அகரமுதல 177, மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017
தொல்காப்பியர் 2728ஆம் பிறந்த நாள் விழாவும்
– பனம்பாரனார் சிலைஅமைப்பு குறித்துக் கருத்து வேண்டலும்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை
சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் காப்பிக்காட்டில், ஆனி 26, 2047
(10.07.2016) அன்று தொல்காப்பியர் சிலையை நிறுவினோம்.
சித்திரை மாதச் சித்திரைக் கோள் நாள், முழுமதி நாள், தொல்காப்பியர் பிறந்த நாள் என்பர் புலவர்.
இந்த
ஆண்டு, சித்திரை மாதச் சித்திரைக் கோள்நாளில், சித்திரை 27, 2048
(10.05.2017) புதன்கிழமை காலை 1000 மணிக்குக் காப்பிக்காட்டில்
தொல்காப்பியர் சிலைக்கு மாலை அணிதலுடன் நிகழ்ச்சி தொடங்கும்.
நிகழ்ச்சி அழைப்பிதழ் எழுத அணித்தாக
உள்ளோம். அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள், அதன்
உறுப்பு அமைப்புகளின் பொறுப்பாளர்கள், யாவரும் தங்கள் வருகைக்கான
ஒப்புதலைத் தெரிவிக்க.
மேலும் தொல்காப்பியம் நூலுக்குப் பாயிரம் பாடிய பனம்பாரனாருக்குக் கன்னியாகுமரி மாவட்டம் பனம்பழஞ்சி என்னும் ஊரில் சிலை அமைக்காலாமா? சார்பாகவோ மாறாகவோ கருத்துகளைத் தெரிவித்துதவுக. அச் சிலை அமைக்கும் பணியினைத் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் ஏற்கும்
த. சுந்தரராசன்
அமைப்புச் செயலாளர்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை
தொலைப்பேசி +91 9791659770
மின்னஞ்சல் <thalainagartamilsangam@gmail.com>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக