manonmaniyam sundaranar palgalaikazhagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
manonmaniyam sundaranar palgalaikazhagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 டிசம்பர், 2010

online M.B.A .

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் ஆன்-லைன் எம்.பி.ஏ. படிப்பு

First Published : 11 Dec 2010 12:00:00 AM IST


சென்னை, டிச. 10: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக ஆன்-லைன் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஓராண்டு கால அவகாசம் கொண்ட இந்த படிப்பில் சேர்வதற்கு, இளங்கலை பட்டப் படிப்பும், மூன்று ஆண்டு பணி அனுபவமும் உடையவர்கள் மட்டுமே சேர முடியும்.இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.டி. சபாபதி மோகன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், மைபிஸ்கூல்.காம் நிறுவனமும் இணைந்து இந்த ஆன்-லைன் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தொழில்முனைவோர், சில்லரை வணிகம், கல்வி மேலாண்மை, போலீஸ் நிர்வாகம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது.வேலைக்குச் செல்வோர், பணி பாதிப்பின்றி இந்த படிப்பை மேற்கொள்ள முடியும். நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.  பாடங்கள் அனைத்தும் ஆசிரியர் கற்பிக்கும் வடிவில், இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தேவையானபோது மாணவர்கள் இதைப் பார்த்துக் கொள்ளலாம். விடுமுறை நாள்களில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் ஆன்-லைனில் கலந்துரையாடுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.