அரிக்கமேடு–ஓர் ஆவணம் : தாழி இதழியல் கருத்தரங்கம்
எமது நிறுவனத்தின் சார்பாக பல அரிய
வரலாற்று, கலை, மொழியியல், பண்பாட்டு மீட்டுருவாக்க முயற்சியில் தொடர்ந்து
எம்மை ஈடுபடுத்தி வருகின்றோம். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத் தூய
பேதுரு மேனிலைப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் கல்விச் சுற்றுலா, புதுவையில்
எமது நிறுவனம் சார்பாக நடைபெற்றது; புதுச்சேரி வரலாற்றில் “அரிக்கமேடு - ஓர்
ஆவணம்” என்ற தலைப்பில் புதுவை நகரில் அமைந்துள்ள தாழி இதழியல்
அலுவலகத்தில் கருத்தரங்க நிகழ்வும் நடைபெற்றது.
இந்தத் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கென
எமது நிறுவனத்தால் நடத்தப்படும் நான்காம் கருத்தரங்கம் இதுவாகும்.
நிகழ்வில் கருத்துரையாளராக உயர்திரு புலவர் வரலாற்றறிஞர் ந.வெங்கடேசன்
சிறப்புரை யாற்றினார். புதுச்சேரி வழக்கறிஞர் திருவாட்டி மரிய அன்ன தயாவதி
மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக