மொரீசியசு இலக்குவனார் தமிழ்ப்பள்ளியில் குறள்மலைக் குழு
குறள் மலைப் பணிகளின் ஓர் அங்கமாக, மொரீசியசு நாட்டில் இலக்குவனார் தமிழ்ப் பள்ளியில் குறள்மலைக் குழு சென்று கலந்துரையாடல் மேற்கொண்டது.
இலக்குவனார் படத்தை திறந்து வைத்துப் பிரான்சு சாம் விசய்உரையாற்றினார்.
மேலும் பேராசிரியர் திருமலை(செட்டி), பேராசிரியர் சொர்ணம், தெய்வத்தமிழ் அறக்கட்டளை தலைவர் ஐயா சத்தியவேல்முருகனார், திரு. கந்தசாமி திரு.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.
குறள் மலை பணிகளுக்காக மொரீசியசு நாட்டு அதிபர் மேதகு பரமசிவம் வையாபுரி அவர்களை அவர் மாளிகையில் குழுவினர் சந்தித்து உரையாடினர்.
போர்ட் லூயிஸ் : மொரீசியஸ் நாட்டில்,
தமிழுக்காக பாடுபட்ட பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் பிப்ரவரி 03ம்
தேதி தமிழ்ப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது.முனைவர் சி.இலக்குவனார்
தமிழ்ப்பள்ளி என்னும் பெயரில் அமைந்த இப்பள்ளி மாரியம்மன் கோயில்
தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. மொரீசியசில் வாழும்
முன்னோடித் தமிழறிஞர் அருணாசலம் புட்பரத்தினம் தனது உரையில், பேராசிரியர்
சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணியையும் சிறப்பையும் விரித்துரைத்துள்ளார்.
கேசவன் சொர்ணம், பள்ளிக்கு இலக்குவனாரின் பெயரை வைத்ததன் காரணத்தையும்
பொருத்தத்தையும் விளக்கினார். செமன், தமிழ்ப்பள்ளியின் இன்றியமையாமையைக்
கூறினார்.மொரீசியஸ் நாட்டின் தமிழ்க்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர் மேனன்
மருதை இந்த நன்முயற்சியைப் பாராட்டினார். - தினமலர் வாசகர் மறைமலை இலக்குவனார்