மார்கழி 23, 2046 / 08.01.2016, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி
இடம்: மூட்டா அரங்கம், காக்காதோப்பு தெரு,
பெரியார் நிலையம் அருகில், மதுரை
தொடர்புக்கு: 8122184841
பெருவெள்ளமும் நீர் மேலாண்மையும் – கருத்தரங்கம்
மதுரை நகரில் அநேக நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. கூடுதலாக மூன்று
நாட்கள் கடும் மழை பெய்திருந்தால் மதுரை நகருக்குள் வெள்ளம் வந்திருக்கும்.
அதே சமயம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தும் நகரில் சில கண்மாய்கள் வறண்டு
கிடப்பதற்கு என்ன காரணம்? இந்த மழைக்காலங்களிலும் ‘தண்ணீருக்காகச் சாலை
மறியல் நடத்திய ஊர் மக்கள்’ என்று செய்தி தாள்களில் படிக்கமுடிந்தது. ஏன்
இந்தச் சீரற்ற நிலை? வெள்ளம் வந்து எல்லாவற்றையும் அரவணைத்து கொண்டு போன
பிறகுதான் அடையாறு, கூவம், கொற்றலை, ஆரணியாறு என்று சின்ன நிலப்பரப்பை
கொண்ட சென்னையில் இத்தனை ஆறுகள் இருந்த செய்தி வெளி உலகிற்குத் தெரிய
வந்தது. அப்படியானால் ஆலவாய் என்றழைக்கப்படும் மதுரையில் வைகை ஆறு
மட்டும்தான் உள்ளதா? அழியும் நிலையில் உள்ள மதுரை மாவட்ட ஆறுகள் என்னென்ன?
நிறைய தன்னார்வ குழுக்கள் நீர்நிலைகளிலும் வைகை ஆற்றுகுள்ளும் இறங்கி
நெகிழி(பிளாசுடிக்கு)க் குப்பைகளை, சீமை கருவேல மரங்களை அகற்றுகிறார்கள்.
நீர்நிலைகளை மீட்டெடுக்க இந்த முயற்சிகள் மட்டும் போதுமா? அண்மைய வெள்ளம்
நமக்குக் கற்று கொடுத்தது என்ன? இசுலாமிய அமைப்புகளும், முற்போக்கு
இயக்கங்களும், மக்கள் நல இயக்கங்களும் களமிறங்கி வெள்ளத்துயர் துடைப்புப்
பணிகளை முழு வீச்சில் செய்தார்கள். ஊடகங்கள் அவர்களின் மக்கள் பணியை
மறைத்ததற்குப் பின்னுள்ள அரசியல் என்ன? வெள்ளத்துயர் துடைப்புப் பணியில்
ஈடுபட்ட மக்கள் இயக்கங்களின், தோழர்களின் அனுபவம் என்ன ? பார்வை என்ன?
வாருங்கள் அறிந்து கொள்வோம்! இணைந்து செயல்படுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக