தலைமையமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தலைமையமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 மார்ச், 2013

பொது நல மாநாட்டை வேறு நாட்டில் நடத்த வலியுறுத்த வேண்டும்: செயலலிதா மடல்

ொத்குழு தேள் அடிமைர் தை க் வது. ில் ிகள அடிமைர் ிகள ி்கச் செபள வர வேபு ிில் ிிலை. ினம்ின் கரி்கப் ்டள். ி்தணைக் ிலேயே  ப் டா கைில்  வடிகை எட்க வே்டம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 +++++++++++++++++++++++++++++++++++++++++

து நல மாநாட்டை வேறு நாட்டில் நடத்த வலியுறுத்த வேண்டும்: செயலலிதா ல்

இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி கட்டத்தில் அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் மற்றும் இனஒழிப்பு குறித்து தமிழகம் உள்பட உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக, கடந்த 18 ஆம் தேதி தங்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தை நினைவுபடுத்துகிறேன்.மேலும், இலங்கையில் இப்போதும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதுடன் அதில் திருத்தங்களையும் செய்ய வேண்டுமென யோசனை தெரிவித்திருந்தேன். ஆனால், ஐ.நா.மன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீர்த்துப் போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இந்தப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.இந்தச் சூழலில், வரும் நவம்பர் 15 முதல் 17 வரையில், காமன்வெல்த் மாநாட்டை இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டை இலங்கையில் நடத்தினால், அந்த நாடு நிகழ்த்திய போர்க்குற்றங்கள், இனஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் இப்போது நடந்து வரும் மனிதஉரிமை மீறல் செயல்களை அங்கீகரிப்பது போலாகி விடும்.
காமன்வெல்த்தின் கொள்கைகளான மனித உரிமைகள், சமநிலை, ஜனநாயக சுதந்திரம் போன்றவற்றை மதிக்காத நாடாக இலங்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனஒழிப்பு மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை அமைப்பை ஏற்பதற்கு அந்த நாட்டை வற்புறுத்தவும், இலங்கைத் தமிழர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் உரிமைகள் சமமாக கிடைக்கச் செய்யவும், அவர்கள் கண்ணியத்துடன் வாழவும் இந்த மாநாட்டை சிறந்ததொரு வாய்ப்பாக இந்தியா பயன்படுத்த வேண்டும்.ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் பக்கம் நிற்கும் சர்வதேச தலைமையாக இந்தியா விளங்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்னையில் தேசிய அளவிலான பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தியா மிக முக்கிய பங்கினை வகிக்க வேண்டும். அதற்கு இந்த மாநாட்டை ஒரு வாய்ப்பாக உபயோகிக்க வேண்டும்.
கனடா புறக்கணிக்கிறது: இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதை புறக்கணிக்கப் போவதாக கனடா அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரிட்டனில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் காமன்ஸ் கமிட்டியும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் பங்கேற்க வேண்டாம் என அந்தநாட்டு பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளது.சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தை விரும்பும் நாடாக உள்ளது. இந்த சூழலில், சர்வதேச அளவில் எந்த இடத்திலும் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தெற்காசியாவின் தலைமை நாடாக இந்தியா விளங்குகிறது. இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் புரிந்தோரை தண்டிப்பதற்கு சுதந்திரமான பன்னாட்டு அமைப்பை ஏற்படுத்தும் கருத்தை ஏற்கச் செய்யும் வகையில் இலங்கை நாட்டினர் மீது மிகுந்த செல்வாக்கை வெளிப்படுத்தும் தன்னிகரற்ற நிலையில் இந்தியா உள்ளது.   
காமன்வெல்த் மாநாட்டுக் கூட்டத்தை நடத்துவதற்கு, மாற்று இடம் ஒன்றை யோசிப்பதற்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது.   காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் இடம் மற்றொரு நாட்டிற்கு மாற்றப்பட வேண்டும் எனக் கேட்பதற்கு இந்தியா இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்தியா இந்த அறிவார்ந்த முயற்சியை மேற்கொண்டால், காமன்வெல்த் உறுப்பு நாடுகளிடையே பெருத்த ஆதரவு கிடைக்கும். இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியாவின் தரப்பிலிருந்து உயர்நிலையில் உள்ள அதிகாரிகள் கலந்து கொள்வது அல்லது ஈடுபடுவது என்பது அந்த நாட்டை அரசை ஊக்கப்படுத்துவதாக அமைவதோடு மட்டுமன்றி, மிகவும் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துவிடும்.
எனவே, வரும் நவம்பர் 15 முதல் 17 வரை கொழும்பு நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டாம். அவ்வாறு அதில் கலந்துகொள்ள உத்தேசித்துள்ள தலைவர்கள் அதிலிருந்து பின்வாங்க வேண்டும் என்றும் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதன் மூலம், இலங்கையில்  உள்ள துரதிருஷ்டமிக்க, சுரண்டப்பட்ட சிறுபான்மை தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவும் முடியும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழகம் மற்றும் உலகெங்கிலும் வாழும் பல இலட்சம் தமிழ் மக்களின் உணர்வுகளையும், பரஸ்பர சார்பு நிலையையும் இந்தியா தெளிவுபடுத்துதோடு, இலங்கைத் தமிழர்கள் மீது சிங்களர்கள் அத்துமீறுகிற வகையில் அவர்களுக்கு கொடுமை இழைக்க வேண்டுமென்ற உணர்வு அவர்களிடையே நிலவுவதை தணிக்கும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(4)

அம்மா அவர்களின் உண்மையான கோரிக்கையை மைய அரசு பரிசீலனை செய்யுமா? அல்லது வழக்கம் போல் மௌனம் காக்குமா?
அம்மா அவர்களின் உண்மையான கோரிக்கையை மைய அரசு பரிசீலனை செய்யுமா? அல்லது வழக்கம் போல் மௌனம் காக்குமா?
அம்மா அவர்களின் உண்மையான கோரிக்கையை மைய அரசு பரிசீலனை செய்யுமா? அல்லது வழக்கம் போல் மௌனம் காக்குமா?
நல்ல அறிக்கை.நல்ல உணர்வுகள்.,முதல்வருக்கு பாராட்டுக்கள். ஆயினும் சுமார்ஒரு மணி நேரம் முன்பு ( இரவு 08:15 மணியளவில்-தற்சமயம் இரவு 09:22 மணி) ஒரு வணிக நிறுவத்தில் ஒரு தமிழ் மாலை செய்தி நாளேட்டில் இதே முதல்வரின் அரசுதான் இலங்கை விளையாட்டு காரர்கள் உள்ள அணிகள் கலந்துகொள்ளும் ஐ.பி.எல் விளையாட்டு போட்டிகளின் சென்னை நிகழ்வுக்கு"வரலாறு காணாத" காவல்துறைபாதுகாப்பு அளிக்கவுள்ளதாக செய்தியை தந்துள்ளது. இலங்கை அணி கலந்துகொள்ளும் என்பதால் சென்னையில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகளையே அனுமதி மறுத்து வேறு நாட்டுக்கு மற்ற சொன்ன அதே முதல்வர்,இலங்கை விளையாட்டு கார்கள் அடங்கிய அணிகள் கலந்து கொள்ளும் ஐ.பி.எல் போட்டிகளை எப்படி, ஏன் மாபெரும் பாதுகாப்பு கொடுத்து சென்னையில் நிகழ அனுமதிக்கலாம்? 1989-லே இந்திய அமைதிப்படை திரும்பிய போபிடு வரவேற்க மருத்த அதே கலைஞர் பிறகு , 2009-இல் தனது தி மு க கட்சியும்அடங்கிய இந்திய அரசின் முழு ஆதரவுடன் விடுதை புலிகளையும் ஈழ மக்களையும்சிங்கள படைகள் அழித்தபோது வெறும் நாடகமாடியது போலத்தானே இதுவும்?

வியாழன், 21 மார்ச், 2013

சிதம்பரம் எப்போது தலைமையமைச்சர் ஆனார்?

தாலின் வீட்டுப்புலனாய்வு என்பது அரசியல் காரணம்தான் என்பதில் ஐயமில்லை. எனினும் மற்றொரு துறை அமைச்சரைக் கண்டிக்கும் அதிகாரம் சிதம்பரத்திற்கு உள்ளதா? இவர் என்ன தலைமையமைச்சரா? தேர்தலுக்குப் பின் தன் அணிக்கான ஆதரவு கருதி இவர் நடந்திருக்கலாம்.  ிதை த் ப் பட்தம் இவர்மீது தலைமையமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
 
+++++++++++++++++++++++++++++++++++++++++++
மு.க. தாலின் வீட்டில் சோதனை: சி.பி.ஐ. நடவடிக்கையை ஏற்க முடியாது- ப.சிதம்பரம்
மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை: சி.பி.ஐ. நடவடிக்கையை ஏற்க முடியாது- ப.சிதம்பரம்
Vinyasa Yoga
புது தில்லி, மார்ச்சு 21-
 
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சொகுசு கார் இறக்குமதியில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. விலகிய உடன் சி.பி.ஐ. சோதனை நடத்தியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
 
மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க கூடாது. சம்பந்தப்பட்ட துறை மந்திரியிடம் எனது கண்டனத்தை தெரிவித்து உள்ளேன். இதுகுறித்து மேலும் கேள்வி கேட்க விருப்பினால் சம்மந்தப்பட்ட மந்திரி அல்லது சி.பி.ஐ. இயக்குனரிடம் கேளுங்கள்.
 
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
 
இதேபோல் மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு பா.ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாரதீய ஜனதா உறுப்பினர் பிரகாஷ் ஜவாட்கர் இதுகுறித்து கூறியதாவது:-
 
இந்த சோதனை மூலம் காங்கிரஸ் அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி வருவது நிரூபணமாகி உள்ளது. இது அரசியல் நோக்கமாகும். சி.பி.ஐ.யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க இந்த அரசு எது வேண்டுமானாலும் செய்ய விரும்பும் என்பதை இது காட்டுகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறும்போது:-
 
காங்கிரஸ் அரசு சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி உள்ளது. சி.பி.ஐ. காங்கிரஸ் புலனாய்வு குழுவாக செயல்படுகிறது என்றார்.
 
இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா கூறும்போது,
 
அரசியல் காரணங்களுக்காக சி.பி.ஐ. பயன்படுத் தப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. இருந்தபோது சோதனை நடத்தப்படவில்லை. இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
 
சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கூறும்போது, இந்த நடவடிக்கையை சமாஜ்வாடி கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. இது பழி வாங்கும் அரசியல். மத்திய அரசு தனது அதிகார பலம் மூலம் அச்சுறுத்தக்கூடாது என்றார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Thursday, March 21,2013 02:21 PM, Ilakkuvanar Thiruvalluvan said: 0 0
தாலின் வீட்டுப்புலனாய்வு என்பது அரசியல் காரணம்தான் என்பதில் ஐயமில்லை. எனினும் மற்றொரு துறை அமைச்சரைக்கண்டிக்கும் அதிகாரம் சிதம்பரத்திற்கு உள்ளதா? இவர் என்ன தலைமையமைச்சரா? தேர்தலுக்குப் பின் தன் அணிக்கான ஆதரவு கருதி இவர் நடந்திருக்கலாம். அதிகாரத்தை த் தவறாகப் பயன்படுத்தும் இவர்மீது தலைமையமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
Thursday, March 21,2013 02:05 PM, pala said: 2 9
வந்தவர்கள் சிபிஐ அஹ இருக்கமுடியாது. தி மு க இதை ஒரு நாடகமாக இவர்களே ஆட்களை வைத்து நடித்திருக்க வாய்ப்பு அதிகம்
Thursday, March 21,2013 02:04 PM, சீனு said: 0 8
தனியா நின்னு டெப்பாசிட் கூட வாங்கமுடியத னேல்லாம் கூட மத்திய மந்திரியாகலாம்
Thursday, March 21,2013 02:03 PM, ரங்கராஜன் said: 2 3
வாயத் திறந்தாலே பொய் வக்கீலில்லியா? இவருக்குத் தெரியாம இவர் டிப்பர்த்மென்ட் ரெய்டு பணிச்சம் அப்போ ராஜினாமா பண்ணுவதுதானே? எண்டா திமுகவோட சேர்ந்து நாடகம் ஆடுறீங்க ? நாங்க ஏமாறமாட்டோம்
Thursday, March 21,2013 01:56 PM, சட்டம் said: 1 9
அப்படி பார்த்தால் ஒரு திருடனை பிடிக்கும் முன்பு போலீஸ்காரர் உள்துறை மந்திரியிடம் அனுமதி வாங்க வேண்டுமா அல்லது அந்த உள்துறை மந்திரி அந்த திருடனை பிடிக்க வேண்டாம் என்று உத்தரவு போடா முடியுமா..............யாரவது விளக்குங்களேன்......................ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. கூட்டு களவாணிகள் ஒருவரை ஒருவர் காட்டி கொடுக்க மாட்டார்கள். ஏன் என்றால் அது இருவருக்கும் பெரிய ஆபத்தில் முடியும். இது தான் உண்மை........

வியாழன், 14 மார்ச், 2013

குடிமை ப் பணித் தேர்வு மாற்றங்கள் - முதல்வர் மடல்

உடனடி நடவடிக்கைக்குப் பாராட்டுகள். மடல் எழுதியதுடன் அல்லாமல் முயற்சி மேற்கொண்டு மத்தியப் பணித் தேர்வுகளைத்தமிழிலும் பிற மொழிகளிலும் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் மழலைக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்வழிப் படிப்பு இருப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

+++++++++++++++++++++++++

 

குடிமை ப் பணித்  தேர்வில் புதிய மாற்றங்களால்  ஊர்ப்புறஏழை மாணவர்களுக்கு ப் பாதிப்பு: தலை.‌ அமை ச்சருக்குச்  செயலலிதா மடல்

சிவில் சர்வீஸ் தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்களால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். எனவே, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு புதன்கிழமை அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில்:
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்து தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்தப் புதிய நடைமுறைகள் இந்து மொழி பேசாத சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கு எதிரானதாகும். சிவில் சர்வீஸ் தேர்வு முறைகளில் நான்கு விதமான முக்கிய மாற்றங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்துள்ளது. அவை தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.பள்ளிக் கல்வியின் இறுதி வரை தமிழில் படித்து, பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் படித்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்ற பழைய முறை இப்போது மாற்றப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு வரை எந்தவொரு மாணவர் தமிழ் வழியில் பயில்கிறாரோ அவர் மட்டுமே, பிரதானத் தேர்வில் விருப்பப் பாடங்கள் உள்பட அனைத்தையும் தமிழில் எழுத முடியும் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது, தாய்மொழியாம் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பை பறிப்பதாகும். ஆனால், இந்தி மொழி வழியில் படித்தவர்களுக்கு இதுபோன்ற நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படவில்லை. இரு மொழிகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் என்பது தமிழ் பேசும் தேர்வர்களுக்கு மட்டுமின்றி இந்தி மொழி மொழி பேசாத அனைத்து மாணவர்களுக்கு எதிரானதாகும். மேலும், தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும்.இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-வது சரத்துகளுக்கு எதிரானது மட்டுமின்றி, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஒப்பிடும் போது தாய்மொழியில் எழுதும் மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும்.
இரண்டாவது புதிய நடைமுறையாக, பட்டப் படிப்பில் பிரதான பாடமாக தமிழ் இலக்கியத்தை தேர்வு செய்து படித்த மாணவர்களால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியும். இந்த நிபந்தனை மற்ற பாடங்களுக்கு விதிக்கப்படவில்லை. குறிப்பாக, இளங்கலை கணிதம் படித்த ஒருவர், தனது விருப்பப் பாடமாக வரலாறை எடுக்க முடியும். ஆனால், தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியாது.மூன்றாவது மாற்றமாக, ஒரு குறிப்பிட்ட மொழிப் பாடத்தை தேர்வுக்காக எடுக்க விரும்புவோரில், குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் அவர்கள் இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வை எழுத முடியும். இந்த புதிய நடைமுறையானது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானதாகும்.நான்காவது புதிய அம்சமாக, இந்திய மொழியில் கட்டாயமாக ஒரு தகுதிóத் தாளை எழுத வேண்டும் என்கிற விதிமுறை நீக்கப்பட்டு, ஆங்கில மொழியில் கட்டுரை எழுதும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆங்கிலம் படித்த தேர்வர்களுக்கு சாதகமாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.மாநில அரசுகளிடம் ஆலோசிக்கவில்லை: சிவில் சர்வீஸ் தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து, மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையையும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளவில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்வதைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.
எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.