தேவதானப்பட்டப் பகுதியில்
நீதிமன்றக்கட்டண வில்லையை
விற்பனை செய்யும் ஊழியர்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் அரசு
அலுவலகங்களுக்கு அனுப்பபடும் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்
கீழ் அனுப்பும் மனுக்கள் முதலானவற்றில் ஒட்டப்படும் நீதிமன்றக்கட்டண வில்லைகளை
எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள,
ஊராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் போன்ற வருவாய்த்துறை
அலுவலகங்களுக்கு மனுக்கள் செய்தால் 2 உரூபாய் மதிப்புள்ள நீதிமன்றக் கட்டண
அஞ்சல்தலையும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுக்கொடுத்தால் 10
உரூபாய்க்கான நீதிமன்றக் கட்டண அஞ்சல் தலையும் ஒட்டப்படவேண்டும்.
இவ்வாறு ஒட்டப்படுவதற்காக உள்ள கட்டண
வில்லைகளை அங்கு பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் மனுக்களில் ஒட்டப்பட்ட
வில்லைகளை எடுத்து மொத்தமாகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதனால் மனுக்கள் கொடுத்தவர்களுக்கு அதிகாரிகள் போதிய மனு பெறுவதற்குரிய
நீதிமன்றக் கட்டணவில்லை ஒட்டவில்லை எனக்கூறி மனுக்களைத் திருப்பி
அனுப்புகின்றனர். இதனால் மனுக்கள்மீது நடவடிக்கையும், உரிய நேரத்தில்
தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மறுமொழியும் மனுதாரர்களால்
பெறமுடியவில்லை.
எனவே மாவட்ட நிருவாகம் நீதிமன்றக் கட்டண
வில்லைகளை எடுத்து விற்பனை செய்யும் தற்காலிக ஊழியர்கள் மீது நடவடிக்கை
மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக