சேக்கிழான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேக்கிழான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஜூன், 2025

65. இல்லறத்தான் பணி எனத் திருவள்ளுவர்கூறுவதுவே தமிழ் கூறும் சனாதனம் – சேக்கிழான் 66. சனாதனம் என்றால் மரியாதைக்குரிய ஒழுங்கு முறை எனப் பல பொருள்கள் சொல்லப்படுகின்றன. – இவை சரிதானா? : இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64 தொடர்ச்சி)


தென்கடலில் மூழ்கிய நம்மவர்களையும் – தென்புலத்தாரையும் – பிறரையும் போற்ற வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் ஆரியமோ தமிழர்களையே பழிக்கிறது. அவ்வாறிருக்க இதனை எங்ஙனம் சனாதனம் என்று சொல்ல முடியும்? இப்படித்தான் ஆரியத்திற்குப் பொருந்தாத தமிழ் நெறிகளை எல்லாம் ஆரியமாகக் கூறுவது ஆரியவாதிகள் வழக்கம்.


தென்புலத்தார் என்பதற்குக் குறள்நெறி அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார், “தென் நாட்டார் என்பதே நேர் பொருளாகும். திருவள்ளுவர் காலத்தில் வடநாட்டார் தென்நாட்டில் குடியேறிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தென் தமிழ் நாட்டார் போற்றி வரவேற்று அவர்கட்கு வேண்டும் யாவும் அளித்தனர். தன் நாட்டவர்க்கு உதவுதல் மறுத்தும் அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதனைக் கண்ணுற்ற வள்ளுவர் பெருமான் தம் நாட்டவரை தென் நாட்டவரைப் போற்றுதலைத் தலையாய கடன்களில் ஒன்றாக வலியுறுத்தியுள்ளார் என்பதே சாலப் பொருத்தமாகும்.


“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று உலகத்தையே ஒரு குடும்பமாகக் கருதி வாழ்ந்த தமிழர் தம் பகுதியினரைப் போற்றாது பிற பகுதியிலிருந்து வருபவரைப் போற்றத் தலைப்பட்டமை கண்டு வள்ளுவர் பெருமான் உளம் நொந்து நாட்டுப் பற்றுதலை வற்புறுத்தியுள்ளார். உலகப் பற்றுக் கொள்ளுமுன் தந்நாட்டுப் பற்றுக் கொள்ள வேண்டுமென்பது உலகப் பொதுமறை உரைத்த ஆசிரியரின் கருத்தாகும்.” என்கிறார். இவ்வாறு நம்மவரைப் போற்ற வேண்டும் என்னும் நெறி எங்ஙனம் நம்மவரை ஒதுக்கும் சனாதனம் ஆகும்?


இவ்வாறுதான் ஆரியவாதி சேக்கிழான் வேறு சில பாடல்கள் கூறும்
தமிழ்நெறிகளையும் ஆரியச் சனாதனமாகத் திரிக்கிறார். பிற ஆரியவாதிகளும் இவ்வாறுதான் கூறுகின்றனர்.

ஞாயிறு, 8 ஜூன், 2025

இந்து வாழ்வியல் அறமும் + 64. அனைத்து உயிரும் ஒன்றே என்பதுவுமே தமிழ்ச்சனாதனம் என்கிறாரே சேக்கிழான். – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 -. தொடர்ச்சி)

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்

தென் கடம்பை திருக் கர கோயிலான்

தன் கடன் அடியேனையும் தாங்குதல்

என் கடன் பணி செய்து கிடப்பதே’

  •  என்பது தேவாரம் (1262). வழக்கம்போல் தமிழ் நெறியை ஆரியமாகத் திரித்துக் கூறும் உத்திதான் இது. ஆரியத்தில் அனைவரும் பணி செய்வது குறித்துக் கூறவில்லை.  நான்காம் வருணத்தவர்தான் பிறருக்குப் பணி செய்யப் பிறந்தவர்கள் எனக் கூறுவதுதான் சனாதனம். அவ்வாறிருக்க “என் கடன் பணிசெய்தல்” எப்படிச் சனாதனம் ஆகும்?

இவர்களின் பணிக்குச்(!) சான்றாக ஒரு நிகழ்வைக் காண்போம். கருநாடக மாநிலம் சாம்ராசுநகர் மாவட்டம் சுலவாடி ஊரில் மாரம்மா கோயில் உள்ளது. சாளூர் மடத்தின் பெரிய மடாதிபதி குருசாமி. இதன் இளைய மடாதிபதி மகாதேவசாமி. இருவருக்கும் அதிகார மோதல் இருந்து வந்துள்ளது. மாரம்மா கோயில் பொறுபப்பாளர்களுள் ஒருவரான மாதேசு என்பவரின் மனைவி அம்பிகாவுக்கும் பல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இளைய மடாதிபதிக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கோயில் அதிகாரத்தைக் கைப்பற்றி காதலி அம்பிகாவிடம் கொடுக்க இளைய மடாதிபதி திட்டமிட்டார். அத்துடன் பெரிய மடாதிபதியையும் அவமானப்படுத்த வேண்டும் என்றும் காய் நக்த்தினார். இளைய மடாதிபதியின் தலைமையில் சதித்திட்டம் தீட்டினர். 2018இல்  கோயில் கோபுரத் திறப்பு விழாவின்பொழுது அம்பிகாவும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து நிகழ்ச்சிக்கு வரும் பத்தர்களுக்கான உணவில் 15 குப்பி நஞ்சினைக் கலந்து விட்டனர். இதனால் 15 பேர் உடனடியாக இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்புற்றனர். கோயில் பொறுப்பிலிருந்தாலும் இறையச்சம் இன்றி இறையன்பர்களைக் கொல்வதும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதும்தான் சனாதனம். (இச்செய்தி 20.12.2018 விகடனில் வந்துள்ளது.)

 இத்தகைய கொடுஞ்செயல்களைப் பணிகளாகக் கொண்டவர்கள் இறைப்பணிகள் செய்வதாக ஏமாற்றித்தான் வந்துள்ளனர்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்…

என்னும் திருவாசகப் பாடலைக் (சிவபுராணம்: 26 – 32) குறிப்பிட்டுத்தான் இங்ஙனம் மக்களிடையே வேறுபாட்டைக் கற்பிக்கும் ஆரியத்தை எளிதில் மறக்கடிக்கும் வண்ணம் இப்பொய்யுரை புகல்கிறார்.

சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும்(மனு 3.251). இவ்வாறு சூத்திரர்கள் என்று சொல்லி மக்களில் பெரும்பான்மையரை இழிவாகக் கருதுவதுதான் சமமாகக் கருதுவதா?

பிராமணரே உயர்ந்தவர், பிரமாணரே தொழத்தக்கவர், பிராமணரே தெய்வம் என்று சொல்லும் சனாதனம் எங்ஙனம் அனைத்துயிரும் ஒன்றே என மதிக்கும் தமிழ் நெறியாகும். இறைத்தொண்டர் யாராயினும் தொழத்தக்கவராகக் கருதும் தமிழ் நெறி எங்ஙனம் ஒரு சாராரை உயர்த்தி அவரைத் தெய்வமாகக் கூறும் சனாதனத்திற்கு ஒப்பாகும்? இதனைத் தமிழ்ச்சனாதம் என்பது கெடுபுத்தி யுடையோர் கருத்தன்றி வேறென்ன?

கிருட்டிணனின் வாக்கு, “செல்வம் படைத்தவனாகவும், உயர் குலத்துதித்தவனாகவும் நான் இருக்கிறேன். எனக்குச் சம்மானவன் வேறொருவன் எவன் இருக்கிறான்? நான் வேள்வி செய்வேன். நான் தானம் செய்வேன். நான் களிப்பேன். (கீதை 16:15)” என்பதாகும். இங்கே  வெளிப்படையாகச் சமமின்மையைத் தெரிவிக்கையில் எங்ஙனம் துணிந்து புளுகுகிறான் சேக்கிழான்?

(தொடரும்)