சனி, 18 மார்ச், 2017

புலம்பெயர்தமிழர் தகுதிப்பாடு குறித்த கலந்துரையாடல்

புலம்பெயர்தமிழர் தகுதிப்பாடு குறித்த கலந்துரையாடல்

பங்குனி 05, 2048 / மார்ச்சு 18,. 2017

மாலை 4.00 – இரவு 7.00

அன்புடையீர் !
செயற்பாட்டின் உருவாக்கம்
 கடந்த மார்கழி மாதம் ( 2016 ) தமிழ் தகவல் மையத்தினால் நடத்தப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுக்காகன கருத்தரங்கில் ‘அகதிகளும் புலம்பெயர்வும்’ என்ற அமர்வில் கலந்துரையாடப்பட்ட தரவுகளை உள்வாங்கி அதனை மேலும் செழுமைப்படுத்தி செயலில் முன்வைக்கும் ஒரு முயற்சியாக இக்கூட்டம் அமைகின்றது. இதை ஒரு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளும் ஆர்வமும், திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத் தொடரின் முதலாவது முயற்சியே இதுவாகும்.
பயனடைபவர் யார்?
அகதித் தகுதிக்கு விண்ணப்பித்திருப்பவர்கள், விண்ணப்பிக்க இருப்பவர்கள்,
அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்கள்,
அகதிகள் விவகாரத்தில் செயற்படும் அமைப்புகள், சட்டத்தரணிகள்
இவர்களே இக்கலந்துரையாடலின் நேரடி பயனாளிகளும் பங்காளரும் ஆவார்.
கூட்டத்தின் தற்போதைய இன்றியமையாமை என்ன?
அகதிகள் விண்ணப்பம், அவர்கள் உரிமைகள்போன்ற முதன்மையானவற்றில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைக் கொண்டுவர பிரித்தானியா அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. ஏற்கெனவே உள்ள அடிப்படை உரிமைகள் அவற்றில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பான தகவல் அறிவும், விழிப்புணர்வும் விண்ணப்பதாரிகளுக்கும், அவர்கள் தொடர்பில் செயற்படுவர்களுக்கும் தேவையாகும்.
 கூட்டத்தின் உடனடி முதன்மையை உணர்ந்து அக்கறையுள்ள அனைவரும் கலந்து கொண்டு கருத்து பரிமாறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழ் தகவல் மையம்
[Thulasi
Bridge End Close
Kingston Upon Thames KT2 6PZ
(United Kingdom)
தொலைபேசி- Telephone:  +44 (0)20 8546 1560 /  07484525594
சிவா :   07405 921896
அனுராசு: 07832 909139
மின்வரி- E-mail:       admin.tic@sangu.org ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக