பதிவஞ்சல் – அஞ்சல் அட்டை ஒப்புகையுடன்
அனுப்புநர்
எசு.சபியுதீன்(செய்தியாளர்)
42 அ., .பட்டகால்தெரு,
திட்டச்சேரி-609 703.
நாகப்பட்டினம் மாவட்டம்
பேசி : 98425-22442
பெறுநர்
மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை-600 009.
பொருள்:
என்னையும் என்குடும்பத்தாரையும்
கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்-திட்டச்சேரி
பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன் (தி.மு.க)தலைமையில் அடையாளம் தெரியாத
40க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை அடித்து நொறுக்கியது – தொடர்பாக
ஐயா
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து
வருகின்றேன். என்னுடைய வருமானத்திற்கு வீட்டில் செடி வளர்ப்புத் தோட்டம்
வைத்துள்ளேன். இவற்றைத்தவிர பத்திரிக்கைச் செய்தியாளராகப் பணியாற்றி
வருகிறேன்.செய்தியாளராகப் பணியாற்றுவதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில்
நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளையும், சமூக விரோதிகள், சுற்றுச்சுழலைக்
கெடுக்கும் நிறுவனங்கள், கந்துவட்டி, ஊராட்சி மற்றும் பேரூராட்சியில்
நடைபெறும் ஊழல்கள் தொடர்பாகப் பத்திரிக்கைகளில் செய்தி அனுப்பி வருகிறேன்.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரு
வாரப்பத்திரிக்கையில்; திட்டச்சேரி சமாஅத்து தேர்தல் சனநாயக முறையில்
நடத்தவேண்டும் என்றும் மரக்கான்சாவடியில் வக்பு வாரியத்திற்குச் சொந்தமாக
உள்ள நிலத்தைப் போலி ஆவணம் தயார் செய்தும் நீண்ட காலக் குத்தகை
அடிப்படையில் ஆர்.டி.எசு.என்ற ரெடிமிக்சு நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளனர்
என்றும் நான்அனுப்பிய செய்திவந்தது.. அப்பகுதியில் உள்ள நிலங்களில் நெல்
பயிரிடல் நடைபெற்று வருகிறது. ஆர்.டி.எசு. நிறுவனம் மூலம் வருகின்ற
சல்லித்தூசிகளால் நெல் வேளாண்மை பாதிப்படைகிறது. மேலும் சல்லிதூசிகளால்
அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் பட்டு அதிகமான
விபத்துகள் ஏற்பட்டுள்ளன; பலர் உயிர் இழந்தும் உள்ளனர். ரெடிமிக்சு ஆலையின்
உரிமத்தை நிக்கி மீண்டும் அந்த நிலத்தை வக்பு வாரியத்திடம்
ஒப்படைக்கவேண்டும் என்றும் வக்பு வாரியம் மற்றும் தமிழக முதல்வர்
ஆகியோருக்கு மனு அனுப்பினேன்.
இதனால் கோபம் அடைந்த ரெடிமிக்சு நிறுவன
உரிமையாளர் தூண்டுதலின் பேரில் 17.5.2015 அன்று காலை 10.30 மணியளவில்
திட்டச்சேரி பேரூராட்சித்தலைவரான தி.மு.க.வைச்சேர்த இரவிச்சந்திரன், மன்ற
உறுப்பினர்கள் குமார், இராகவன், மேலும் 40 பேர் கொண்ட குழு அரிவாள், கத்தி,
கடப்பாரை, உருட்டுக்கட்டையுடன் வந்து என்னைக் கொலைசெய்யும் நோக்கில் என்
கழுத்தின் மீது இரவிச்சந்திரன் அரிவாளை வைத்து இனிமேல் என்னைப்பற்றி செய்தி
வெளியிட்டால் உன்னையும், உன் குடும்பத்தையும் கூண்டோடு கொலை
செய்துவிடுவேன் எனக்கூறி “வீட்டை அடித்து நொறுக்குங்கடா” எனக்கூறியபோது
அடையாளம் தெரியாத 40க்கும் மேற்பட்டோர் என்னுடைய வீட்டை அடித்து
நொறுக்கினார்கள். அதன் பின்னர் வீட்டையும், ‘காரையும்’ கொளுத்துங்கடா
எனக்கூறி அங்கிருந்த இருசக்கர வாகனம், மகிழுந்து ஆகியவற்றை அடித்து
நொறுக்கினார்கள். இதன் தொடர்பாக உடனடியாகத் திட்டச்சேரி காவல்நிலையத்திற்கு
அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றேன். ஆனால் யாரும் தொலைபேசியை
எடுக்கவில்லை. அதன்பின்னர் நாகப்பட்டினம் மாவட்டக் காவல்துறை
கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று 1.00 மணியளவில் புகார் மனுவை அளித்தேன்.
எனவே ஐயா அவர்கள் என்னையும், என் குடும்பத்தினரையும் கொலைசெய்யவேண்டும்
என்ற நோக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்கியதுடன் என்
சட்டைப்பையில் வைத்திருந்த 10,000 ரூபாய் பணத்தையும் எடுத்துச்சென்ற
திட்டச்சேரி தி.முக.வைச்சேர்ந்த பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன், மன்ற
உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் குமார், இராகவன் மற்றும் அடையாளம் தெரியாத 40
பேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்
கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிஇப்படிக்கு எசு.சபியுதீன்
நாள்:17.05.2015
இடம்:திட்டச்சேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக