திருக்குறள் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 நவம்பர், 2023

திருக்குறள்மாநாடு – நூற்பதிவு நாள் நீட்டிப்பு

 




ந்தாவது திருக்குறள் மாநாடு

பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024

சிகாகோ

நூற்பதிவு நாள் நீட்டிப்பு

அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு

வணக்கம்.

மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம்.

தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org

எனவும் தெரிவித்துஇருந்தோம்.

பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும் சிலர்தான் பதிவிற்கான விவரங்களைத் தெரிவித்துள்ளனர். பங்கேற்பு ஆர்வலர்கள்

நவமபருக்குள் நூலை அச்சிடமுடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். அறிக்கையைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இங்ஙனம் கருதுகின்றனர்.

பழைய நூல்களாயின் வரும்    மாசி 29, 2055 / மார்ச்சு 12, 2024 ஆம் நாளுக்குள்ளும்

புதிய நூல்களாயின்  வரும் பங்குனி 13, 2055 / மார்ச்சு 26, 2024  ஆம் நாளுக்குள்ளும்   கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்

எனப் போதிய கால வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதிவுதான் நவம்பர் 30 ஆம் நாளுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பதிவு நாளை கார்த்திகை 29, 2054 / 15.12.2023 வரை நீட்டித்துள்ளோம். நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

thirunool50@gmail.com மின்வரிக்கு நூல் பெயர், நூலாசிரியர் பெயர் தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

பொறுப்பாளர் , நூலரங்கம்

ஐந்தாவது திருக்குறள் மாநாடு

‘குறள்நெறி ஓங்கின் குடியரசு ஓங்கும்!



ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!

அகரமுதல

திருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா?- தமிழறிஞர்கள் ஓசனை!
தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார்.
அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு உதவியது போல் பிரான்சு மாநாட்டிற்கும் உதவுவோம்” என்றார். அனைவரும் மகிழ்ந்து வரவேற்றனர்.
இதுகுறித்து திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழறிஞர்கள் சிலரிடம் பேசியபோது,
“நிகழ்ச்சி நிரலில் பெயர் இல்லாத பொழுதும் நிறைவு விழாவிற்கு வந்தது, அமைச்சரின் ஈடுபாட்டைக் காட்டுகிறது. அவர் பேச்சிலே ஆர்வம் தொனித்தது, உண்மையாக உதவ எண்ணுகிறார் என்பதைக் காட்டுகிறது. காலையில் மாநாட்டுக்கு வந்து யுனெசுகோ இயக்குநரைச் சந்தித்துக் கீழடி குறித்துப் பேசியதுடன் திருக்குறள் நூலை உலகப் பொதுநூலாக அறிவிக்க வேண்டியது குறித்தும் பேசியுள்ளார். மீண்டும் மாலையிலும் வந்துள்ளார். ஆகவே, திருக்குறள் மாநாட்டில் ஆர்வம் காட்டுகிறார் என்பது தெளிவாகிறது. அமைச்சர் நிதியுதவி குறித்து முன்னதாகவே அறிவித்தது மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு (ஃபெட்னா) உதவியது போல் உதவுவோம் என்றதும் மகிழ்ச்சி பறந்தோடி விட்டது. அந்த மாநாட்டில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செல்லத்தானே அரசு உதவியது. அவர்களும் கருத்தரங்கம் முடிந்த பின் சென்று சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். அதைப் போல் அல்லாமல் திருக்குறள் நாட்டுக்கும், ஆக்கபூர்வமான தமிழர்களுக்கும், தமிழுக்கும் பயன்படுவது போன்ற உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்” என்கிறார்கள்.
மின்னம்பலம் 29.09.2019