கல்யாணசுந்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்யாணசுந்தரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

கல்யாணசுந்தரத்திற்குக் காதுதான் கேட்காது...- எல்.முருகராசு


கல்யாணசுந்தரத்திற்குக் காதுதான் கேட்காது...- எல்.முருகராசு

நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர்.
அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார்.
பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.
திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.
யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது.
ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.
இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.
ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது.
அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.
எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.
இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.
கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.
பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.
இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்.


வெள்ளி, 23 அக்டோபர், 2009

தமிழ் இணைய மாநாடு 2009



தமிழ் இணைய மாநாடு 2009 எதிர்வரும் ஒக்டோபர்த் திங்கள் 23-25 தேதிகளில் ஜெர்மனியில் கோலென் (Koeln) நகரில் நடைபெறும் என்று அறிவிப்பதில் உத்தமத்தின் செயற்குழு மகிழ்ச்சியடைகிறது.த.இ.மா. 2009 சிங்கப்பூரில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற த.இ. மாநாட்டின் வடிவத்தைக் கொண்டிருக்கும். இது தமிழ் கணிமை, தமிழ் இணையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்களையும், எதிர்கொள்ள நேரும் சிக்கல்களையும் பற்றி உரையாடும் தொழில்நுட்பவியல் மாநாடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்குச்செறிவூட்டும் வகையில் 100 நபர்களை மட்டுமே கலந்து கொள்ள அழைக்கவுள்ளோம்.தமிழுக்கு மட்டுமான தொழில்நுட்ப மாநாடான தமிழ் இணைய மாநாட்டிற்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் கணினி வல்லுநர்களை வரவேற்கிறோம். இத்தகைய தமிழிணைய மாநாடுகள் இதற்கு முன்னதாக சென்னை (1999,2003), சிங்கப்பூர் (200,2004), கோலாலம்பூர் (2001),சான் பிரான்சிஸ்கோ (2002) ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளன. ஐரோப்பாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.த.இ.மா. 2009, மாநாடு நடக்கவிருக்கும் கோலென் பல்கலைக்கழகத்தின் இந்தியவில் மற்றும் தமிழியல் மையத்தின் கூடிய ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது.பேராசிரியர்.உள்ரிகே நிக்கிலசு அவர்களின் தலைமையில் இயங்கும் இம்மையம் ஐரோப்பாவில் தமிழ் ஆய்வுக்குமான தலைசிறந்த மையங்களில் ஒன்றாகும். இவ்வாய்வு நிறுவனத்திலுள்ள தமிழாசிரியரும் ஆய்வாளருமான முனைவர். தாமசு மால்ட்டன், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியங்களை மின்வடிவேற்ற பெரும் முயற்சிசெய்தவரும் தமிழார்வலர் குழுக்களில் பெரிதும் அறியப்பட்டவருமாவார்.தமிழகத்துக்கு வெளியே 50,000 தமிழ் நூல்களுக்கு மேல் வைத்திருக்கும் ஒரே கல்வி நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புடைய இவ்வைரோப்பிய நிறுவனத்தில் தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
கருத்துக்கள்

கணிணியறிவியலில் தமிழ் தழைத்தோங்க இம்மாநாடு வழி வகை காணவும் இணைய மாநாடு சிறப்புற நடைபெறவும் வாழ்த்துகள்! இம்மாநாட்டைச் சிறப்புற நடத்தும் உத்தமம் அமைப்பிற்கும் கோலேன் பல்கலைக்கழகத் தமிழியல் மையத்திற்கும் பாராட்டுகள்! சிறப்பான கட்டுரைகளை வெளியிடத் தினமணிக்கு வேண்டுகிறேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2009 2:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *