train timeings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
train timeings லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 அக்டோபர், 2009

General India news in detail

சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் உட்பட 10 ரயில்கள், நாளை முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.



இதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 12.25 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 12.40 மணிக்கும், பல்லவன் எக்ஸ்பிரஸ் மாலை 3.30 மணிக்கு பதிலாக மாலை 3.45 மணிக்கும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.05 மணிக்கு பதிலாக இரவு 7.15 மணிக்கும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக இரவு 7.35 மணிக்கும், திருச்செந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 3.40 மணிக்கு பதிலாக மாலை 2.40 மணிக்கும், சேலம் எக்ஸ்பிரஸ் இரவு 11.20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கும், ஹவுரா - திருச்சி எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து இரவு 8.25க்குப் பதிலாக 8.20க்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.



நிஜாமுதின்-மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து மாலை 6.40 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், நிஜாமுதின்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து மாலை 6.40 மணிக்கு பதிலாக மாலை 6.35 மணிக்கும், ஹவுரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் எழும்பூரிலிருந்து இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 8.20 மணிக்கும் நாளை முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது என்று, தெற்கு ரயில்வேயின் ரயில்கள் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.