தமிழ்மொழியிலோ யார் என்ன செய்தபோதிலும்
கேள்விமுறை யில்லை. அவரவர் தத்தமக்குத் தோன்றியவாறும் வாய்க்குவந்தன
வந்தவாறும் எழுதுகின்றனர். இவ்வாறு செல்லவிடுதலுங் கேடே.
தமிழிலக்கணமுடையார் முற்புகுந்து இதனைச் சிறிது அடக்கியாளலும் வேண்டும்.
இக்காலத்திற் பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும் மிகவும் வேறுபடுகின்றன;
இருவேறு பாஷைகளெனத் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் வேறுபாடு
மிகுந்துகொண்டேபோமாயின், பண்டிதர் தமிழ் வடமொழியைப் போலப் பேச்சு வழக்கற்று
ஏட்டுவழக்காய் மட்டில் நின்றுவிடும்; மற்றுப் பாமரர் தமிழோ
தெலுங்குமலையாளங்கள் போல ஒரு வழிமொழியாய் அமைந்துவிடும்.
– பரிதிமாற்கலைஞர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக