இலங்கை srilanga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை srilanga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 மே, 2012

ஈழத்தமிழர்களை அவமானப்படுத்த வேண்டா: சுசுமாவுக்குப் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

ஈழத்தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம்: சுஷ்மாவுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தினமணி First Published : 11 May 2012 01:10:34 PM IST


சென்னை, மே.11: ஈழத் தமிழர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார்.இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.இலங்கை சுதந்திரம் பெற்றப் பிறகு சிங்களத்தோடு தமிழுக்கும் சமஉரிமையும் சிங்களரோடு தமிழர்களுக்கும் சமஉரிமையும் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக அறவழியில் தமிழர்கள் நடத்தியப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க சிங்கள அரசு முயற்சி செய்தது. இந்த நிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழீழம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழர்கள் 1977ஆம் ஆண்டு முடிவு செய்தனர். அதையே அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன் வைத்தனர். தமிழர் பகுதியில் இருந்த ஒரே ஒரு தொகுதியைத் தவிர அத்தனைத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதே கோரிக்கைக்கு மக்கள் பேராதாரவு தந்து வந்திருக்கின்றனர். தமிழர் பகுதியில் தமிழீழ கோரிக்கைக்கு எதிரானவர்கள் மக்களால் ஒதுக்கித் தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றை கொஞ்சமும் தெரிந்துகொள்ளாமல் இலங்கையில் இருந்த சில மணி நேரங்களில் யாரோ சிலரை பார்த்துப்பேசிவிட்டு முடிவு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெரும் பொறுப்பை வகிக்கும் சுஷ்மா சுவராஜிக்கு அழகல்ல.கடந்த போர் முடிந்த பிறகு ராணுவக் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திய இராசபக்சே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தோற்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தார். ஆனாலும் மக்கள் ஆதரவினால் அவர்கள் வெற்றிபெற்றார்கள். சிங்கள அரசோடு இணங்கி அவர்கள் அளித்த அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்கிற தமிழர்கள் வேண்டுமானால் சுஷ்மா சுவராஜ் சொன்னது போல சொல்லியிருக்கலாம். ஆனாலும் அந்த மக்கள் முழுமையாக இன்னமும் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தியே வருகிறார்கள்.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எந்தக் கருத்தையும் அந்த மக்கள் மீது திணிக்க முடியாது. அவ்வாறு கூறுவது அந்த மக்களை அவமானப்படுத்துவதாகும். இப்போதும் ஐ.நா. மேற்பார்வையில் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அந்த மக்களின் உண்மையான விருப்பம் என்ன என்பது வெளியாகும். இந்தக் கோரிக்கையை ராசபட்சேவிடம் வலியுறுத்துவதற்கு சுஷ்மா சுவராஜ் தயாரா? என அவருக்கு அறைகூவல் விடுக்கிறேன்.இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 15 நவம்பர், 2011

தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் வெடிக்கும்: உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்!


தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் வெடிக்கும்: உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன்!

காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் எழுதி மூன்று நூல்கள் நேற்று சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்போது உரைநிகழ்த்திய கவிஞர் காசியானந்தன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் புதுக்கவிதையான சிந்தல்,பொழிச்சல், நறுக்கு என்ற மூன்று நூல்கள் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதில் உலகதமிழர் இயக்க தலைவர் பழநொடுமாறன், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகள் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இதில் உணர்ச்சி கவிஞர்க் காசியானந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, உலகில் மிகப்பெரிய கொடுமைகள் நடந்தன வியட்னாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புதுக்கவிதை எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள்.
கருத்து வெளியிட்டவர்களும் இருக்கின்றார்கள். ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலையுண்டு விழுந்த நேரத்தில் உலகத்தில் யார் ஈழத்தமிழ் மக்களுக்காக எழுதினார்கள். எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. யார் இதற்காக கைதந்தார்கள் கோணேஸ்வரி என்ற தமிழ்பெண் மட்டக்களப்பில் பெண் உறுப்பில் வெடிகுண்டினை வைத்து வெடிக்க செய்தார்கள். புங்குடுதீவு கண்ணகி கோவிலில் வைத்து சாரதாம்பாள் சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தார்கள்.
இவ்வாறு போரின் இறுதியில் இசைப்பிரியா. போரின் முடிவில் அவளை சிறைப்படுத்திய சிங்கள இனவெறியர்கள் போர்கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கின்றது. அதற்கமைவாக நடத்தினார்களா இல்லையே? ஓவியர் சந்தாணம் முள்ளிவாய்க்கால் படுகொலையினை வைத்து வரைந்த படத்தினை வைத்து முருகன் என்கின்ற சிற்பி உள்ளிட்டவர்களால் தஞ்சையில் நிறுவப்பட்டுக்கொண்டிருக்கு
ம் நினைவுச்சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை சித்திரமாக வடித்துக் கொண்டிருக்கின்றான். அப்படிப்பட்ட கலைஞன் இந்த மண்ணுக்கு தேவை தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் பல படைப்பாளிகள் படைப்புக்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு எழுதிய எழுத்தாளர்களின் அளவு ,ரஷயவிடுதலைப்போரின் போது எழுதிய எழுத்தாளர்களின் அளவு, தமிழனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் போராட்டத்திற்காக எழுதியவர்களை எண்ணித்தான் பாக்கவேண்டும்.
பல திரைப்படங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் இன்னும் கூடுதலான திரைப்பட கலைஞர்கள் தமிழினத்திற்கு கைகொடுக்கவேண்டும். விடுதலைக்காக கலைஞர்கள் இயங்கவேண்டும் எழுதவேண்டும், என்ற கருத்தினை படைப்பாளிகள் மத்தியில் முன்வைக்கின்றேன்.
உலகில் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் அத்தனை அரசுகளின் கீழ் இயங்குகின்ற நாடுகளிலும் அறவழியில் போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் உலகத்தில் இன்று ஒரே ஒரு நாடு மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து வாய் திறந்து பேசமுடியாத நாடாக சிறீலங்கா காணப்படுகின்றது. தமிழ் மக்கள் அப்படிப்பட்ட கொடுமையான சூழலில் வாழ்கின்றார்கள்.
தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் தமிழர் கூட்டமைப்பு. அவர்களால் எந்த அறப்போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது, அவர்கள் பேசமுடியாது. பேசினால் நாளை உயிருடன் இல்லை. ம்.. என்றால் சிறைவாசம் ஏன்… என்றால் வனவாசம் என்ற நிலை இன்று தமிழீழத்தில் இருக்கிறது. இதை கேட்பதற்கு யாருமே இல்லை.
முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம் தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள்.
நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றன். தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும். என்றும் உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்
காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு விழா
இயக்குனர் கௌதமன் வரவேற்ப்புரை

தமிழச்சி உரை

ஓவியர் வீரசந்தானம் உரை

மணிவண்ணன் உரை

நெடுமாறன் உரை

மணியரசன் உரை

காசி ஆனந்தன் உரை

வைகோ உரை

You might also like: