600 கோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
600 கோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 டிசம்பர், 2010

we will meent in the court:kalaignar: சவாலை சந்திக்கத் தயார்: முதல்வர் கருணாநிதி

ஆதாரத்தை வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்றுதான் முதல்வர் கூறியிருப்பார். நீங்கள் சவாலைச் சந்திக்கத்  தயார் எனச செய்தி வெளியிட்டுள்ளீர்களே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


அமைச்சர் பதவி அளிக்கப் பணமா? ஆதாரத்தை வெளியிட்டால் சவாலை சந்திக்கத் தயார்: முதல்வர் கருணாநிதி


சென்னை, டிச. 17: ""பணம் பெற்றுக்கொண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் அதை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் ரூ. 600 கோடி கொடுத்ததாக நீரா ராடியாவுடனான உரையாடலில் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்திகளும் பத்திரிகைகளில் வெளியாகின. இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:பதினைந்து நாள்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இதுபோன்றதொரு செய்தி வந்தது. அதைப் பார்த்த நான், அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி அந்தச் செய்தியை மறுக்க வேண்டுமென்று தோன்றவில்லை.ஆனால், இந்தச் செய்தி சில பத்திரிகைகளில் வெளிவந்து அவை ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எழுகின்றன. இதனால், அது நம்புவதற்குரிய ஒன்றாக ஆகிவிடுமோ என்பதால் அதை மறுத்திட விரும்புகிறேன்.அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?உண்மையிலேயே தயாநிதி மாறன் அமைச்சர் பதவிக்காக ரூ. 600 கோடி பணம் கொடுத்த செய்தியை நிரூபிக்கத் தயாரா? அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்' என்று அறிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

திங்கள், 22 நவம்பர், 2010

வீர் சங்வி - ராடியா உரையாடல்

பாட்டியாக இருந்தாலும் அரசியலில் பணம் கொடுத்துத்தான சாதிக்க முடிகிறது என்பதும் பாட்டியும் மற்றவர் சார்பாகப் பணம் பெறும் நிலை உள்ளது என்பதையும்  600 கோடி ரூபாய் கொடுத்துப் பதவி பெறுவதாயின் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இப் பதவி மூலம் சம்பாதிக்கலாம் என்னும்  நம்பிக்கை இருந்திருக்கும்  என்றும் புரிகிறது. உறவினருக்கே பணம்  கொடுத்துப் பதவி பெறுபவர்கள் உறவையும் மதிக்காமல் ஒரு நாள் காலை வாருவார்கள் என்பதும் உறுதி.  பழி செய்ய அஞ்சாதவர்களும் நாணம் கொள்ளாதவர்களும் பணத்தால் பதவிகளில் அட்டைபோல் ஒட்டிக் கொள்கின்றனரே! இந்திய அரசியலே நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்  வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வீர் சங்வி - ராடியா உரையாடல்

வீர் சங்வி - ராடியா உரையாடல்