First Published : 31 Jul 2012 02:31:31 AM IST
புது தில்லி, ஜூலை 30: "தினமணி' நாளேடும் தில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து
நடத்தும் அனைத்திந்திய தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு தில்லியில் செப்டம்பர்
15, 16 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
அப்போது கூட்டமைப்பின் விதிமுறைகள் குறித்து ஆலோசித்து அமல்படுத்த, தில்லித்
தமிழ்ச் சங்கத்தில் இரு தினங்களும் பேரவைக் கூட்டம் நடைபெறும்.
"இதையொட்டி, மாநாட்டு மலர் வெளியிடப்படுகிறது. அதற்கு அனைத்து இந்திய தமிழ்
அமைப்புகளின் உறுப்பினர்களது கவிதைகள், கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன' என்று
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் தெரிவித்தார்.
படைப்புகள் தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு வந்து சேர வேண்டிய ஆகஸ்ட் 10 கடைசி
நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் இரா. முகுந்தன்
(098102-71676), இணைச்செயலர் பெ. இராகவன் நாயுடு (098918-16605) ஆகியோரை தில்லித்
தமிழ்ச் சங்கம், இராமகிருஷ்ணாபுரம், தமிழ்ச் சங்கம் மார்க், புது தில்லி - 110022 (தொலைபேசி:
011-26174217, 26193964) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.