ஆகாயத்தாமரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆகாயத்தாமரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜூன், 2013

இடையூறுகளை எளிதாக்கினேன்

சிரமத்தை எளிதாக்கினேன்!

ஆகாய த் தாமரைகளை, ஏரிகளின் நடுவே சென்று எளிதாக அகற்றும் மிதவை இயந்திரத்தை கண்டுபிடித்த, விவசாயி தேவராஜ்: நான், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி.ஈரோட்டின் வெண்டிப்பாளைய நீர்மின் நிலையத்தின் அருகில் உள்ள ஏரியில், ஆகாய தாமரைகள் அதிகம் உள்ளன. இதை பார்த்து, அங்கு தண்ணீர் இருப்பதை அறிகுறியாகக் கொண்டு, மக்கள் குளிக்கச் செல்வர். ஆகாய தாமரைகள் உள்ள இடத்தில், மேல் பகுதியில் நீரோட்டம் குறைவாகவும், கீழ் பகுதியில் அதிகமாகவும் இருக்கும். இது தெரியாமல் குளிக்க செல்லும் பலர், ஆகாய தாமரையின் வேர்களில் சிக்கி, இறக்கும் சூழ்நிலை தொடர்ந்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு மட்டும், ஒன்பது பேர் இறந்தனர். ஆகாய தாமரைகளை அழிக்க, "வேதிக்கொல்லி' மருந்துகளை பயன்படுத்தினால், நீரில் உள்ள உயிரினங்களை பாதிக்கும். "புல்டோசரை' வைத்து அகற்ற முயற்சித்தால், ஏரியின் நடுபகுதிக்கு சென்று அகற்றுவது, மிகவும் சிரமமான காரியம். அப்படியானால், இதற்கு என்ன தான் தீர்வு என, நான் சிந்திக்கும் போது உருவானதே, "கிலன் கிளீனிங் மெஷின்' என்ற, இந்த மிதவை இயந்திரம். படகு வடிவில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மிதவை இயந்திரத்தில், மூன்று புரொப்பலர்கள் பொருத்தப்பட்டு, டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. தண்ணீரின் மேல் உள்ள ஆகாய தாமரைகளை, பல்சக்கரம் போன்ற கருவியால் வேருடன் பிய்த்து, கண்வேயர் பெல்ட்டுகள் மூலம், 15 டன் கொள்ளள வுள்ள டேங்கில் சேகரிக்கப்பட்டு, லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு முயற்சி மற்றும் தோல்விக்கு பின், இயந்திரத்தில் சிறு சிறு மாற்றம் செய்து, தற்போதைய வடிவம் கிடைத்தது. காவிரி ஆற்றில், சோதனை முறையிலான வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பின், பொதுப்பணித்துறை அமைச்சரிடம் என் கண்டுபிடிப்பை விளக்கினேன். தற்போது, தமிழக அரசின் உத்தரவை அடுத்து, வேளச்சேரி ஏரியில் முதல் கட்டமாக ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில், நான் கண்டுபிடித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதை தயாரிக்க, 25 லட்சம் செலவாகியது.

செவ்வாய், 11 ஜூன், 2013

ஆகாயத்தாமரையில் காகிதங்கள்

ஆகாயத்தாமரையில் காகிதங்கள்

வெயில் காலத்தில் ஆறுகள் வறண்டு, கழிவுநீர் குட்டைகளாக மாறுகின்றன. இந்த கழிவு நீரில் விரைந்து பரவுபவை ஆகாயத் தாமரைகள். நீர்நிலைகளின் மாசுபாட்டை உணர்த்தும் அளவுகோல்களாக ஆகாயத் தாமரைகள் உள்ளன. இந்த ஆகாயத் தாமரையைப் பயன்படுத்தி "எர்த் கிராப்ட்' என்னும் அமைப்பினர் காகிதம் செய்கின்றனர். மேற்குவங்கத்தின் வடக்கு பர்கானா மாவட்டத்தில் உள்ள கொல்சூர் கிராமத்தில், ஆகாயத்தாமரை காகிதம் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. ஆகாயத் தாமரையில் இருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தைக் கொண்டு காகிதக் கோப்புகள், எழுது தாள்கள், அட்டைகள், போட்டோ பிரேம்கள், நோட்டுப் புத்தகங்கள் தயாரிக்கலாம். நம்மூரிலும் ஆகாயத்தாமரையில் இருந்து, காகிதம் தயாரிக்க பயிற்சி பெறவும், தரவும் விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் earth_craft2001@ yagoo.com என்னும் இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கோபால் நாயக்கர் மணிமண்டபம்
பழநி பாதயாத்திரை செல்பவர்களுக்கு, விருப்பாச்சி மேடு என்பது நன்கு தெரியும். விருப்பாச்சி, மலைப்பழத்திற்கு பிரபலமானது. தற்போது தமிழக அரசு, விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு, விருப்பாச்சியில் மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.
இவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு படைபல உதவி செய்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான போரில் மைசூரு மன்னர் திப்புசுல்தானுக்கு உதவி செய்தவர். பெரிய மருது, சின்ன மருது, கேரள வர்மா, கன்னடத் தளபதி தூண்டாஜிவாக், கோவை ஷாஜிகான் ஆகியோரை இணைத்து, தென் மாநில விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார். இறுதியில் ஆங்கிலேயர்களால் கோபால் நாயக்கரும், அவரது மகன் முத்து வெள்ளையப்ப நாயக்கரும் தூக்கிலிடப்பட்டனர்.