அகரமுதல
சீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்:
கணியம் அறக்கட்டளை
அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம் அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை
- Kaniyam.com தளத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, கட்டற்ற கணியம்(மென்பொருள்) சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
- comதளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட ஆர்வலர்கள் தொடர்ந்து மின்னூலாக்கத்தில் ஊக்கத்துடன் ஈடுபட்டுவருகின்றார்கள்.
- wikisource.orgதளத்தில் விக்கிப்பீடியா குழுவினருடன் இணைந்து 2000 க்கும் மேற்பட்ட மின்னூல்கள் எழுத்துணரி (OCR) மூலம் எழுத்துகளாக மாற்றப்பட்டு, மெய்ப்பு (Proof Reading) பார்க்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகளுக்குத் தேவையான கட்டற்ற கணியம் (Free Open Source Software) வெளியிடப்படுகின்றன.
தன்னார்வலர்களே இத்தகு முயற்சிகளுக்குப் பின்புலமாகவும் பக்கபலமாகவும் இருந்து வருகின்றனர். இப்பணிகள் தமிழ் மொழி சார்ந்த இலக்குகளை அடைவதற்குச் சிறந்த வெளியை ஏற்படுத்தித் தந்துள்ளது. ஆர்வலர்கள் இணைந்து பணியாற்றவும் வழிவகுத்துள்ளதுடன், நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.
நாட்டுடைமை நூல்களை அச்சு நூல்களாக வெளியிடும் மாணவர் பதிப்பகம்தம்மிடம் உள்ள 1,165 மின் நூல்களின் [2 இலட்சத்துக்கு மேல் பக்கங்கள்] சீருருவில் உள்ள சொல் ஆவணங்களைக், கணியம் அறக்கட்டளை இலவசமாக வெளியிடுவதற்குத் தருவதாக உறுதி கூறினர். அவையாவும் இலவச மின்னூலாக வெளிவரும்போது தமிழின் அரும்பெரும் படைப்புகள் அனைவரது கைகளிலும் தவழும் இனிய நிலை உருவாகும்.
மாணவர் பதிப்பகத்தாரின் பெரும்பணிகளுக்கு, அதற்கான தட்டச்சுச் செலவின் ஒரு பகுதி நன்கொடையாக உரூபாய் 5 இலட்சம் அளிப்பதாக இசைந்தோம்; இரண்டு மாதக் கால வாய்ப்பு கேட்டுள்ளோம். நாம் ஒரு பக்கத்திற்கு எவ்வளவு நன்கொடையாகத் தருகிறோம் என்று எண்ணினால், அது ஒரு மிகச் சிறிய தொகை [2.5 உரூபாய் /பக்கம்].
நன்கொடை வேண்டுகோள்
இரண்டு மாதங்களில் உரூபாய் 5 இலட்சம் நன்கொடை பெறுதல் என்பது பெரும் பணிதான். ஆயினும் கணியம் அறக்கட்டளையின் நண்பர்கள் வாசகர்கள் அனைவருக்கும் இச்செய்தியைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டுகிறோம். பல நூறு பேரின் நன்கொடைகளும் இந்த இலக்கை எட்டப் பேருதவி புரியும்.
தமிழின் மீதும், தமிழ் நூல்கள், மின்னூல்கள் மீதும் ஆர்வம் கொண்ட உங்கள் அனைவரையும் மார்ச்சு 30, 2019 அன்றுக்குள், நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்.
வெளிப்படைத்தன்மை
- கணியம் அறக்கட்டளையின் செயல்கள், நன்கொடைகள், செலவுகள் யாவும்comதளத்தில் அறிக்கையாகப் பகிரப்படுகின்றன.
- புதிய திட்டங்கள் யாவும் இங்கேhttps://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues விவாதிக்கப்படுகின்றன.
- இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing
வங்கி விவரங்கள்
கணியம் நிறுவனம்(Kaniyam Foundation); க/எண் : 606 1010 100 502 79; இந்திய யூனியன் வங்கி / Union Bank Of India, மேற்குத் தாம்பரம், சென்னை; குறியீடு IFSC – UBIN0560618
நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
தொடர்புக்கு:
த. சீனிவாசன் – 9841795468 ; அன்வர் – 8124782351 (பகிரி எண்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக