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மகிழ்ச்சியை இந்த பாடலுக்கு உங்களிடம் கிடைத்துள்ள வரவேற்பின் மூலம் அறிய முடிகிறது. எனக்கு முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, வலியுடன் மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அறிந்து, அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அவரை வாழ்த்தி கடிதம் எழுதி அனுப்பினேன். அவரின் மூலம் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்த பாடலின் முதல் வரியான, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதன் பொருள், பிறப்பு என்பது எல்லாருக்கும் பொதுவானது; நாம் அனைவரும் ஒன்றே என்பதை குறிக்கும். அந்த வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 205 அறிஞர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்த பாடலின் மூலம் தமிழின் தொன்மையையும், சிறப்பையும் அறிவார்கள். அந்தளவிற்கு சிறப்பாக இந்த பாடலை அனைவரும் விரும்பும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அவரை எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரும் தமிழர், நானும் தமிழர் என்பது தான், எங்களை இணைத்துள்ளது.

இந்த பாடல் செம்மொழி மாநாட்டின் விளம்பர பாடலாக அமையும். இந்தப் பாடல் தான் செம்மொழி மாநாட்டின் துவக்கத்தில் ஒலிக்கப்படும். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் செம்மொழி மாநாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






"புலிகளின் ஆதரவாளர்களுக்கு உதவ வேண்டாம்'



கொழும்பு, மே 15: விடுதலைப் புலிகளின் இயக்கம் மீண்டும் வலுப்பெற எந்த வகையிலும் உதவ வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பெல்ஜியம், லக்சம்பர்க், ஐரோப்பிய யூனியனுக்கு இலங்கையின் தூதராகச் செயல்படும் ரவிநாத ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை இலங்கை அரசின் சார்பில் விடுத்திருக்கிறார். பயங்கரவாதச் சூழல், ஐரோப்பிய யூனியனில்அதிகரித்துவரும் பயங்கரவாதப் போக்கு என்ற பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் தூதர்களாகப் பதவி வகிப்போர் பங்கேற்றனர். பிரùஸல்ஸ் நகரில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பேசுகையில் ஆரியசின்ஹ இந்த வேண்டுகோளை விடுத்தார். "தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற பிறகு ஒரு துப்பாக்கி குண்டு கூட இலங்கையில் சுடப்படவில்லை. ஏதோ ஒரு அனுதாபத்தில் நீங்கள் செய்யும் உதவிகளால் அந்த அமைதி மீண்டும் குலைவதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தை ""நாடு கடந்த அரசாக'' நிர்வகிக்க அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் முயல்கின்றனர். அவர்களுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவிகளைச் செய்யக்கூடாது. சர்வதேசச் சட்டங்களை மீறியதற்காகவும் பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதம் வழங்கியதற்காகவும் நிதி திரட்டியதற்காகவும் உங்கள் நாடுகளில் பல விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவதாகவும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்படுவதாகவும் செய்திகளைப் படிக்கிறேன். இப்படி ஆங்காங்கே எஞ்சியிருக்கிற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் மற்றவர்களும் போலியாக அமைப்புகளை ஏற்படுத்தி, தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் வெறும் தீவிரவாத இயக்கம் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் நல்ல வலைப்பின்னல் தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கும் இயக்கமாகும். அந்த அமைப்புக்குள்ள சொத்துகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு நபர்களிடம் பிரிந்துள்ளன. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நேரடியாகத் தங்கள் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு பெயர்களில் பல இயக்கங்களைத் தோற்றுவித்து அவற்றின் மூலமாகச் செயல்பட்டு வருகின்றனர். அனுதாபப்பட்டு அவர்களுக்கு இடம் கொடுத்தால் மீண்டும் பயங்கரவாதம்தான் தலைதூக்கும்' என்று அவர் எச்சரித்தார்.ஜி-15க்கும் ராஜபட்ச தலைவர்: இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளின் குழுமத்துக்கு புதிய தலைவராக இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச வரும் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொள்கிறார். வரும் 2 ஆண்டுகளுக்கு அவர்தான் தலைவர். அடுத்த ஜி-15 உச்சி மாநாடு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, ஈரானின் இஸ்லாமியக் குடியரசு, ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசுலா, ஜிம்பாப்வே ஆகியவை ஜி-15 அமைப்பில் இடம் பெற்றுள்ளன.
கருத்துக்கள்

இலங்கையின் இனப்படுகொலை இன்னும் முற்றாக முடியவில்லை.எஞ்சியோரையும்படுகொலை செய்யும் வரை இந்தியாவைப்போல் இனவழிப்பு வன் செயல்களுக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக மனித நேயர்களே ஒன்று திரளுங்கள். உலகப் பெருந்துயர் நாளில் போர்க்கொடுமை எதிர்ப்பு நாளில் விடுதலை வேட்கை அழிப்டபுத் துயர நாளில் உலகோர் நல்லறிவு பெறட்டும்!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கனடாவில் கைதான இலங்கைத் தமிழருக்கு 6 மாத சிறை



டோரன்டோ, மே 15- விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்ததாக கனடாவில் கைதான இலங்கைத் தமிழருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபாகரன் தம்பித்துரை (46) என்னும் அவர் புலிகளுக்கு நிதி அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2008 மார்ச் மாதம் கனடாவில் கைது செய்யப்பட்டார்.

கனடா உச்சநீமன்றத்தில் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது என்றும், இதில், தம்பித்துரைக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி ராபர்ட் பவர்ஸ் உத்தரவு பிறப்பித்தார் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதனிடையே பசியால் வாடுகின்ற மக்களுக்கு தனது கணவர் உதவியதற்காகவே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் விரைவில் உண்மையை உணரும் என்று தம்பித்துரையின் மனைவி கருத்துத் தெரிவித்துள்ளார் என்றும், இத்தீர்ப்பின் மூலம் கனடிய நீதித்துறை தவறிழைத்துள்ளதாக லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறு்பபினர் உஜால் டொசாஜ் விமர்சித்துள்ளார் என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

பல நாடுகளின் கூட்டுப் பயங்கர வன்முறைகளில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் அவ்வன்முறைகளில் இருந்து காக்கும் காப்பாளர்களுக்காகவும் உதவுவது பெரிதும் போற்றப்பட வேண்டிய செயல். இதற்குத் தண்டனை வழங்குவது என்பது அறமற்ற செயல். உலக மக்களே விழித்தெழுந்துஉண்மையின் பக்கம் நில்லுங்கள். சாலியன் வாலாபாக் படுகொலைகளை இன்றும் கண்டித்துக் கொண்டிருக்கும் நாட்டின் மூளையுடனும் துணையுடனும் எரிகுண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும் எரிகணைகளாலும் ஏவுகணைகளாலும் கூட்டம் கூட்டமாக நூறாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்பபெற்ற உலகத் துயர நாள் நாளை வருகையில் அதைக்கூட உணராமல் வழங்கப்படும் தண்டனை முறையற்ற்தே! விரமரணம் உற்ற போராளிகளுக்கும் மக்களுக்கும் அஞ்ச்லி! வாழ்வுரிமை இழந்தவர்களுக்கு இழந்த உரிமையை மீட்டு வளமான வாழ்வு பெற நம் துணையுண்டு என்னும் நம்பிக்கை அளிப்போம். உலக நாடுகளில் உள்ள போற்றுதலுக்குரியவர்களைத் தண்டிக்கும் சட்டங்களை நீக்க வலியுறுத்துவோம்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/16/2010 2:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்