புதன், 20 மே, 2015

Address ‘domestic’ deceptions of geopolitical powers: Disapora Tamil activist

Address ‘domestic’ deceptions of geopolitical powers: Disapora Tamil activist

[TamilNet, Tuesday, 19 May 2015, 05:24 GMT]
“We should remember that it was primarily the geo-political injustice committed by regional and global powers that enabled the SL State to wage the unrelenting genocidal onslaught towards Mu'l'ivaaykkaal in 2009. The powers, pre-occupied with ‘unified’ Sri Lanka, were seeking to force through our throats, the concept of ‘internal self-determination’ to reject our only remedy of asserting our own sovereignty,” Lathan Suntharalingam, a Diaspora activist, who has championed the legal efforts in Europe after 2009, said in his address on Monday at Bern, Switzerland. “The next milestone in the post-2009 struggle is to mark the Mu'l'livaaykkaal Day as a universal day of remembrance of genocides and injustices committed against the nations without states by the regional and global geopolitical powers. This is key to safeguard them from continued ‘domestic’ and global crimes,” he said.
 



Lathan Suntharalingam was one of the key activists behind the legal move in Europe in forcing the abusive commander of the 57th Division of the occupying Sri Lankan military to retreat back to Colombo in 2011.

He was addressing the Eezham Tamil diaspora at the memorial event held at Bern.

In 2010, knowing well that Germany would not arrest the SL commander through a domestic process, the legal activists had challenged the Federal Republic of Germany with the European Courts of Human Rights (ECHR) for violating the ‘European Convention for the Protection of Human Rights and Fundamental Freedoms’ in accepting the Sri Lankan Major General Jegath Dias as deputy Counsel in Sri Lanka’s embassy in Germany.

Now, the new regime in Sri Lanka has awarded the wartime genocidal commander of 57 Division with the position of Sri Lanka Army's Chief of Staff. The geo-political players regard the SL military as a ‘Lascarine’ component needed for their ambitions in the island, be it Washington, Beijing or New Delhi.

Lathan Suntharalingam was also behind the move of challenging the ban on the LTTE by the European Union. The legal process exposed the British role in continuing the ban.

The activist told the masses at Bern that the strategic location of the island was the prime reason for the British decision to transfer the power to Sinhalese, ignoring the Tamil demands.

Noting the historical injustice meted out to the Eezham Tamils under the British colonialism and later under geo-political manipulations of the global and regional powers, Lathan Suntharalingam further highlighted how the mantra of 'Internal Self-Determination' was deployed by the powers to deceive the Tamils during the Norway-brokered peace negotiations. Norway sat silently like a mouse during the final onslaught in Vanni in 2009, he noted.

The United Nations had its hands-in-gloves in the crime against global humanity.

Mu'l'livaaykkaal became the theatre of experiment for the regional and global powers locked in their geopolitical gambling. One of the worst and sophisticated genocides of this century was carried out totally ignoring one of the most momentous protests staged by a diaspora in the world history during the genocidal slaughter, he reminded the Tamils in Switzerland.

While the USA was waiting till the last moment to intervene as a surrender-broker, the regional power, India, was hell-bent on finishing off everything to the end. “Only the waves of the sea at Mu'l'livaaykkaal know this truth,” Lathan said.

Like the argument of the so-called internal self-determination, the demand for international investigations is now being watered down into a domestic process by the same powers.

Rejecting defeatism prevailing among a section of Eezham Tamils, and the deceptive faith in the so-called good intentions of the powers among another section, the global Tamils need to focus on building ways to internationally address the external sovereignty dimensions of similarly affected nations and peoples fighting for their liberation. “Only then, we can effectively resist the deceptions,” he said.

Rransforming the Mu'l'livaaykaal Day into a universal day of remembrance of genocides and injustices committed against the nations-without-state by the regional and global geopolitical powers, should be one of the next milestone achievements in the path to liberation, he said.

Lathan Suntharalingam's address in Tamil follows:

ஈழத் தமிழர்களுக்கெதிரான இன அழிப்பு இலங்கை அரசாலும் அதில் மாறி மாறி வரும் அரசாங்கங்களாலும், ஆக்கிரமிப்பு இராணுவத்தினாலும் மட்டும் செய்து முடிக்கப்பட்ட ஒரு விடயம் அல்ல என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவில் இருத்தவேண்டும்.

இலங்கைத் தீவில் ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையும் ஈழத்தமிழர்களின் தேசத்தின் தனித்துவமான இறைமையும் பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் இருந்து, எமது தமிழ்த் தலைவர்கள் அந்தக் காலத்தில் ஒன்றிணைந்த இலங்கைத் தீவில் பல தேசங்களாக ஒரு நாட்டிற்குள் இருப்பதற்கு ஏதுவான ஒரு அரசியல் தீர்வை, சுவிற்சர்லாந்தில் இருக்கும் சமஸ்டி முறைபோலவோ, அல்லது ஐம்பதுக்கு ஐம்பது என்ற விதத்திலோ கேட்டபோதெல்லாம், அதை மறுத்தது அப்போதைய சிங்கள தேசம் மட்டும் அல்ல.

தென்னாசியாவின் தமிழர் கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் இலங்கைத் தீவு அமைந்திருக்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான விடுதலை உணர்வுடன் இலங்கைத் தீவின் மக்களும் தூண்டப்பட்டுச் சிந்திப்பார்களேயானால், இலங்கைத் தீவை தாங்கள் இழக்க நேரிடும் என்று உலக மகாயுத்தத்தின் பிரித்தானிய இராணுவத் தலைமை அன்று முடிவுகட்டியது. இதற்கான எழுத்து ரீதியான ஆதாரம் எம்மிடம் மிகத் தெளிவாகவே இருக்கிறது.

அதிலும், குறிப்பாக, இலங்கைத் தீவில் இருக்கும் தமிழர்களின் கைகளில் அதிகாரம் சென்றுவிடாமல் அதைத் தமக்குச் சாதகமான கரையோரச் சிங்களவர்களிடம் கையளிப்பதே பொருத்தம் என்பதே அன்றைய பிரித்தானிய காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தின் ஏகமனதான முடிவாக இருந்தது. இந்த முடிவை நியாயப்படுத்துவதற்காக, பிரித்தானிய வெஸ்ட்மின்ஸ்டர் முறையே உலகத்தின் முற்போக்கான வடிவம் என்றும் சுவிற்சர்லாந்தின் சமஸ்டி வடிவத்தை இலங்கைக்கு மகத்தானதாகக் கொள்ளக்கூடாதென்றும் பிரித்தானிய காலனித்துவ செயலகம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த அடிப்படையிலேயே டி.எஸ் சேனநாயக்காவிடம் ஒற்றையாட்சி வடிவத்தில் அன்றைய சிலோன் தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டது.

இது நடந்தேறியது பிரித்தானியாவின் பூகோள அரசியலின் கேந்திர முக்கியத்துவம் கருதியே.

இதற்குச் சவாலாகவே ஐம்பதுக்கு ஐம்பது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதையும் கேலிக்குரியதாக பிரித்தானிய காலனித்துவம் ஒதுக்கிப் புறந்தள்ளியது.

இதைப்போலவே தொடர்ந்தும், ஈழத்தமிழர்களின் இறைமை நோக்கிய போராட்டம், பூகோள கேந்திர அமைவிடத்தை மையப்படுத்திய ஒன்றிணைந்த இலங்கைத்தீவாக தமது கைக்குள் இருக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக, போட்டியிட்ட வல்லாதிக்க சக்திகள் அனைத்தினாலும் நிராகரிக்கப்பட்டுவந்தது.

இதை எதிர்கொள்ள தமிழீழம் தனது விடுதலைக்கான ஒப்பற்ற ஒரு தலைவனை, தேசியத்தலைவர் வே. பிரபாகரனாக உருவாக்கிக்கொண்டது.

ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவர் என்பதற்கும் அப்பால், ஈழத்தமிழர் மீதான இன அழிப்பைத் தடுத்து நிறுத்தி, தமிழ்த் தேசத்தின் இறைமையைக் காத்து, சர்வதேச சக்திகளிடம் ஈழத் தமிழர்களுடைய இறைமையை மாத்திரமல்ல, சிங்கள தேசத்தின் இறைமையைக் கூட பலிக்கடா ஆக்காத ஒரு நிலையில் அந்தத் தலைவரின் போராட்டம் ஈழப் போர் என்று கட்டம் கட்டமாக உலகமே வரையறுக்கும் பாணியில் அமைந்திருந்தது.

இதையும் அழித்தொழித்துவிடவேண்டும் என்று விழைந்த சர்வதேச நாடுகள் கூட இராணுவ வழியில் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தால் அழிப்பது முடியாத காரியம் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டன. அப்போது தான் தமிழர்கள் மீது இந்த நூற்றாண்டின் முதலாவது இன அழிப்புப்போர் ஒன்றை நடாத்தி முடிப்பதை ஒரே ஒரு வழியாக சிங்கள தேசத்தின் இராணுவத் தலைமை கருதியது.

ஆனால், பிராந்திய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் தமிழர் கடலின் பூகோள கேந்திர முக்கியத்துவத்தில் இலங்கைத் தீவு அமைந்திருப்பதால், தமிழர்களை ஏதோ ஒரு வழியில் சிங்களர்களோடு முரண்படாத ஒரு ஒன்றிணைந்த நீரோட்டத்தில் நீச்சலடிக்க வைப்பதற்கு – அதாவது எமது மொழியில் கூறுவதானால் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலில் தத்தளிக்க வைப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த — சர்வதேச சக்திகள் வேறுவிதமாகச் சிந்தித்தன.

ஒரு புறம் இன அழிப்புப் பரிசோதனையை, இலங்கை அரசையும் அதன் இராணுவத்தையும் செய்வதற்கு ஏவி விட்டுவிட்டு, அதற்குத் தேவையான முறையில் ஐ.நா.வின் செயற்பாட்டை மட்டுப்படுத்தி, பேச்சுவார்த்தைக்கு வந்த நோர்வேயை எலி போல மௌனம் காக்கவைத்து, உலக வரலாறு கண்டிராத புலம் பெயர் மக்களின் ஜனநாயகப் போராட்டத்தை கண்டும் காணாதது போல ஒதுக்கிவிட்டு, ஒரு மாபெரும் மானிடத்திற்கெதிரான பரிசோதனைக்கூடமாக முள்ளிவாய்க்காலை மாற்றினார்கள்.

இதன் முடிவில், தமிழர்களின் போராட்டத்தலைவர்களையும் எஞ்சியிருக்க்கூடிய தளபதிகளில் சிலரையும் கப்பலில் ஏற்றிவந்து சிங்கள தேசத்திடம் கையளித்துவிட்டு, சிறைக்குள் இருக்கும் புலிகளுடனும் சிங்கள அரசுடனும் தென்னாபிரிக்கப் பாணியிலான ஒரு அரசியல் நீரோட்டப் பேச்சுவார்த்தையை நடாத்துவதன் மூலம் தமிழர்களின் ஆபத்பாந்த நண்பனாக ஒரு புறமும், சிங்கள தேசத்தின் பூகோள நண்பனாக மறுபுறமும் செயற்பட்டு, தமது பூகோள நலனை அடைந்துவிடலாம் என்று ஒரு உலக வல்லாதிக்கம் நப்பாசை கொண்டிருந்தது.

அதேவேளை, இந்தக் காரியம் கூட நடந்துவிடக்கூடாது என்று பிராந்திய வல்லரசு ஒன்று கங்கணம்கட்டியிருந்தது. இதற்கு முள்ளிவாய்க்காலின் கடல் அலைகளே சாட்சியம்.

உலகெங்கும் வாழும் தமிழர்களே, முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இன அழிப்புப் படலத்தின் அடுத்த கட்டத்தை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்வது எப்படி என்ற கேள்விக்கு, மூன்று வழிமுறைகளை வேறு வேறுபட்ட தரப்பினர் முன்வைத்திருக்கிறார்கள்.

ஒரு தரப்பு, தோல்வி மனநிலைக்கு உள்ளாகி, இனிமேலாவது சிறிலங்காவின் அரசியல் நீரோட்டத்தில் கலந்து, தத்தளித்துத் தத்தளித்து, இரங்கி இரங்கி, பிச்சையாகவாவது சில உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதை ‘இரங்கும் இறங்கும்’ அணுகுமுறை என்று நான் அடையாளப்படுத்துகிறேன். இது பிழையான வழி என்பதே எனது நிலைப்பாடு. இதைக் காத்திருப்பு அரசியல் என்று நான் அடையாளம் காணவில்லை. பிச்சை அரசியலாகவே அடையாளம் காண்கிறேன்.

பிச்சை எடுப்பவர்களைத் தயவு செய்து பிச்சை எடுக்க விட்டுவிடுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள். ஆனால், தெளிவாக இருங்கள், இவர்களைத் தலைமைப் பதவிகளில் மட்டும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வைத்திருக்காதீர்கள்.

இன்னொரு தரப்பு, இலவு காத்த கிளிகள் போல, சர்வதேச சக்திகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமக்கிருக்கும் எம் குறித்தான தேவை கருதி எமக்கு நியாயம் வழங்கிவிடும் என்றும், ஏதோ ஒரு சர்வதேச பூகோளப் போட்டியில் இருக்கும் ஒரு தரப்பு எம்மிடம் தனது தேவை கருதி வந்து விடும் என்றும், இலவு காத்த கிளிகளாக எமது மக்களுக்குப் போலி நம்பிக்கையை ஊட்டிக்கொண்டே இருக்கும்.

அமெரிக்காவில் கதவு திறந்துவிடும் என்று ஒரு வகையும், புது தில்லியில் வாசல் திறந்துவிடும் என்று இன்னொரு வகையும், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியில் காரியம் சாதிக்கும் நிலை எமக்கு உருவாகிவிடும் என்ற கருதும் பிறிதொரு வகையும், இலவு பார்த்த கிளிகளாக எமது மக்களை வைத்திருக்கும்.

பிச்சைக்காரர்களாகவும், மதில்மேல் பூனைகளாகவும், இலவு காத்த கிளிகளாகவும் இருப்பவர்கள் எல்லோரும் எலிகளுக்கான ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்டுக்கொண்டிருப்பார்கள்.

இந்தப் போட்டியில் பிச்சைக்காரர்களை விட இலவு காத்த கிளிகள் மேலானவர்களாக இருக்கலாம்.

ஓடுகின்ற எலிகளில் நல்ல எலிக்கு வேண்டுமானால் வருடிக்கொடுங்கள். ஆனால், புலி எலியாக முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

இந்த இரண்டு தரப்பையும் விட, மூன்றாவது தரப்பு ஒன்று இருக்கிறது. அது தான் இலக்கை நோக்கிய தரப்பு. இந்த இலக்கை நோக்கிய தரப்பு பூகோள கேந்திர முக்கியத்துவம் குறித்த போட்டியில், தமிழர் வாளாவிருக்கும் வரை எவரும் இறங்கி வரப்போவதில்லை என்பதை உணர்ந்த தரப்பாகும்.

நாம் எமது கருத்தில் கூரிய வாளாக இருந்தால் மட்டுமே, அதாவது மாறிவரும் உலக ஓட்டத்தில், உலகளாவிய விடுதலைச் சக்திகளை ஒன்றிணைக்கும் போராட்டச் சக்தியாக, வல்லரசுகளின் ஆதிக்கநலன்களை சுட்டிக் காட்டி கேள்வி எழுப்புபவர்களாக இருந்தால் மட்டுமே, இலக்கை நோக்கி நாங்கள் நகர முடியும்.

ஜேர்மனிக்கும், சுவிற்சர்லாந்துக்கும் சிறிலங்காவின் துணைத் தூதுவராக இன அழிப்புப் போரின் 57ம் பிரிவுச் சிறிலங்காப் படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸை சிறிலங்கா அரசு அனுப்பியது உங்களுக்கு நினைவிருக்கும்.

சட்ட ரீதியாக நாங்கள் போராடினோம். விளைவாக, அவரை ராஜபக்சவின் 'சிறிலங்கா' வாபஸ் வாங்கியது. ஆனால், இப்போது சிறிசேனாவினதும், ரணில் மற்றும் சந்திரிக்காவினதும் 'சிறிலங்கா' அரசு அவரை அதி உயர் இராணுவப் பதவியில் இருத்தியிருக்கிறது.

நாங்கள் செய்த சட்ட நடவடிக்கை தார்மீக எதிர்ப்பைக் காட்டுவதற்கும் புலம் பெயர் சமுகத்தைப் பாதுகாப்பதற்குமே பயன்பட்டது. அதேவேளை சர்வதேச சக்திகள் எந்த வகையில் சிறிலங்கா அரசை பாதுகாத்து வருகிறது என்பதையும் அம்பலப்படுத்தியது.

அதே போலத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய தடைக்கு எதிரான வழக்கிலும், பிழையான முறையில் தமது தேவைக்காக தடையைப் போட்டார்கள் என்பதை நிறுவியிருக்கிறோம். மீண்டும் தடை போடுவதற்கும், நீடிப்பதற்கும் எந்த நாடுகள், எந்தச் சக்திகள் முன் நிற்கிறார்கள் என்பதையும் அடையாளப்படுத்தியிருக்கிறோம்.

தடைமீது சவால் எழுப்பப்படவில்லையானால், இந்தத் தடை உண்மையில் யாருக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் நிறுவியிருக்க முடியாது. இதை எமது மக்கள் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளவேண்டும்.

இன்று ‘சர்வதேச விசாரணை’ என்ற மாயமானை எங்கள் மக்களுக்குக் காட்டிய சக்திகள் எல்லாம், ‘இலங்கைக்குள் விசாரணை’ என்று கூறுகிறார்கள். அதற்குள் ‘சர்வதேச நியமங்களை’ உறுதிப்படுத்துவோம் என்று கூறி, அதையே சர்வதேச விசாரணையாக இப்போது காட்டமுயற்சிக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச மட்டத்திலான பேச்சுவார்த்தையில் தான் தாங்கள் பங்குபற்றுவோம் என்று சொன்னபோது, ராஜபக்ச அரசாங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இருந்து பேசலாம் அதை 'சிறிலங்கா'வின் இறைமைக்கு உட்படாத ஒரு சர்வதேச வெளியாக நாங்கள் கருதலாம் என்று பூச்சாண்டி காட்ட முற்பட்டது போலத்தான், இந்த சர்வதேச நியமத்தில் அமைந்த, உள்ளக விசாரணை என்பதும், ஹைப்றிட் கோட்ஸ் (Hybrid Courts) என்று பெற்றோலிலும் மின்சாரத்திலும் ஓடும் ஹைப்றிட் கார் போல, உள்ளூர் நீதிமன்றில் சர்வதேச நீதி முறையை ஒரு கட்டமைப்பாக்கி விசாரிப்போம் என்பதும் போலியானதாகவும் அமைகிறது.

நான் குறிப்பிட்ட போராடும் தரப்பு, ஒரு அலைவரிசையைப் போன்றது. இந்த அலைவரிசையில் சரியான நிலைப்பாடு கொண்டவர்கள் இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களிடம் ஒரு இலக்கு நோக்கிய பாதைக்கான வழிமுறைகள் இருக்கின்றன. இந்தத் தரப்பைப் பார்த்து, பிச்சை எடுக்கும் தரப்பும், இலவு காக்கும் கிளிகளும் ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.

அது என்ன கேள்வி தெரியுமா?

'அது சரி, உங்களிடம் ஒரு ரோட் மப் (Road Map) இருக்கிறதா?'

அந்தக் கேள்வி, கேள்வியாகவே இருக்கட்டும்.

ஆனால், அந்தப் பாதையில் அடுத்த மைல் கற்களில் ஒன்று என்ன என்பதை மட்டும் நான் இங்கு கூற விரும்புகிறேன்.

உள்ளக சுயநிர்ணயம் என்றும் உள்ளக விசாரணை என்றும் எம்மை ஏய்த்துத் தத்தளிக்க வைக்கும் ‘உள்ளக’ நீரோட்டத்தில் நீச்சலடிக்காமால் எமது தேசிய இனம் தன்னை நிறுவிக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக இந்த முள்ளிவாய்க்கால் நாளை நாம் எப்படி நினைவு கூருகிறோம் என்பதன் ஊடாகக் கூட அதை நாம் மாற்றியமைக்கமுடியும்.

தமிழரின் வரலாற்றில் மட்டும் அல்ல, விடுதலைக்காகப் போராடும் சகல தேசங்களையும், குறிப்பாக பூகோள அமைவிடத்தின் கேந்திர முக்கியத்துவத்தால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விடுதலைப் போராட்டங்களையும், இன அழிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து, இந்த நாளை உலக வல்லாதிக்க சக்திகளின் பூகோள அரசியலின் அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் இன அழிப்பு நாளாக உலகளாவிய மட்டத்தில் பிரகடனப்படுத்தவேண்டும்.

அடுத்த கட்டமாக இதைச் சாதிக்குமாறு உலகத் தமிழர்களிடம் இந்த நாளில் அழைப்பு விடுக்கிறேன்.

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Related Articles:
17.05.15   New mantra of ‘hybrid courts’ in the game of geo-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக