அழுத்தூசி மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழுத்தூசி மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 நவம்பர், 2012

நீரிழிவு நோய்க்கு அழுத்தூசி மருத்துவம்

சருக்கரை நோய்க்கு அழுத்தூசி மருத்துவம் (அக்குபஞ்சர் சிகிச்சை)

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நாடு பல துறைகளில் முன்னேற்றம் அடைந்தபோதிலும் உடல் நலத்தில் இந்தியர்கள் சரியான முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்று பார்த்தால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
குறிப்பாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 56-ல் இருந்து 63 வயதாக உயர்ந்திட்ட போதிலும் என்ன பயன்? காரணம் சக்கரை நோய், இதயநோய், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிப்புக்குள்ளானோர், இன்றைக்கு உள்ள மருந்து வகைகள் மூலம் தங்கள் வாழ்நாள்களை நீட்டித்துக் கொள்ளலாமே ஒழிய பயனுள்ளதாய் வாழ முடியாது. கடந்த 10 ஆண்டுகளில், மற்ற நாடுகளைவிட இந்தியாவில்
சர்க்கரை நோய் அபாயகரமாக அதிகரித்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) அறிவித்துள்ளது.மற்ற நோய்களைவிட சர்க்கரை நோய் அதிக தீங்கிழைக்கும் நோயாக இருக்கிறது. பிற நோய்களால் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகள் மட்டுமே பாதிக்கப்படும்.
ஆனால், சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் உள்ள பிரச்னை என்பதால் மூளை, கண், இருதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என அனைத்தையும் உறுப்புகளையும் பாதிப்பதால் மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக உள்ளது. ஏனெனில் சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியுள்ளது.
2020-ம் ஆண்டில் உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 5-ல் ஒருவர் இந்தியராக இருப்பர் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கை முறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டதுதான் இதற்கான காரணம். எல்லாவற்றுக்கும் இயந்திரத்தின் உதவி, உடற்பயிற்சியின்மை, உணவு முறையில் மாற்றம், இரவு கண்விழிப்பு, எதற்கெடுத்தாலும் அவசரம், பரபரப்பு ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
அக்குபஞ்சர் மருத்துவ முறையில் சீனர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தங்களது குறிப்பில் எழுதி வைத்துள்ளனர். அதன்படி நாங்கள் சிகிச்சையளிக்கிறோம். எங்களது மருத்துவமனையில் இதுவரை 1000 - 1500 சர்க்கரை நோயாளிகள் நிவாரணம் பெற்று,மற்றவர்களைப் போலவே எந்த மருந்தோ, உணவுக் கட்டுப்பாடோ இன்றி வாழ்கின்றனர்.

சிகிச்சையின் பலன் என்ன? சர்க்கரை நோயாளிக்கு மாத்திரையின் அளவை சற்று மாற்றியமைத்து, அவர்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 160 மில்லிகிராம் அளவுக்குக் கொண்டு வருவோம். பிறகு,நாள் ஒன்றுக்கு 40 நிமிஷங்கள் சிகிச்சை என 20 நாள்கள் செய்து கொண்டு, மாத்திரைகளை படிப்படியாக குறைத்து ஒரு காலகட்டத்தில் அவற்றை முழுமையாக நிறுத்திவிடலாம்.

திங்கள், 30 ஜூலை, 2012

அணிசெய்யும் நகைகளின் அழுத்தூசி மருத்துவம்

சொல்கிறார்கள்

அழகுக்கு மட்டுமல்ல நகை...அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர்: 
நாம் அணியும் ஒவ்வொரு அணிகலன்களும், உடலில், உயிர் சக்திப் புள்ளிகளைத் தூண்டி, நம்மை சீராக இயங்க வைக்கின்றன. அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த அணிகலன்கள், ஆரோக்கியத்தையும் தருகின்றன. உதாரணமாக, பொட்டு வைக்கும் ஒரு பெண்ணை சீக்கிரத்தில், "மெஸ்மரிசம்' பண்ண முடியாது. பெண்ணின் இரு கண்களை உற்று நோக்கி வசியப்படுத்த முயற்சிக்கும் போது, மூன்றாவது கண்ணாக உள்ள பொட்டு, அந்த நபரை திசை திருப்பி விடும்.

தைராய்டு சிக்கல் உள்ளவர்களுக்கு, சரியான புள்ளிகளைப் பார்த்து காது குத்தினால், அந்த சிக்கலே தீர்ந்து விடும். கழுத்தில் செயின் அணியும் போது, அங்குள்ள புள்ளிகள் தூண்டப்படும். இதன் மூலம், உடலுக்கும், தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். பெண்கள் புஜத்தில், "வங்கி' அணிவதால், மார்பகப் புற்று நோய் வருவது பெரும்பாலும் தவிர்க்கப்படுவதாக, ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு போடுவதில் கூட, மருத்துவ நுட்பம் உள்ளது. அச்சமயத்தில் அணியும் வளையல்கள், அந்தப் பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம், வெள்ளை அணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. இதன் மூலம் தாய்க்கும், சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

மோதிரம் அணிவது, எல்லா மதத்தினராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பாலுறுப்புகளைத் தூண்டும் புள்ளிகள், மோதிர விரலில் உள்ளன. இதனால் தான் திருமணத்தன்று, மணமக்களுக்கு மோதிரம் போட்டு அழகு பார்க்கிறோம்.

கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனைத் தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்ப்பப்பை இறக்கப் பிரச்னையை, தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

"பில்லாலி' என்பது, குழந்தை பிறந்தவுடன், காலில் மூன்றாவது விரலில் அணிவது. இதை அணியும் போது, சில புள்ளிகள் தூண்டப்பட்டு, பால் சுரப்பை அதிகப்படுத்தும். அணிகலன்கள் அணிவது, வரும் முன் காக்கும் அற்புதமான விஷயம். முடிந்த மட்டும், எடை குறைவான பிளாஸ்டிக் அணிகலன்களை அணிவதைத் தவிர்க்கலாம்.